கறி குழம்பையும் மிஞ்சும் சுவையில் கடலை குழம்பை இப்படி சுவையான மசாலா அரைத்து செய்து பாருங்கள். அக்கம்பக்கத்து வீட்டாரையும் உங்கள் பக்கம் இழுக்கும் இந்தக் குழம்பின் வாசனை

kadalai
- Advertisement -

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான குழம்பு வகை செய்வதற்கு முன் கூட்டியே யோசிக்க வேண்டியிருக்கும். அப்படி சாம்பார், ரசம், கீரை குழம்பு, கார குழம்பு, குருமா இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக சமைத்து கொண்டிருப்போம். ஆனால் கார்த்திகை மாதத்ததில் பலவித விசேஷ பூஜைகள் கொண்டாடப்படுவதால் அதிக நாட்கள் அசைவம் செய்யாமல் விரதம் இருப்பார்கள். அது போன்ற நேரங்களில் அசைவ சுவையில் செய்யக்கூடிய ஒரு சைவ குழம்பை தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கருப்பு கொண்டைக்கடலை சேர்த்து ருசியான மசாலா அரைத்து செய்யும் இந்த குழம்பை எவ்வாறு செய்ய வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

avarai-sambar6

தேவையான பொருட்கள்:
கருப்பு கொண்டை கடலை – 200 கிராம், சின்ன வெங்காயம் – 15, பூண்டு – 10 பல், தக்காளி – 3, தனியா – 3 ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், மிளகு – அரை ஸ்பூன், பட்டை சிறிய துண்டு – 2 லவங்கம் – 3, வரமிளகாய் – 7, தேங்காய் துருவல் – 3 ஸ்பூன், பிரியாணி இலை – 1, கல்பாசி – அரை ஸ்பூன், சோம்பு – 1 ஸ்பூன், எண்ணெய் – 6 ஸ்பூன், மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒன்றரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதல் நாள் இரவே கருப்பு கடலையை நன்றாக கழுவி தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவேண்டும். பின்னர் மறுநாள் தண்ணீரை வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் 3 ஸ்பூன் தனியா, ஒரு ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் மிளகு, அரை ஸ்பூன் சோம்பு சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.

kadalai

பிறகு 10 சின்ன வெங்காயம், 10 பல் பூண்டு, 7 வர மிளகாய், நறுக்கிய 3 தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் இறுதியாக தேங்காய் துருவல் சேர்த்து வதக்கிக் கொண்டு அவற்றை நன்றாக ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அரை ஸ்பூன் சோம்பு, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் 5 சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொண்டு, ஊற வைத்த கொண்டை கடலையையும் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

kadalai

பின்னர் ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஒன்றரை ஸ்பூன் உப்பு சேர்த்து, குக்கரை மூடி, விசில் போட்டு 5 விசில் வரும் வரை வேக விட வேண்டும். பிறகு குக்கரை இறக்கி வைத்து பிரஷர் குறைந்ததும் குக்கரை திறந்து கொத்தமல்லி தழை தூவி ஒரு முறை கலந்து விட்டால் போதும். சுவையான கடலை குழம்பு தயாராகிவிடும்.

- Advertisement -