கங்கண ரேகை உங்கள் கையில் இப்படி இருந்தால் யோகம் தான்

Kai regai palan

ஜோதிடம் என்பது வாழ்வின் கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என மூன்றை பற்றியும் கூறும் ஒரு கணிதம் மற்றும் அறிவியல் கலந்த கலையாகும். இக்கலைகளில் பல வகைகள் உள்ளன அதில் ஒன்று தான் கைரேகை கலை. நமது உள்ளங்கைகளில் பல ரேகைகள் இருக்கின்றன. அதே நேரத்தில் உள்ளங்கையும் மணிக்கட்டும் இணையும் பகுதிகளில் நம் எல்லோருக்கும் சில ரேகைகள் இருப்பதை காண முடியும். அது தான் கங்கண ரேகை இந்த ரேகைகளுக்கான பலன்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

kangana regai

கங்கண ரேகைகள் பார்ப்பதற்கு சங்கிலி போன்ற தோற்றத்தில் இருந்தால் எதிர்காலத்தில் மிகுந்த செல்வத்தை பெறும் தன்மையை காட்டும் ஒரு அறிகுறியாகும். புகழ் மற்றும் மக்கள் செல்வாக்கையும் ஏற்படுத்தும். கங்கண ரேகைகள் தொடர்ச்சியாக இல்லாமல் விட்டு விட்டு காணப்பட்டால் வாழ்வில் அவ்வப்போது சில சங்கடங்களை அனுபவிக்க நேரிடும்.

ஒரே ஒரு கங்கண ரேகை இருந்தால் அந்த நபர் லட்சியவாதியாக இருப்பார். எந்த ஒரு செயலையும் திட்டமிட்டுசெய்து முடிப்பதில் வல்லவர்கள். இரண்டு அல்லது மூன்று கங்கண ரேகைகள் கொண்டவர்கள் மனஉறுதி மிக்கவர்களாக இருப்பார்கள். தோல்விகளால் துவளாமல் எக்காரியத்திலும் தொடர்ந்து முயற்சித்து வெற்றியை அடைந்தே தீருவார்கள்.

kangana regai

நான்கு கங்கண ரேகைகள் ஒருவரின் கையில் இருப்பது சற்று அபூர்வமானதாகும். இப்படிப்பட்ட ரேகைகளை கொண்டவர்கள் ஒரு அரசாங்கத்தை ராஜ்ஜியம் செய்யும் யோகம் கொண்டவர்களாக இருப்பர். அரண்மனை போன்ற வீடும், ஏராளமான பணியாட்களும், ஆடம்பரமான வாகனங்களும் கொண்ட ஒரு வாழ்க்கையை வாழ்வார்கள். ஒருவருக்கு அவரது மணிக்கட்டு பகுதியில் கங்கண ரேகையே இல்லாவிடின் அவரது பொருளாதார நிலை சொல்லிக்கொள்ளும் படி இருக்காது. எப்போதும் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழும் நிலையே இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் கை ரேகைப்படி உங்கள் குணம் என்ன ? பார்ப்போம் வாருங்கள்

கை ரேகை குறிப்புக்கள், ஜோதிடம் சார்ந்த குறிப்புக்கள் மற்றும் ஆன்மீக தகவல்களை அறிய எங்களோடு இணைந்திருங்கள்

English Overview:
Here we have different palan for Kangana regai in Tamil.