கணவன் மனைவிக்குள், கண் திருஷ்டியால் அடிக்கடி வீட்டில் பிரச்சனை வருகிறதா? அந்தப் பிரச்சனையை ஒரு நொடிப்பொழுதில் தீர்க்கக்கூடிய சக்தி இந்த பரிகாரத்துக்கு உண்டு.

fight

கணவன் மனைவிக்குள் புரிதல் இல்லை என்றால் பிரச்சனை வருவது ஒரு விதம். கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்து வாழ்ந்தாலும் பிரச்சனை வரும். காரணம், இவர்களை பார்ப்பவர்களுடைய கண்திருஷ்டி! ஒற்றுமையாக இருக்கும் குடும்பத்தைப் பார்த்து உங்கள் உறவினர்களோ, அக்கம்பக்கத்தில் இருக்கும் நண்பர்களோ யாராவது ஒருத்தர் கண்ணு வைத்துவிட்டால் போதும். ‘ஒருத்தருக்கு ஒருத்தர் எப்படி விட்டுக்கொடுத்து சந்தோஷமா வாழறாங்க! வாழ்ந்தால் இவர்களை போல வாழனும்னு, ஒரு வார்த்தை சொன்னால் போதும்’. முடிஞ்சது. நம்ம வீட்ல சண்டை சச்சரவுகள் ஆரம்பித்துவிடும்.

couple

உங்க வீட்டுலயும் நீங்க தம்பதி சரீரமாக, ஒற்றுமையாக, சந்தோஷமாக வாழ்வதை பார்த்து எல்லோரும் கண்ணு வைக்கிறார்களா? உங்க வீட்ல பிரச்சினை வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும். எதிர்மறை ஆற்றல்கள் எதிர்மறை எண்ணங்கள் ஒன்று சேர்வது தான் இந்த கண் திருஷ்டி. எதிர்மறை ஆற்றலையும், கண் திருஷ்டியும் தன்னுள் கிரகித்து கொள்ளும் சக்தி இந்த இரண்டு பொருளுக்கு உண்டு.

கெட்ட சக்தியை தனக்குள் கிரகித்துக்கொள்ளும் தன்மை கொண்ட பொருட்களில் முதலிடம் கல்உப்புக்குத்தான் உண்டு. இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். உப்புக்கு அடுத்தபடியாக கெட்ட சக்தியை தனக்குள் கிரகித்து கொள்ளக்கூடிய சக்தி சின்ன வெங்காயத்திற்கும் உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது.

salt1

உங்களுக்கு கண்திருஷ்டி, எதிரி தொல்லை, எதிர்மறை ஆற்றலினால் பிரச்சனை இப்படிப்பட்ட தொந்தரவுகளை நீங்கள் சந்திக்கும் போது, உங்களது கையால் 2 சின்ன வெங்காயம்ங்களை எடுத்து, உங்களது தலையை 3 முறை சுற்றி, உச்சம் தலை முதல் உள்ளங் கால் வரை, ஏற்ற இறக்கமாக மூன்று முறை ஏற்றி இறக்கி, கையில் இருக்கும் சின்ன வெங்காயத்தை, ஒரு பேப்பரில் மடித்து குப்பைக் கூடையில் போட்டு பாருங்கள். உங்களுக்கு பெரிய ரிலீஃப் கிடைத்தால் போல் உணர்வீர்கள்.

- Advertisement -

சரி, இப்போது கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனையை தீர்க்கும் பரிகாரத்திற்கு வருவோம். நீங்கள், முதலில் நான்கு மண் அகல் விளக்குகளை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த மண் அகல் விளக்குகளுக்கு உள்ளே, முதலில் கல் உப்பை நிரப்பி விடுங்கள். அதன் மேலே ஒரே ஒரு சின்ன வெங்காயத்தையும், வைக்கவேண்டும். நான்கு மண் அகல் விளக்குகளுக்கு உள்ளேயும் கல்லுப்பு இருக்கும் அந்தக் கல்லுக்கு மேலே ஒரு சின்ன வெங்காயம். மொத்தமாக நான்கு சின்ன வெங்காயம்.

chinna-vengayam

இப்போது இந்த நான்கு அகல் விளக்குகளை, உங்கள் படுக்கை அறையின் நான்கு மூலைகளிலும் வைத்துவிடுங்கள். நீங்கள் உறங்கச் செல்வதற்கு முன்பாக, இந்த விளக்குகளை உங்களது படுக்கை அறையில் வைக்க வேண்டும்.

Agal-Vilakku

காலை எழுந்தவுடனேயே ஒரு கவரில், அகல் விளக்குகளில் இருக்கும் கல் உப்பையும், சின்ன வெங்காயத்தையும் போட்டு கட்டி, வீட்டில் இருந்து தூரமாக கொண்டுபோய் போட்டு விட்டு வரவேண்டும். அப்படி இல்லை என்றால் குப்பை கூடையில் போட்டு அன்றைய தினமே, உங்கள் வீட்டில் இருந்து அந்த உப்பையும் வெங்காயத்தையும் வெளியேற்றிவிட வேண்டும்.

fight4

இப்படியாக வாரத்தில் மூன்று நாட்கள் இந்த பரிகாரத்தை செய்தால் கூட ஒற்றுமையாக இருக்கும் கணவன் மனைவியைப் பார்த்து அடுத்தவர்கள் கண் வைத்தாலும், அந்த கண் திருஷ்டியின் மூலம் நம்முடைய வீட்டில் பிரச்சனை வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்களும் இந்த பரிகாரத்தை உங்கள் வீட்டில் முயற்சி செய்து பார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே
பெண்கள், நாளை வரக்கூடிய புத்தாண்டு தினத்தை இப்படித்தான் வரவேற்று பாருங்களேன்! உங்க வீட்டில் சண்டை சச்சரவுகள் காணாமல் போவதற்கு இது கூட ஒரு நல்ல வழி.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.