கணவன் மனைவி பேச்சை கேட்பதற்கும், மனைவிமீது அக்கறையாக இருப்பதற்கும் செய்ய வேண்டிய பரிகாரம்

marrage
- Advertisement -

ஆண் பெண் இருவரும் மனமொத்து விருப்பமாக திருமணம் செய்துகொண்டு சிறிது நாட்கள் வாழ்ந்த பிறகு விவாகரத்து கேட்டு குடும்பநல நீதிமன்றங்களில் வரிசையாக நின்று கொண்டிருக்கிருக்கும் காலம் தான் இது. இதற்குக் காரணம் என்னவென்றால் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் நான் பெரியவனா? நீ பெரியவளா? என்று போட்டிப்போட்டு நடந்து கொள்வதாகும். இவ்வாறு புரிதல் இல்லாத குடும்பத்தில் தான் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. பல குடும்பங்களில் கணவர்கள் நீ சொல்வதை நான் ஏன் கேட்க வேண்டும் என்று பெண்களிடம் சண்டை போடுவது வழக்கமாக இருக்கிறது. இவ்வாறு இருக்கும் கணவன்மாரை மனைவி தன் பேச்சை கேட்க வைப்பதற்காக செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Hindu Marriage

இன்றைய தலைமுறைகள் அவசர அவசரமாக முடிவு எடுத்து பெற்றோர்களையும் எதிர்த்து திருமணம் செய்து கொள்கிறார்கள். நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பஞ்சாங்கம் பார்த்து, நல்ல நாள் குறித்து, அனைவரின் ஆசீர்வாதத்துடன் நடத்தி வைக்கும் திருமணத்திலேயே நிறைய பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அவ்வாறு இருக்க எந்த வித சாஸ்திர சம்பிரதாயங்களும் இல்லாமல் செய்யப்படும் திருமணங்களில் ஒற்றுமை என்பது சற்று குறைவாகத்தான் இருக்கிறது.

- Advertisement -

கணவன் மனைவி ஒற்றுமைக்காக திருமணங்களில் நடத்தப்படும் ஒரு சடங்குதான் பெண்ணின் முந்தானையையும் ஆணின் வஸ்திரத்தையும் வைத்து போடப்படும் முடிச்சு. இவ்வாறு போடப்படும் முடிச்சர்க்கு பின்னால் நிறைய அர்த்தங்கள் உள்ளன. கணவன் மனைவி இருவருமே இந்த முடிச்சினை போன்று ஒருவருக்கொருவர் பிரியாமல் எப்போதும் இணைந்தே இருக்க வேண்டும் என்பது தான் இதன் பொருள். இதனை செய்வதால் கணவன் மனைவி இருவருக்கிடையேயும் மன ஒற்றுமை ஏற்படும் என்பது நமது ஐதீகம்.

marriage

எனவே திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவி இடையே ஒற்றுமை இல்லை என்றால் திருமணத்தின் போது பெண் உடுத்தியிருந்த புடவையையும், ஆண் உடுத்தியிருந்த வேஷ்டியையும் எடுத்து அவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து முடிச்சு போட்டு அந்த முடிச்சின் மீது மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து கணவனின் வேஷ்டி அடிப்பகுதியிலும் புடவை மேல் பகுதியிலும் இருக்குமாறு வைத்து, அதனை அப்படியே அலமாரியில் வைத்து விடவேண்டும். இவ்வாறு செய்வதால் கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும் என்பது நம்பப்படும் ஒரு உண்மையாகும்.

- Advertisement -

இவ்வாறு திருமணத்தின் போது உடுத்திய ஆடைகள் இல்லையென்றாலும் நாம் பயன்படுத்தும் ஏதேனும் ஒரு ஆடையை எடுத்துக் கொண்டும் இவ்வாறான பரிகாரத்தை செய்யலாம். அதுமட்டுமல்லாமல் கணவன் மனைவி ஒற்றுமையை பலப்படுத்துவதற்காக சென்னை கோவளத்தில் இருக்கும் பிரத்தியங்கிரா தேவி ஆலயத்திற்கு சென்று அம்மனை வழிபட்டு வருவதன் மூலமாகவும் நல்ல பலனை பெற முடியும்.

marraige-couple

அங்கு கணவன் மனைவி இருவருமே மாலை அணிந்து பிரகாரத்தை சுற்றி வர வேண்டும். அந்த மாலையை தங்கள் வீட்டில் பத்திரமாக வைத்துக்கொண்டு தாங்களின் வேண்டுதல் நிறைவேறியவுடன் அந்த மாலையை மறுபடியும் கொண்டு சென்று கோவிலில் உள்ள மரத்தில் சாற்றி விட்டு வர வேண்டும். இவ்வாறு செய்வதினால் கணவன் மனைவி எப்போதும் ஒற்றுமையுடன் சந்தோஷமாக தங்களது இல்லற வாழ்வைத் தொடர்வார்கள்.

- Advertisement -