இதெல்லாம் நமக்கு நடந்தால் கண் திருஷ்டி இருக்கிறது என்பது அர்த்தமா? நம்மிடம் இருக்கும் கண் திருஷ்டியை போக்கும் எளிய முன்னோர் வழிபாடுகள் என்ன?

kan-thirusti-images
- Advertisement -

சொற்கள் தான் எண்ணங்களைத் தீர்மானிக்கின்றன. அந்த எண்ணங்கள் செயல் வடிவமாக மாறுகின்றன. அதே போல தான் நம்மை பார்த்து ஒருவர் அறிந்தோ, அறியாமலோ கூறும் வார்த்தைகள் கூட சில அதிர்வலைகளை உண்டு பண்ணுகின்றன. உதாரணத்திற்கு யாராவது நம்மைப் பார்த்து, ‘நாசமாகப் போ’ என்று கூறினால் உடனே நாம் நாசமாக போவது கிடையாது. ஆனால் அந்த வார்த்தைகள் மனதை ஆட்கொண்டு ஏதோ ஒரு விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதை நீங்கள் பலமுறை, பல இடங்களில், பல்வேறு விஷயங்களுக்காக உணர்ந்து இருக்கலாம்.

thirusti

இந்த அதிர்வலைகளை உண்டு பண்ணுகின்ற சொற்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தான் நாம் ‘கண் திருஷ்டி’ என்கிறோம். கண் திருஷ்டி, பொறாமை பார்வை போன்ற எதிர்மறை சக்திகள் அல்லது ஆற்றல்கள் நம்மிடம் இருக்கிறதா? இல்லையா? என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்ன? அதிலிருந்து விடுபடும் எளிய பரிகாரம் தான் என்ன? என்பதை அறிய தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

- Advertisement -

பொதுவாக கண் திருஷ்டி நமக்கு இருக்கிறது என்றால் நாம் என்ன தான் உற்சாகமாக இருந்தாலும், ஆரோக்கியமாக இருந்தாலும் சில சமயங்களில் அடிக்கடி நம்மையும் அறியாமல் அசதியாக தோன்றும். நீங்கள் உடற்பயிற்சி மேற்கொண்டால் கூட உடம்பில் தெம்பு இல்லாதது போல் சில சமயங்களில் சோர்வுடன் காணப்படுவீர்கள். இது போல காரணமே இல்லாமல் சோர்வு உண்டாவது, கண்களில் எரிச்சல் உண்டாவது, அடிக்கடி கால்களில் அடிபடுவது போன்ற அறிகுறிகள் இருந்தால் நம்மிடம் திருஷ்டி இருக்கிறது என்று உணர்ந்து கொள்ளலாம்.

Thirusti

மேலும் அது போல குடும்பத்தில் தேவையே இல்லாமல் அனாவசிய செலவுகள் ஒன்றன் பின் ஒன்றாக வருவது, சம்பந்தமே இல்லாமல் ஒருவர் மீது இன்னொருவர் கோபப்படுவது போன்ற விஷயங்களை தொடர்ந்து சந்திக்கும் பொழுது அந்த இடத்தில் திருஷ்டிக்கான அறிகுறிகள் தென்படும். இவை எல்லாமே நம்மிடம் திருஷ்டி தோஷம் இருக்கிறது என்பதை உணர்த்துவது குறிப்பிடத்தக்கது எனவே இது போன்ற அறிகுறிகள் இருந்தால் நாம் அந்த தோஷத்தை எளிதாக நீக்க திருஷ்டி சுத்தி போட்டாலே போதும்.

- Advertisement -

நம் முன்னோர்கள் எல்லாம் திருஷ்டி தோஷம் நீங்க வாரம் ஒருமுறை ஞாயிற்றுக் கிழமைகளில் வீட்டில் இருக்கும் அனைவரையும் உட்கார வைத்து உப்பு, மிளகாய், கடுகு வைத்து சுற்றிப் போடுவது, எலுமிச்சை பழத்தை சுற்றிப் போடுவது போன்ற விஷயங்களை எல்லாம் செய்வார்கள். நாம் தங்கி இருக்கும் வீட்டின் ஓலை கூரையை பிய்த்து கைகளில் வைத்துக் கொண்டு திருஷ்டி சுத்தி போடுவார்கள், துடைப்பத்தை உடைத்து திருஷ்டி சுத்தி போடுவார்கள். இப்படி பல விஷயங்கள் மூலம் இந்த திருஷ்டி தோஷங்கள் நீங்கும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை.

katralai

மேலும் இவ்வகையில் திருஷ்டிக்காகவே வாஸ்து மீன் வளர்ப்பது, வாஸ்து செடிகள் வளர்ப்பது கூட செய்வது உண்டு. குறிப்பாக கற்றாழை, துளசி, வன்னி, வில்வம், தொட்டாசினிங்கி ஆகிய செடிகள் வீட்டில் இருப்பது திருஷ்டி தோஷத்தை நீக்கும். இந்தச் செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் எத்தகைய திருஷ்டி தோஷங்களும் உங்களை அணுகாது என்கிற நம்பிக்கையும் உண்டு. மேலும் வீட்டில் நுழைவாயில் பகுதியில் படிகாரம், கம்பளி கயிறு, பச்சை மிளகாய், எலுமிச்சை பழம், தேங்காய் போன்றவற்றை கூட கட்டி தொங்க விடுவது உண்டு.

sarabeswarar 1

இதையெல்லாம் செய்யும் பொழுது நம்மை அறியாமலேயே நமக்கு நம்மை பீடித்திருக்கும் திருஷ்டிகள் விலகுவதாக நம்பிக்கை ஏற்படும். இவ்வாறாக நாம் என்ன நினைக்கிறோமோ, அது தான் நமக்கு நடக்கிறது. நமக்கு ஒன்றும் இல்லை என்று நினைத்தால் நமக்கு ஒன்றும் இல்லை தான். அது போல திருஷ்டி தோஷம் நீக்கக் கூடிய சக்தி பெற்ற அகோரமூர்த்தி, பிரத்தியங்கரா தேவி, சரபர், கண் திருஷ்டி கணபதி போன்ற தெய்வங்களையும் வணங்குவது கூடுதல் பலன்களை கொடுக்கும்.

- Advertisement -