கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் யோகமான வாழ்வை பெற இவற்றை செய்ய வேண்டும்

kanni

நகைச்சுவை உணர்வு மனிதர்கள் அனைவருக்கும் இருக்க வேண்டிய ஒன்றாகும். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு உள்ள நபர்களை அதிகம் பிடிக்கிறது. எனவே தான் கன்னி ராசியில் பிறந்த ஆண்களுக்கு பெண்கள் நண்பர்கள் அதிகம் இருக்கின்றனர். காரணம் கன்னி ராசியில் பிறந்த ஆண்கள் இயற்கையிலேயே சிறந்த நகைச்சுவை தன்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இத்தகைய கன்னி ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்கள் தங்கள் ஜாதகத்தில் யோகாதிபதியாக இருக்கும் கிரகத்தினால் மிகுதியான நன்மைகள் ஏற்படுவதற்கு செய்ய வேண்டிய எளிய ஜோதிடப் பரிகாரங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஜாதக கட்டத்தில் இருக்கும் 12 ராசிகளில் 6 வது ராசியாக வருவது கன்னி ராசியாகும். கன்னி ராசிக்கு அதிபதி புதன் பகவானாவார். இந்த கன்னி ராசி புதன் கிரகத்திற்கு உச்ச ராசியாகவும், சுக்கிர பகவானுக்கு நீச்ச ராசியாகவும் இருக்கிறது. சுக்கிரன் நீசம் அடையும் ராசியாக கன்னி ராசி இருந்தாலும், இந்த கன்னி ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு அவர்களின் ஜாதகத்தில் யோகங்களை அள்ளித் தரும் 9 ஆம் இடத்து ராசியாக ரிஷபமும் அதன் அதிபதியாக சுக்கிர பகவான் இருப்பதும் ஒரு ஜோதிட அதிசயமாகும்.

ஜோதிட சாஸ்திரப்படி புதன் மற்றும் சுக்கிரன் கிரகங்களுக்கு நட்பு தன்மை இல்லாத நிலை இருக்கிறது. எனினும் கன்னி ராசியினருக்கு யோகங்களைத் தரும் ராசியாக சுக்கிரனின் ரிஷப ராசி இருப்பதால் சுக்கிரனுக்குரிய சில பரிகாரங்கள் செய்வதன் மூலம் கன்னி ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்கள் வாழ்வில் யோகங்களும், அதிர்ஷ்டங்களும் மிகுதியாக உண்டாக வழிவகை செய்யும்.

arisi

கன்னி ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்கள் சுக்கிர பகவான் அருளாசிகள் பெற்று யோகங்களையும், அதிர்ஷ்டங்களையும் அதிகளவில் பெறுவதற்கு வெள்ளை நிற உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை கோவிலுக்கோ அல்லது அன்னதான கூடங்களுக்கோ தானமாக வழங்குவது மிகச் சிறந்த பரிகாரமாகும். மேலும் வெள்ளிக்கிழமைகளில் மொச்சை பருப்புகளை வசதி குறைந்த மக்களுக்கு தானம் தருவதும் சுக்கிர பகவானின் கடாட்சத்தை பெற்றுத் தரும்.

- Advertisement -

cow shed

வெள்ளிக்கிழமைகளில் இனிப்பான பழங்களை பறவைகள், குரங்குகள், பசுக்கள் போன்றவற்றுக்கு உணவாக தருவது உங்கள் ஜாதகத்தில் யோகாதிபதியான சுக்கிரன் பகவானின் முழுமையான நல்லருளை உங்களுக்கு முழுமையாக கிடைக்கச் செய்யும். கோவில்களில் கோசாலை எனப்படும் மாட்டுத் தொழுவம் கட்டுவதற்கான உதவிகள் செய்வதும், அங்கிருக்கும் மாடுகளுக்கு அவ்வப்போது உணவு வழங்குவதும் கன்னி ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு யோகங்கள் நிறைந்த வாழ்வை ஏற்படுத்தவல்ல ஜோதிட பரிகாரமாக இருக்கிறது.

இதையும் படிக்கலாமே:
ரிஷப ராசியினருக்கு பணம் தரும் ஜாதக அமைப்பு

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Kanni lagnam yogam in Tamil. It is also called as Kanni rasi in Tamil or Rasi pariharam in Tamil or Jothida pariharam in Tamil or Kanni rasi pariharam in Tamil.