வெங்காயம் தக்காளி எதுவும் சேர்க்காம ஒரு காரச் சட்னி ரெசிபி. நல்லா சுள்ளுன்னு காரசாரமா சாப்பிடறவங்களுக்கு இப்படி செஞ்சு கொடுங்க. இந்த சட்னி ஒரு வாரம் ஆனா கூட கெட்டே போகாது.

- Advertisement -

இப்போது இருக்கும் சூழ்நிலையில் இந்த விலைவாசியை நினைத்தால் எதையும் வாங்கி சமைக்க கூடிய நிலையில் இல்லை. அதுவும் இந்த தக்காளியின் விலை எல்லாம் கேட்டால் மயக்கமே வந்து விடும் அளவிற்கு இருக்கிறது. அதற்காக நாம் எதையும் சமைத்து சாப்பிடாமல் இருக்க முடியாதே. இந்த சமையல் குறிப்பு பதிவில் வெங்காயம் தக்காளி எதையும் சேர்க்காமல் சுள்ளுன்னு ஒரு காரச் சட்னி சூப்பரா எப்படி செய்யறதுன்னு தான் தெரிஞ்சுக்க போறோம். நல்லா காரசாரமா சாப்பிடணும்னு நினைக்கிறவங்களுக்கு இந்த சட்னி ஒரு நல்ல காம்பினேஷனா இருக்கும் வாங்க இந்த சட்னி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

செய்முறை

இந்த சட்னி செய்ய முதலில் ஒரு சிறிய எலுமிச்சை பழ அளவு புளியை தண்ணீரில் ஊற வைத்து கெட்டியாக கரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து 30 பூண்டு பல்லை தோல் உரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த சட்னி செய்ய முதலில் எடுத்து வைத்த பூண்டை மிக்சி ஜாரில் சேர்த்து பல்ஸ் மோடில் விட்டு எடுத்துக் கொள்ளுங்கள். பூண்டு மைய அரைப்படக் கூடாது பூண்டு ஒன்றும் பாதியுமாகத் தான் அரைப்பட்டு இருக்க வேண்டும். அப்போது தான் சட்னி நன்றாக இருக்கும்.

இப்போது அடுப்பில் கடாய் வைத்து மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து பொரிய விடுங்கள். அதன் பிறகு நாம் அரைத்து வைத்த பூண்டை இதில் சேர்த்து அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைத்து நன்றாக வதக்கி விட வேண்டும். பூண்டின் நிறம் மாறக் இகூடாது அதே நேரத்தில் பூண்டின் பச்சை தன்மையும் முழுவதுமாக நீங்கி விட வேண்டும்.

- Advertisement -

பூண்டு நன்றாக வதங்கிய பிறகு இந்த எண்ணெயிலே ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள், ஒரு ஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் மஞ்சள், அரை ஸ்பூன் உப்பு சேர்த்து அதையும் எண்ணெயில் பச்சை வாடை போகும் வரை வதக்கிய பிறகு கால் டம்ளர் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள். இதில் எண்ணெய் மொத்தமாக பிரிந்து வரும் வரை கொதிக்க வேண்டும்.

சட்னியில் எண்ணெய் பிரிந்து வந்த பிறகு நாம் கரைத்து வைத்த புளிக் கரைச்சலை இதில் ஊற்றி மீண்டும் 5 நிமிடம் வரை புளியின் பச்சை வாடை போகும் வரை கொதிக்க விட வேண்டும். அதன் பிறகு கடைசியாக ஒரே ஒரு சிறிய துண்டு வெல்ல கட்டியை இதில் சேர்த்து விட்டு கால் டீஸ்பூன் பெருங்காயத்தூளையும் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள் சுவையான காரச் சட்னி காரசாரமாக தயார்.

இதையும் படிக்கலாமே: செட்டிநாட்டு சமையல் வாசத்தோட வெஜிடபிள் பிரியாணி செய்ய தெரியுமா உங்களுக்கு? தெரியாதுன்னா இந்த ரெசிபியை படிச்சு தெரிஞ்சுக்கோங்க. இப்பவே!

இந்த சட்னி இட்லி, தோசை போன்ற அனைத்து டிபன் வகைகளுக்கும் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும். அது மட்டும் இன்றி சாதத்துடன் கூட இதை வைத்து சாப்பிடலாம். ஒரு வாரம் ஆனால் கூட கெட்டுப் போகாது.

- Advertisement -