கொத்து கொத்தாக பூக்கள் பூத்து தள்ள கனகாம்பரம் செடியை ஈசியாக வளர்ப்பது எப்படி? பூக்காத செடியும் பூக்க பார்க்க வேண்டிய வைத்தியம் என்ன?

kanakamparam-poo
- Advertisement -

கனகாம்பரம் செடி பெரும்பாலும் ரொம்ப சுலபமாக எல்லோருடைய வீட்டிலும் வளரக் கூடியதாக இருக்கிறது. ஏராளமான வகைகளை கொண்டுள்ள இந்த கனகாம்பரம் செடி சாதாரண தோட்ட மண்ணிலேயே நன்கு செழித்து வளரக்கூடியது. வெயில் காலத்தில் சூப்பராக பிரஷ்ஷாக பூக்கக் கூடிய இந்த கனகாம்பரம் செடியில் ஏராளமான நுண் பூச்சிகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. இதில் வரக் கூடிய பிரச்சினைகளும், அதை தடுக்கும் முறையும் என்ன? இதில் கொத்து கொத்தாக பூக்க என்ன செய்வது? என்பதைத் தான் இந்த தோட்ட குறிப்பு பகுதியில் மூலம் இனி தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

நமக்கு முந்தைய காலம் வரை இந்த கனகாம்பரம் பூக்களுக்கு பெரும் மவுசு இருந்து வந்தது. மல்லிப்பூவுடன் கொஞ்சம் கனகாம்பரத்தையும் சேர்த்து தலையில் வைத்தால் வெள்ளையுடன் ஆரஞ்சுமாக பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும். ஆனால் இப்பொழுது கனகாம்பரம் வைப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகத் தான் இருக்கிறது.

- Advertisement -

வாசனை மிகுந்த பூக்களை தலையில் சூடும் பொழுது சிலருக்கு தலைவலி வருவது உண்டு. ஆனால் கனகாம்பரம் செடி அந்த அளவிற்கு வாசனையை கொடுப்பதில்லை. பார்ப்பதற்கு ரொம்பவே அழகாக இருக்கக்கூடிய இந்த பூவை எவ்வளவு வேண்டுமானாலும் சூடிக் கொள்ளலாம். எடையும் குறைவாகத் தான் இருக்கும். மள மளவென பூத்து தள்ளக் கூடிய இந்த செடியில் இலை சுருட்டல் நோய், வேர் அழுகல் நோய் போன்றவை தாக்குவதற்கு வாய்ப்புகள் உண்டு.

அது மட்டும் அல்லாமல் கனகாம்பரம் செடியில் பூச்சி தொந்தரவுகள் அதிகம் வருவதற்கும் வாய்ப்பு உண்டு. இந்த பிரச்சினைகளில் இருந்து எளிதாக இந்த செடியை பாதுகாக்க, கொஞ்சம் வேப்ப எண்ணையை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவிற்கு வேப்ப எண்ணெய் சேர்த்து அதனுடன் ரெண்டு சொட்டு ஷாம்பூ கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். இதை வேர் பதிந்துள்ள மண் முதல் செடிகள் முழுவதுமே ஸ்பிரே செய்து வந்தால் எந்த விதமான பூச்சி தாக்குதலும் இல்லாமல் செடி பாதுகாப்பாக வளரும்.

- Advertisement -

மேலும் கனகாம்பரம் செடியில் அதிக அளவில் பூக்கள் பூப்பதற்கு பூக்கள் இருக்கும் பகுதியை அப்படியே விட்டு விடாமல் அடிக்கடி கட்டிங் செய்ய வேண்டும். காய்ந்து விதைகளான பின்பு அதை விட்டு வைத்தால், பூக்கள் பூப்பதில் தடைகள் ஏற்படும். எனவே காய்ந்த பகுதியை கத்தரிக்கோலால் வெட்டி விடுங்கள். இவ்வாறு செய்யும் பொழுது புதிய தளிர்கள் முளைத்து அதிக பூக்கள் பூக்கும்.

இதையும் படிக்கலாமே:
இந்த வெயில் காலத்தில் உங்க ரோஜா செடி எல்லாம் வாடி வதங்கி இருக்கா கவலையை விடுங்க. இந்த டிப்ஸை பாலோ பண்ணி பாருங்க செடி நல்லா தள தளன்னு பூத்து குலுங்கும்.

மேலும் கடலை புண்ணாக்கு நான்கு நாட்கள் தண்ணீரில் ஊற வைத்து அதை உங்களுடைய செடிகளுக்கு கொடுத்து வந்தால் செடிகள் ரொம்ப செழிப்பாக வளரும். கனகாம்பரம் செடியில் பூக்கள் பறிப்பது சுலபம். அதை வளர்ப்பது தான் சற்று கடினமாக இருக்கும். கனகாம்பரம் செடி மட்டும் அல்ல மற்ற செடிகளுக்கும் வேப்ப எண்ணெயுடன் சிறிதளவு ஷாம்பு சேர்த்து தெளிக்கும் பொழுது பூச்சி தொந்தரவுகள் வெகுவாக குறையும். மேலும் கடலை புண்ணாக்கில் இருக்கக்கூடிய நுண் சத்துக்கள் பூச்செடிகளை அதிக அளவில் பூக்கள் பூப்பதற்கு உதவி செய்கிறது.

- Advertisement -