காணும் பொங்கல் அன்று செய்ய வேண்டிய தானம்

pongal5
- Advertisement -

தைப்பொங்கல் திருநாள் முடிந்து விட்டது. மாட்டுப் பொங்கல் திருநாளும் முடிந்தது. அடுத்து இருப்பது இந்த காணும் பொங்கல் மட்டும் தான். இந்த காணும் பொங்கல் நன்னாளில் முந்தைய காலத்தில் எல்லாம் என்ன பழக்கம் இருந்தது வந்தது, உங்களுக்கு தெரியுமா. இந்த நாளில் முக்கியமாக நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன, எதை செய்தால் கடன் பிரச்சனையிலிருந்து தப்பிக்க முடியும் என்பதை பற்றிய ஆன்மீக ரீதியான சில விஷயங்களை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

காணும் பொங்கல் என்றாலே ஊரை சுற்றி பார்க்க மக்கள் வீட்டில் இருந்து கூட்டம் கூட்டமாக கிளம்புவார்கள். இதைத்தான் காணும் பொங்கல் என்று இன்றைய நாளில் நாம் கொண்டாடி வருகின்றோம். ஆனால் அந்த நாளில் காணும் பொங்கல், தான தர்மம் செய்யக்கூடிய நாளாக இருந்து வந்தது. பொங்கல் இனாம் என்று ஒன்றை கொடுப்பார்கள். ஊர் பக்கத்தில் எல்லாம் போய் பார்த்தால் நன்றாக தெரியும்.

- Advertisement -

நம் வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர்கள், தபால் கொடுக்க வருபவர்கள், துப்புரவு தொழிலாளிகள், வீட்டு வேலை செய்பவர்கள், இன்னும் ஒரு சில பேர் எல்லாம் நம்முடைய வீட்டில் வந்து காலிங் பெல் அடித்து பொங்கல் பொங்கியாச்சா, பொங்கல் இனாம் கொடுக்கணுமே என்று உரிமையோடு கேட்பார்கள். இப்படி இந்த பொங்கல் இனாம் அந்த காலத்தில் தான தர்மமாக செய்யப்பட்ட ஒரு விசேஷ நாளாக இருந்தது. இன்று இந்த தர்மத்தை, அடுத்தவர்கள் கேட்டு நாம் கொடுக்கும் படியான ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.

அதாவது அந்த காலத்திலேயே பெரிய பெரிய அரசர்கள், ஊர் ஜமீன்தார்கள் எல்லாம் இந்த காணும் பொங்கல் அன்று தங்களுடைய வீட்டிற்கு வரும் தொழிலாளர்களுக்கு ஒரு தொகையை இனாமாக கொடுப்பார்கள். அதுதான் காலப்போக்கில் இப்படி பொங்கல் இனமாக மாறிவிட்டது. நாம் கொடுக்கவில்லை என்றாலும், நமக்காக வேலை செய்பவர்கள், அதைக் கேட்டு உரிமையோடு பெற்றுக் கொள்கிறார்கள்.

- Advertisement -

இப்போதெல்லாம் இதற்கு பெரிய போராட்டமே நடக்கிறது. 10 ரூபாய், 20 ரூபாய் பொங்கல் இனாம் கொடுத்தால் வாங்க மாட்டார்கள். 50 100 வேண்டும் என்று கூட சிலர் சண்டை போடுவார்கள். சரி இந்த காணும் பொங்கல் நாளில் கடன் தீர நாம் செய்ய வேண்டிய காரியம் தான் என்ன.

பொதுவாகவே தனக்கு தர்ம காரியத்தில் ஈடுபடும் போது பணத்தை கொடுக்காமல், பொருளாக தானம் கொடுப்பது நல்லது என்று சொல்லுவார்கள். ஆனால் இந்த காணும் பொங்கல் நாளில் பணமாக தர்மம் செய்வதுதான் நம்முடைய கடன் பிரச்சனையை தீர்க்கும் என்று சொல்லி வைத்துள்ளார்கள்.

- Advertisement -

நம்முடைய முன்னோர்கள் அந்த காலத்தில் ஜமீன்தார்களும் மன்னர்களும் காணும் பொங்கல் நாளில் பணத்தை தான் தான தர்மம் செய்தார்கள். பணத்தை தானம் கொடுக்கும் போதுதான் நம்முடைய பணப் பிரச்சினை தீரும் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் உங்க சொந்த பந்த வீடுகளுக்கு சென்றாலோ அல்லது உறவுகள் உங்களுடைய வீட்டிற்கு வந்தாலோ அவர்களுக்கு உங்கள் கையால் ஒரு 10 ரூபாயாவது பொங்க காசு குடுங்க. இதோடு சேர்த்து நம்முடைய வீட்டில் வேலை செய்பவர்கள், நம் வீட்டு குப்பையை அள்ளும் துப்புரவு தொழிலாளர்கள், டிரைனேஜ் கிளீன் பண்றவங்க, சாக்கடையை சுத்தம் செய்பவர்கள், நம் வீட்டுக்கு சிலிண்டரை கொண்டு வந்து போடுபவர்கள், என்று இவர்களுக்கு எல்லாம் கொடுக்க வேண்டிய பொங்கல் காசையும் கொடுத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: மாட்டுப் பொங்கல் அன்று வீட்டில் ஏற்ற வேண்டிய விளக்கு.

இந்த தர்மத்தோடு சேர்த்து நாளை இயலாத ஏழை எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த பணத்தை தான தர்மம் செய்யலாம். வீதி ஓரங்களில் யாசகம் கேட்டு வருவார்கள் அல்லவா. அவர்களுக்கும் பத்து ரூபாய் உங்கள் கையால் தானம் செய்ய முடிந்தாலும் மன நிறைவோடு கொடுங்கள். நாளை காணும் பொங்கல் அன்று பணத்தை தானம் செய்தால் உங்கள் கடன் பிரச்சனை குறையும் என்ற இந்த தகவலோடு இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -