கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ பரிகாரம்

nattusakgarai karkandu
- Advertisement -

ஆயிரம் காலத்து உறவாக கருதப்படுவது தான் கணவன் மனைவி உறவு. இவர்களின் உறவு சுமூகமாக இருந்தால் தான் அந்த குடும்பம் நன்றாக இருக்கும். அதனால்தான் வாழ்க்கை என்னும் வண்டியை ஓட்டுவதற்கு கணவன் மனைவி என்ற இருசக்கரங்கள் வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். இவர்களுக்குள் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டால் அந்த குடும்பமே நிம்மதி இல்லாமல் போய்விடும். அவர்கள் மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தில் இருக்கும் மற்ற நபர்களும் சந்தோஷம் இழந்து கஷ்டப்படுவார்கள். அப்படி ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளாமல் இருக்கக்கூடிய கணவனும் மனைவியும் ஒற்றுமையாக சேர்ந்து வாழ்வதற்கு செய்யக்கூடிய எளிய பரிகாரங்களை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

கணவனும் மனைவியும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ வேண்டும். அதே சமயம் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும் அனுசரித்தும் செல்ல வேண்டும். இதையும் தாண்டி கிரகங்களின் காரணங்களாலும் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் பரிகாரங்களை மேற்கொள்ளும் பொழுது அந்த பரிகாரங்களின் பலனால் கிரகங்களால் நன்மை ஏற்படும்.

- Advertisement -

கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ்வதற்கு வீட்டில் துளசி செடியையும், தொட்டாசினுங்கி செடியையும் ஒன்றாக ஒரே தொட்டியில் வைத்து வளர்க்க வேண்டும் என்பது பலரும் அறிந்த உண்மையே. அவ்வாறு வளர்க்க இடமில்லாத பட்சத்தில் துளசி வேரையும் தொட்டாசினுங்கி வேரையும் ஆயுதம் படாமல் எடுத்து மஞ்சள் தண்ணீரில் சுத்தம் செய்து ஒன்றாக சேர்த்து வெள்ளி அல்லது செம்பு தாயத்தில் போட வேண்டும். பிறகு அந்த தாயத்தை குலதெய்வத்தின் பாதத்தில் வைத்து வழிபட்டு விட்டு கணவனும் மனைவியும் போட்டுக் கொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அவர்களுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.

மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை தரக்கூடியவராக திகழ் பவர் சுக்கிர பகவானே அப்படிப்பட்ட சுக்கிர பகவானின் அருளை பெறுவதற்கு செய்யக்கூடிய பரிகாரத்தை பார்ப்போம். வெள்ளிக்கிழமை தோறும் காலையில் பூஜை செய்யும் பொழுது சுக்கிர ஹோரையில் நாம் எந்த கடவுளை வணங்கினாலும் சரி அந்த கடவுளுக்கு நாட்டுச்சர்க்கரையை நெய்வேதியமாக வைத்து வழிபட்டு வருவதன் மூலம் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.

- Advertisement -

இதேபோல் வெள்ளிக்கிழமை சுக்கிர கூரையில் அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று சுக்கிர பகவானுக்கு அகலில் நல்லெண்ணெய் ஊற்றி ஆறு டைமண்ட் கற்கண்டை போட்டு பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வர கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். மேலும் கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலையிலும், மாலையிலும் அல்லது ஏதாவது ஒரு வேளையில் குங்கிலியம் மற்றும் வெண் கடுகை பயன்படுத்தி வீடு முழுவதும் தூபம் போட்டு வர வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் விலகி குடும்பத்தில் உள்ள சண்டை சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: பணவரவை அதிகரிக்கும் வெந்தய பரிகாரம்

இந்த எளிமையான பரிகாரங்களில் நம்பிக்கை இருப்பவர்கள் இவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி தங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழலாம்.

- Advertisement -