ஆந்திரா ஸ்பெஷல் பருப்பு பொடியின் ரகசியம் இது தான். ஆந்திரா ஹோட்டலில் சாப்பிட்ட, அதே சுவையில பருப்பு பொடி ரெசிபி தேடிட்டு இருந்தீங்கன்னா இதோ ரெசிபி!

paruppu-podi_tamil
- Advertisement -

என்னதான் நம்முடைய வீட்டில் பருப்பு பொடி அரைத்தாலும் அந்த ஆந்திர ஹோட்டலில் சாப்பிட்ட பருப்பு பொடியின் சுவை நிச்சயம் வராது. அப்படி அந்த பருப்பு பொடியில் என்னதான் சேர்த்து அரைக்கிறார்கள். ஆந்திராவுக்கு போனாலே சுட சுட சாதத்தில் அந்த பருப்பு பொடி மேல் நெய் விட்டு சாப்பிட அவ்வளவு பிடிக்கிறது. இந்த ரெசிபி தெரிந்தால் நம்முடைய வீட்டிலும் அரைத்து வைத்துக் கொள்ளலாம். என்று யோசிப்பவர்கள் இந்த ரெசிபியை படிங்க.

செய்முறை

இதற்கு தேவையான பொருட்கள் என்றால் எண்ணெய் 1 ஸ்பூன், பெருங்காய கட்டி சின்ன துண்டு, வரமிளகாய் 10, பூண்டு 10, கருவாப்பிலை 1 கொத்து, துவரம்பருப்பு 1/2 கப், மிளகு 1/2 ஸ்பூன், சீரகம் 1/2 ஸ்பூன், பொட்டுக்கடலை 1/2 கப், உப்பு தேவையான அளவு, இவ்வளவு தான்‌. இதில் பூண்டை நீங்கள் தோல் உரித்தும் சேர்க்கலாம். தோல் உரிக்காமல் சேர்த்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம். வரமிளகாயை உங்கள் காரத்திற்கு ஏற்ப கூட்டி குறைத்து வைத்துக் கொள்ளுங்கள்‌. இதில் நம்முடைய துவரம் பருப்பு இருக்கிறதல்லவா, இதைத்தான் ஆந்திராவில் kandi என்று சொல்லுவார்கள். அதனால்தான் இந்த பொடிக்கு கண்டி பொடி என்ற பெயர்.

- Advertisement -

சரி இப்போது செய்முறை விளக்கத்தை பார்த்து விடுவோம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன் மட்டும் எண்ணெய் ஊற்றி அந்த கட்டி பெருங்காயத்தை போட்டு பொரித்துக் கொள்ளுங்கள். கட்டி பெருங்காயம் மேலே பொறிந்து பொங்கி வந்தவுடன் அதை தனியாக எடுத்து விடவும். (தூள் பெருங்காயமாக இருந்தால் அதை கால் ஸ்பூன் இந்த பொருட்களோடு சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.) கடாயில் மீதம் எண்ணெய் இருக்கும். அதில் வரமிளகாய் 10 போட்டு பொன்னிறமாக சிவக்க விட்டு அதையும் எடுத்து விடுங்கள்.

பிறகு பூண்டு போட்டு அதையும் மூன்று நிமிடம் அந்த எண்ணெயிலேயே வறுத்து எடுத்து விடுங்கள். அந்த கடாயில் இன்னும் கொஞ்சம் மீதம் எண்ணெய் ஒட்டி இருக்கும். அதில் எடுத்து வைத்திருக்கும் துவரம் பருப்பை போட்டுக் கொள்ளவும். துவரம் பருப்பு பொன்னிறமாக சிவந்து வருபட வேண்டும்.

- Advertisement -

அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைத்து வருங்கள். துவரம் பருப்பு வறுபட்டவுடன் இறுதியாக அதில் மிளகு அரை ஸ்பூன், சீரகம் அரை ஸ்பூன் பொட்டுக்கடலையையும் போட்டு,  ஒரு முறை கலந்து விட்டு இதையும் அப்படியே ஒரு தட்டில் மாற்றிக் கொள்ளுங்கள். இறுதியாக அடுப்பை அணைத்து விட்டு கருவேப்பிலை ஒரு கொத்து அந்த கடாயில் போட்டு லேசாக வறுத்து அடுப்பை அணைத்து விடுங்கள் அந்த சூட்டிலேயே கருவாப்பிலை மொறுமொறுப்பாக வந்துவிடும்.

இப்போது வறுபட்ட பொருட்கள் எல்லாம் நன்றாக ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் அரைக்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். பூண்டு, கருவாப்பிலையை மட்டும் நிறுத்தி விட்டு, மீதம் இருக்கும் எல்லா பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு முதலில் அரைத்து விடுங்கள்.

- Advertisement -

மற்ற பொருட்கள் எல்லாம் 90% அடைப்பட்டவுடன், எடுத்து வைத்திருக்கும் பூண்டையும் கருவாப்பிலையையும் அதில் சேர்த்து மீண்டும் நைசாக அரைத்துக் கொண்டால் மணக்க மணக்க ஒரு பருப்பு பொடி தயாராகி இருக்கும். (இந்தப் பொடியை கொரகொரப்பாக அரைக்க கூடாது நைசாக அரைத்தால் தான் சாப்பாட்டில் போட்டு பிசைந்து சாப்பிட ருசி தரும்.)

இதையும் படிக்கலாமே: ஒரு சொட்டு எண்ணெய் கூட சேர்க்காம குக்கரில் 10 நிமிடத்தில் இட்லி தோசைக்கு ஏற்ற பக்காவான குருமாவை சட்டுனு ரெடி பண்ணிடலாம் தெரியும்மா? சுவை தாறுமாறா இருக்கும் கண்டிப்பா ட்ரை பண்ணுங்க.

மேலே சொன்ன மசாலா பொருட்களை எல்லாம் வருவதற்கு ஒரு ஸ்பூன் எண்ணெயை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். நிறைய எண்ணெயை ஊற்றி விட்டால் ஸ்டோர் செய்து வைத்து சாப்பிடும் போது, அந்த பருப்பு பொடி ஒரு சில நாட்களில் சிக்குவாடை அடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ரெசிபி பிடிச்சவங்க ட்ரை பண்ணி பார்க்கலாம்.

- Advertisement -