ரிஷபம் ராசி, லக்னத்தார்களுக்கு ஜாதகம் இப்படி இருந்தால் பணம் அதிகம் சேரும்

rishabam

மந்திரத்தால் மாங்காய் விழுமா என்று ஒரு சொற்றொடர் உண்டு. அதாவது எந்த முயற்சியும் செய்யாமல் வெறும் வாய்ஜாலம் பேசிக்கொண்டிருந்தால் நமக்கு செல்வம் ஏதும் கிடைக்காது. ஒவ்வொரு மனிதரும் தங்களுக்கு மிகவும் பிடித்தமான வேலை, தொழில், வியாபாரத்தை செய்யும் போது வாழ்வில் மேன்மை பெறலாம் என்றாலும் ஜோதிடத்தில் 12 ராசிகளுக்கும் அவர்களின் ஜாதகத்தில் ஏற்படும் கிரகச் சேர்க்கையால் அமையும் வேலை, தொழில், வியாபாரம் பற்றி கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் ரிஷப ராசிக்கு மிகுந்த செல்வத்தை கொடுக்கும் வேலை, தொழில், வியாபாரம் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

rishabam

ஜோதிட சாஸ்திரத்தின் படி 12 ராசிகளில் இரண்டாவது ராசியாக வருவது ரிஷப ராசியாகும். இந்த ரிஷப ராசிக்குரிய அதிபதியாக சுக்கிர பகவான் இருக்கிறார். ரிஷப ராசியினருக்கு செல்வத்தை வழங்கக்கூடிய தனாதிபதி கிரகமாக புதன் பகவான் இருக்கிறார். ரிஷப ராசியினருக்கு அவர்களின் ஜாதகத்தில் புதன் பகவான் மற்ற கிரகங்களுடன் சேர்க்கை பெறுவதால் எத்தகைய வேலை, தொழில், வியாபாரம் போன்றவற்றால் மிகுந்த வருமானம், லாபங்கள் ஏற்படும் என்பதை இங்கு பார்ப்போம்.

ரிஷப ராசியினருக்கு ஜாதகத்தில் புதன், சந்திரன் கிரகங்கள் சேர்ந்திருந்தால் பெண்களுக்கான நகைகள் தயாரிப்பு, இசைப்பயிற்சி, தோட்டத்துறை, தொழில் நகைச்சுவைக் கலைஞர், மனநல ஆலோசகர், திரைப்பட கதை, வசனம் எழுதுதல், விளையாட்டு வீரர், வீராங்கனை போன்ற துறைகளில் நல்ல தன லாபம் உண்டாகும்.

budhan

ஜாதகத்தில் புதன், சூரியன் கிரகங்கள் சேர்ந்திருந்தால் அரசுப்பள்ளி ஆசிரியர், கட்டிடம் கட்டும் காண்ட்ராக்டர், அரசு தோட்டத்துறை, அரசு தணிக்கைத் துறை, அரசு பத்திரப் பதிவாளர் போன்ற பணிகளில் மூலம் வருமானம் உண்டாகும்.

- Advertisement -

ரிஷப ராசியினருக்கு புதன், சுக்கிரன் கிரகங்கள் சேர்ந்திருந்தால் நடன நிகழ்ச்சி நடத்துவது, மருத்துவமனைகளுக்கு உணவு தயாரிப்பு ஒப்பந்தம், சித்திரத் தையல் கலைஞர், இயற்பியல் துறை பேராசிரியர் ஊடகத்துறை, விளம்பர நிறுவனம் போன்றவற்றின் மூலம் செல்வ வளம் உண்டாகும்.

sukran

ஜாதகத்தில் புதன், செவ்வாய் கிரகம் சேர்ந்திருந்தால் டுடோரியல் கல்வி நிறுவனம், உளவுத்துறை, தையல் இயந்திரங்கள் பழுது பார்த்தல், ரசாயனத்துறை, மது விற்பனை, தபால் மட்டும் தொலைத்தொடர்புத்துறை, ரத்த வங்கி சேவை ஆகியவற்றில் நல்ல லாபங்கள் ஏற்படும்.

ரிஷப ராசியினருக்கு ஜாதகத்தில் புதன், குரு, கிரகம் சேர்ந்திருந்தால் ஆன்மீக கல்வி பயிற்சி, காப்பீடு நிறுவனம், சட்ட ஆலோசகர், ஜோதிடர், சித்த மருத்துவம் போன்ற தொழில், பணிகளின் மூலம் நல்ல வருமானம் உண்டாகும்.

Sani baghavan

ஜாதகத்தில் புதன் கிரகத்தோடு, சனி கிரகம் சேர்ந்திருந்தால் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் தனித் திறன் பயிற்சி பள்ளி, பொறியியல் கல்லூரி பேராசிரியர், ஆடிட்டர், இயந்திரங்களின் ஆய்வு நிபுணர், வங்கிப்பணி, ஜோதிடக்கலை, ஆன்மீக புத்தக விற்பனை, சட்டத்துறை, தொழில் நிறுவன தலைமை போன்ற வேலை, தொழில் மிகுதியான வருமானம் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
கடக லக்னத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டங்களை பெற செய்ய வேண்டியவை

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Rishbam varumanam in Tamil. It is also called as Rishaba rasi palan in Tamil or Rishaba lagnam palan in Tamil or Jathaga palangal in Tamil or Rishaba rasi Rishaba lagnam in Tamil.