நீங்கள் கருப்பு கயிறு கட்டு பழக்கம் உள்ளவர்களா? அப்படியானால் பண வரவிற்கு கருப்பு கயிறை இப்படி கட்டியிருக்கிறீர்களா! என்று மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள்.

Black Thread _ Tamil
- Advertisement -

கருப்பு கயிறு கட்டுவது என்பது இன்று நேற்று வந்த பழக்கம் அல்ல. நம் முன்னோர்கள் காலம் தொட்டே கடைப்பிடிக்கப் பட்ட ஒரு பழக்கம் தான். பிறந்த குழந்தைகள் முதற் கொண்டு பெரியவர்கள் வரை இந்த கருப்பு கயிறு கட்டி இருப்பார்கள். இந்த கருப்பு கயிறு நம் உடம்பில் இருக்கும் போது திருஷ்டி நம்மை நெருங்காது என்ற நம்பிக்கை உண்டு. பொதுவாக இடுப்பில் அரைஞான் கயிறாக தான் இதை கட்டி விடுவார்கள். இது கெட்ட சக்தியிடம் இருந்து நம்மை காக்கும் அரணாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் தான், இடுப்பில் கட்டப்படும் அந்த கயிருக்கு அரைஞான் கயிறு என்ற பெயரும் வந்தது. இப்போது அந்த கருப்பு கயிறை நாம் எப்படி கட்டினால் எந்தெந்த பிரச்சனைகளை சரி செய்து கொள்ள முடியும் என்பதை இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கருப்பு கயிறு கட்டும் முறை
முதலில் கருப்பு கயிற்றை யார் யார் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம். இந்த கருப்பு கயிறை ஆண்கள் வலது கை, வலது காலிலும் பெண்கள் இடது கை, இடது காலிலும் தான் கட்ட வேண்டும். இந்த கருப்பு கயிறை யார் எந்த காரணத்திற்காக கட்டினாலும் அதை கட்டும் முன்பு ஒரு நாள் முழுவதும் அனுமன் சன்னதியில் வைத்து பூஜை செய்த பிறகு தான் கட்ட வேண்டும். பூஜையில் அந்த கயிறு இருக்கும் வேளையில் ஒரு நேரமாவது அனுமன் சாலீசா படிக்க வேண்டும். அதன் பிறகு தான் இதை பயன்படுத்த வேண்டும். இது தான் கயிறு கட்டும் முறை. அதே போல் இந்த கருப்பு கயிறு எந்த பிரச்சனைகளுக்கு எப்படி கட்ட வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

இந்தக் கருப்பு கயிறை கைகளில் கட்டும் போது நமக்கு பண வரவானது அதிகரித்து கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் உடல் நிலை முடியாதவர்கள் அதிக நாள் நோய் வாய்ப்பட்டவர்கள் அல்லது தொடர்ந்து விபத்து போன்றவற்றை சந்தித்துக் கொண்டு இருப்பவர்கள், இந்த கயிறை கால்களில் கட்டும் போது மேற்கூறிய தொல்லைகளின் தாக்கத்திலிருந்து காத்துக் கொள்ளலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த கருப்பு கயிறு ஆனது நம் காலில் இருக்கும் போது நம் உடம்பில் இருக்கும் நோய்கள் விரைவில் தீரும் என்றும், இந்த கருப்பு கயிறு கண் திருஷ்டி, தீ சக்திகள் இருந்து நம்மை காக்கும் என்பதினால் தான் நம் முன்னோர்கள் இந்த பழக்கைத்தை பின்பற்றி வந்தார்கள்.

- Advertisement -

நம்மை காத்துக் கொள்ள எப்படி கட்ட வேண்டும் என்பதையும் பார்த்துக் கொள்வோம் அதற்கு ஒரு நீளமான கருப்பு கயிறு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒன்பது முடிச்சுகள் போட வேண்டும். ஒன்பது முடிச்சுகள் போட்ட இந்த கயிறை ஒரு நாள் முழுவதும் அனுமன் பாதத்தில் வைத்த பிறகு எடுத்து நம் கைகளில் கட்டிக் கொள்ள வேண்டும். இதனால் தீய சக்தி, கண் திருஷ்டி வேண்டாதவர்களின் செயல்கள் இவற்றிலிருந்து நம்மை காத்துக் கொள்வதோடு, இந்த கயிறு நம் கைகளில் இருக்கும் போது நமக்கு வீண்விரயத்தை தடுத்து பண வரவை அதிக படுத்தி தரும் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: பெண்கள் இந்த தவறை செய்யாமல் இருந்தாலே புடவை, நகை சேரும் வாய்ப்பு பல மடங்கு பெருகுவதோடு, வீட்டில் இருக்கும் நகையும் அடமானத்திற்கு செல்லாமல் இருக்கும்.

வீட்டிற்கு காண திருஷ்டியை போக்கவும் இந்த கருப்பு கயிறை பயன்படுத்தலாம். அதற்கு மேற்கூறியவாறு ஒன்பது முடிச்சு போட்ட கயிறை, ஒரு நாள் முழுவதும் அனுமன் சன்னதியில் வைத்து வணங்கிய பிறகு அதை உங்கள் வீட்டு நிலை வாசலில் கட்டி விடலாம். இதனால் வீட்டிற்குள் இருக்கும் கெட்ட சக்திகள், வெளியிலிருந்து மேற்கொண்டு எந்த கெட்ட சக்திகளும் நம்மை தாக்காமலும் இந்த கருப்பு கயிறு ஆனது காக்கும்.

- Advertisement -