மங்களங்கள் உண்டாக மஞ்சள் பிள்ளையார்

manjal pillaiyar
- Advertisement -

வீட்டில் நடக்கக்கூடிய அனைத்து விதமான சுப நிகழ்ச்சிகளையும் நாம் மங்களகரமான காரியங்கள் என்றுதான் கூறுகிறோம். ஏனென்றால் அனைத்து சுப நிகழ்ச்சிகளும் நடைபெறுவதற்கு நமக்கு குருவின் அருள் தேவைப்படுகிறது. குருவை மங்களகாரகன் என்று கூறுகிறோம். அதனால் தான் சுப நிகழ்ச்சிகள் அனைத்தையும் மங்களகரமான காரியங்கள் என்று கூறுகிறோம். இப்படி குருவின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கு விநாயகரை எப்படி வீட்டில் வைத்து வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுவார்கள். அதே போல் ஒருவருக்கு திருமணம் செய்யப் போகிறோம் என்றால் அவர் ஜாதகத்தில் குருவின் பலம் இருக்கிறதா என்றும் பார்ப்பார்கள். அப்படி அவர் சாதகமான பலனில் இருந்தால்தான் திருமணம் நடைபெறும். திருமண மட்டுமல்ல நம் வீட்டில் எந்த ஒரு சுப நிகழ்ச்சி நடப்பதாக இருந்தாலும் அதற்கு குருவின் அருள் பரிபூரணமாக தேவைப்படும். அப்படிப்பட்ட குருவின் அருளை பரிபூரணமாக பெறுவது எப்படி என்று பார்ப்போம்.

- Advertisement -

பொதுவாகவே அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் முதலில் பிள்ளையாரை பிடித்து வைத்து வழிபட்டுவிட்டு பிறகு தான் செய்ய ஆரம்பிப்பார்கள். அதேபோல் தான் குருவின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கு வியாழக்கிழமை அன்று மஞ்சளில் விநாயகரை பிடித்து வைத்து அவருக்கு குங்கும பொட்டு இட்டு அருகம்புல்லை வைத்து வழிபட வேண்டும். மஞ்சளில் பிள்ளையாரை பிடிக்கும் பொழுது சுத்தமான மஞ்சள் பயன்படுத்த வேண்டும். மேலும் அதில் சிறிது ஜவ்வாது, பொடியாக நுணுக்கிய பச்சை கற்பூரத்தையும் சேர்த்து பன்னீர் ஊற்றி பிணைந்து பிடிக்க வேண்டும்.

இவ்வாறு விநாயகரை பிடித்து வைக்கும் பொழுது வெற்றிலையை வைத்து அதற்கு மேல் விநாயகரை வைக்க வேண்டும். இப்படி வியாழக்கிழமை குரு ஹோரையில் நாம் விநாயகரை மஞ்சளில் பிடித்து வைத்து வழிபடுவதன் மூலம் நம் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகும். இந்த மஞ்சளை வீட்டில் இருக்கக்கூடிய சுமங்கலி பெண்கள் பூசிக் குளிப்பதன் மூலம் அவர்கள் நித்திய சுமங்கலியாக இருப்பார்கள்.

- Advertisement -

அப்படி மஞ்சள் பூசி குளிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் மூன்று நாட்கள் கழித்து அதாவது ஞாயிற்றுக்கிழமை அன்று காலையில் எப்போதும் போல் வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்த பிறகு இந்த மஞ்சளை எடுத்து சிறிது தண்ணீர் ஊற்றி குழைத்து நம் வீட்டு நிலை வாசலில் பூசி குங்குமப்பொட்டு வைக்க வேண்டும். இவ்வாறு வைக்கும் பொழுது கண்டிப்பான முறையில் நிலை வாசலின் கீழ் வைக்க கூடாது. அவர் எப்பொழுதும் நமக்கு மேல்தான் இருக்க வேண்டும் என்பதாலும் நிலை வாசலின் மேலே மஞ்சளை தடவி குங்குமம் வைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட குலதெய்வ தீபம்

மிகவும் எளிமையான முறையில் இந்த விநாயகர் வழிபாட்டை நாமும் நம் இல்லங்களில் செய்து மங்களகரமான நிகழ்ச்சிகளை நடைபெறச் செய்வோம்.

- Advertisement -