பத்தே நிமிஷத்தில் உடனடியாக நல்ல மொறு மொறுன்னு ராகி தோசையை இப்படி செஞ்சு சாப்பிடுங்க. ஆரோக்கியமான ஒரு உணவை இதை விட ஈசியா சமைக்கவே முடியாது. மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க.

Ragi Dosai
- Advertisement -

கேழ்வரகு மாவில் நமக்குத் தெரிந்து பெரும்பாலும் அடை, களி, கூழ் போன்றவற்றை தான் செய்வார்கள். இப்பொழுது அதை வைத்து பல ரெசிபிகள் உள்ளது. ஆனாலும் அதையெல்லாம் செய்ய கொஞ்சம் நேரம் எடுக்கும் என்பதால் அதை தவிர்த்து விட்டு எப்பொழுதும் போல் நாம் உண்ணும் உணவுகளையே உடனே செய்து சாப்பிட்டு விடுகிறோம். இந்த முறையில் ராகி தோசை செய்ய 10 நிமிடமே அதிகம் தான். இதை சுலபமாகவும் செய்ய முடியும் அதே நேரத்தில் சுவையுடன் ஆரோக்கியமாகவும் இருக்கும். இந்த சமையல் குறிப்பு பதிவில் இந்த ராகி தோசை எப்படி செய்வது என்று இப்போது தெரிந்து கொள்ளலாம் வாங்க.

செய்முறை

இந்த தோசை செய்ய முதலில் ஒரு பெரிய பவுல் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரை கப் ராகி மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு கடைகளில் கிடைக்கும் இன்ஸ்டன்ட் மாவையும் பயன்படுத்தலாம். அடுத்து கால் கப் ரவை, கால் கப் பச்சரிசி மாவு இதற்கும் இடியாப்ப மாவை பயன்படுத்தலாம். இவையெல்லாம் சேர்த்த பிறகு அரை ஸ்பூன் உப்பு, கால் டீஸ்பூன் பெருங்காயம் சேர்த்து முதலில் தண்ணீர் ஊற்றாமல் ஒரு முறை கலந்து விடுங்கள்

- Advertisement -

அடுத்து ஒரு மீடியம் சைஸ் வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அதே போல் ஒரு பச்சை மிளகாய், ஒரு சிறிய துண்டு இஞ்சி, ஒரு கைப்பிடி கொத்தமல்லி, ஒரு கைப்பிடி கருவேப்பிலை, ஒரு ஸ்பூன் சீரகம் இவை அனைத்தையும் பொடியாக நறுக்கி அதையும் இந்த மாவில் சேர்த்த பிறகு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கலந்து விடுங்கள். இந்த மாவு தோசை மாவின் பதத்தை விட கொஞ்சம் தண்ணீராக இருக்க வேண்டும்.

இந்த மாவு 10 நிமிடம் ஊறிய பிறகு நீங்கள் தோசை ஊற்ற ஆரம்பிக்கலாம். அதற்கு அடுப்பில் தோசை கல் வைத்து நன்றாக சூடு ஏறிய பிறகு இதை ரவை தோசை போல ஊற்ற வேண்டும். அதனால் மாவை எடுத்து முதலில் வெளிப்புறமாக நன்றாக சுற்றி ஊற்றிய பிறகு நடுவில் ஊற்றுங்கள். அப்போது தான் எல்லா பக்கமும் ஒரே மாதிரி வெந்து மொறு மொறு வென்று கிடைக்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: புரட்டாசி மாசத்துல கறி செய்யறாங்கன்னு அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாரும் வந்து கேக்குற அளவுக்கு காலிபிளவர் வறுவல் செய்து அசத்துங்க.

தோசை ஊற்றிய பிறகு கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி ஒரு புறம் சிவந்த பிறகு மறுபுறம் திருப்பிப் போட்டு வெந்தவுடன் எடுத்து விடுங்கள். நல்ல மொறு மொறு வென்ற கிறிஸ்ப்பியான ராகி தோசை தயார். இதை விட சுலபமாக ராகி தோசையை தயார் செய்யவே முடியாது. சுவையிலும் இதை போல ஒரு தோசை இருக்க முடியாது. இதுக்கு தேங்காய் சட்னி, கார சட்னி என எது இருந்தாலும் அட்டகாசமாக இருக்கும். இந்த தோசையை நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க

- Advertisement -