பலாக்காயை வைத்து இப்படி குழம்பு செய்து பாருங்கள். சிக்கன், மட்டன் கடந்து நாவில் நிற்கும்

karipala kulambu
- Advertisement -

கறிபலா குழம்பு | Karipala kulambu recipe in Tamil

சைவம், அசைவம் என்று இருவகைகளாக உணவை பிரிக்கலாம். சைவம் சாப்பிடுபவர்கள் அசைவத்தின் ருசியாலும், சுவையாலும் சைவத்தை விடுத்து விட்டு அசைவத்தை சாப்பிடும் பழக்கத்திற்கு வந்துவிடுவார்கள். அதே போல் சில பேர் நடுவில் சைவமாக மாறிவிடுபவர்களும் இருக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணமாக விளங்குவது அதன் ருசியும், சுவையும் தான். அசைவம் சாப்பிட்டவர்கள் அந்த அசைவ சுவையை மறப்பது என்பது மிகவும் கடினம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அசைவ சுவையில் அருமையான ஒரு சைவப் பலாக்காய் குழம்பு எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

சுவை மிகுந்த பழங்களில் ஒன்றுதான் பலாப்பழம். பழம் மட்டும்தான் சுவையாக இருக்குமா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆம் இதன் பிஞ்சை நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தி சாப்பிட்டால் அதன் சுவை பழத்தை விட மிகவும் அருமையாக இருக்கும். அப்படிப்பட்ட பிஞ்சு பலாக்காயை தான் நாம் கறிபலா என்று கூறுகிறோம். இந்த கறிப்பலாவை வைத்து குழம்பு செய்தால் கறி குழம்பு கூட தோத்துப் போகும் அளவிற்கு சுவையில் மிகவும் அபாரமாக இருக்கும்.

- Advertisement -

செய்முறை

முதலில் ஒரு சிறிய பலாக்காயை கையில் எண்ணெய் தடவிக் கொண்டு தோலை நீக்கி சிறிது சிறிதாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் இந்த பலா காய்களை போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, 1/4 ஸ்பூன் மஞ்சள் தூளும், 1/5 ஸ்பூன் உப்பும் சேர்த்து மூடி போட்டு 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். பலா காய் நன்றாக வெந்த பிறகு அடுப்பை அணைத்துவிட்டு காயை வடிகட்டி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடாய் நன்றாக காய்ந்ததும், அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் 2 கிராம்பு, ஒரு பட்டை, 2 1/2 ஸ்பூன் வர மல்லி, 7 வர மிளகாய், 1/2 ஸ்பூன் மிளகு, 1/4 ஸ்பூன் சீரகம், 1/4 ஸ்பூன் சோம்பு, ஒரு கொத்து கருவேப்பிலை போன்றவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

- Advertisement -

வதக்கிய இந்த பொருட்களை ஒரு தட்டில் மாற்றி வைத்து, மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து அதில் தோல் உரித்த 15 சின்ன வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும். வெங்காயம் பச்சை வாடை போகும் வரை வதக்கி விட்டு அதையும் தனியாக எடுத்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு மிக்ஸி ஜாரில் நாம் ஏற்கனவே ஆற வைத்திருந்த மசாலாக்களை போட்டு பாதி அளவு அரைக்க வேண்டும். பிறகு வதக்கி வைத்திருக்கும் வெங்காயத்தையும் அதனுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நைஸ் ஆக அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் 1/4 ஸ்பூன் அளவிற்கு கடுகை போட வேண்டும். கடுகு நன்றாக வெடித்ததும் அதில் இடித்து வைத்திருக்கும் ஆறு சின்ன வெங்காயத்தை சேர்க்க வேண்டும். வெங்காயம் வதங்க ஆரம்பித்ததும் அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் ஒரு தக்காளியும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

தக்காளி வதங்கிய பிறகு அதில் வேக வைத்திருக்கும் பலாக்காயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு 1/2 ஸ்பூன் அளவிற்கு கரம் மசாலா தூள் மற்றும் குழம்பிற்கு தேவையான உப்பை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை அதில் ஊற்ற வேண்டும். அதனுடன் ஒரு கிளாஸ் தண்ணீரை மிக்ஸி ஜாரில் ஊற்றி நன்றாக கலக்கி ஊற்றி விட வேண்டும்.

மசாலா நன்றாக கொதித்து பச்சை வாடை போன பிறகு அதில் 2 ஸ்பூன் அளவிற்கு தேங்காய் திருவலை போட்டு நைசாக அரைத்து ஊற்ற வேண்டும். 5 நிமிடம் நன்றாக கொதித்த பிறகு அதில் கருவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கிவிடலாம்.

இதையும் படிக்கலாமே: பத்தே நிமிஷத்தில் உடனடியாக நல்ல மொறு மொறுன்னு ராகி தோசையை இப்படி செஞ்சு சாப்பிடுங்க. ஆரோக்கியமான ஒரு உணவை இதை விட ஈசியா சமைக்கவே முடியாது. மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க.

மட்டன் குழம்பி தோத்துப்போகும் அளவிற்கு மிகவும் சுவையான கறிபலா குழம்பு தயாராகிவிட்டது.

- Advertisement -