நாவில் எச்சில் ஊற வைக்கும் இந்த கறிவேப்பிலை சட்னியை ஐந்து நிமிடத்தில் இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள இப்படி செய்யுங்கள்!

karuveppilai-chutney
- Advertisement -

பொதுவாக கருவேப்பிலை என்றாலே அனைவருக்கும் ஒருவித அலர்ஜி உண்டு. அதை யாரும் மென்று சாப்பிடுவது கிடையாது. சாதாரண சமையலில் கருவேப்பிலையை தனியாக ஒதுக்கி வைப்பவர்களுக்கு, இது போல சட்னி செய்து கொடுத்துப் பாருங்கள், அதனுடைய முழு சத்து சென்றடையும். தலை முடி உதிர்தல் பிரச்சனையை முற்றிலுமாக நிறுத்தக்கூடிய இந்த கறிவேப்பிலையை தவிர்ப்பது கூடாது. காரசாரமான கருவேப்பிலை சட்னியை செய்து கொடுத்தால் பத்து பதினைந்து இட்லிகளை கூட நாம் உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கலாம். எனவே ரொம்பவே சுவையான ஒரு கறிவேப்பிலை சட்னியை எளிதாக நம் வீட்டிலேயே எப்படி தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

கறிவேப்பிலை சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை – 10 இணுக்குகள், தக்காளி – 3, வர மிளகாய் – 6, சின்ன வெங்காயம் – 10, உப்பு – தேவையான அளவு, தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், கடலைப் பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள்ஸ்பூன்.

- Advertisement -

கறிவேப்பிலை சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் தக்காளியை சுத்தம் செய்து கழுவி பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள். எல்லா பொருட்களையும் எடுத்து வைத்த பின்பு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள்.

கடுகு பொரிந்ததும் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் மிளகாய் வற்றலை சேர்த்து நன்கு வதக்குங்கள். பிறகு தோல் உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்குங்கள். வெங்காயம் கண்ணாடி பதம் வர நன்கு வதங்கியதும், தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி பாதி அளவிற்கு வதங்கி வரும் பொழுது சுத்தம் செய்து வைத்துள்ள கறிவேப்பிலையை உருவி சேர்த்துக் கொள்ளுங்கள். இவை எல்லாம் சுருள வதங்கியதும், அடுப்பை அணைத்து ஆற விட்டு கொள்ளுங்கள்.

- Advertisement -

எல்லா பொருட்கள் நன்கு ஆறியதும், ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த பொருட்களை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். கருவேப்பிலையை சாதாரணமாக சமைத்துக் கொடுத்தாலும், யாரும் அதனை சாப்பிடுவதில்லை, ஒதுக்கி வைப்பது உண்டு அதற்கு பதிலாக இது போல் சட்னி, துவையல் போன்றவற்றுடன் சேர்த்து அரைத்துக் கொடுக்கும் பொழுது அதில் இருக்கும் சத்துக்கள் நமக்குக் கிடைக்கும்.

எனவே அன்றாட உணவில் கட்டாயம் கறிவேப்பிலையை ஏதாவது ஒரு உணவில் சேர்த்து வந்தால் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். அரைத்த இந்த சட்னிக்கு தாளிக்க வேண்டிய அவசியம் இல்லை, ஏற்கனவே தாளித்து தான் செய்து இருக்கிறோம் எனவே சுடச்சுட இட்லி, தோசையுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். எளிதாக மற்றும் ஆரோக்கியமான முறையில் செய்யப்படும் இந்த கருவேப்பிலை சட்னியை இதே முறையில் நீங்களும் ஒருமுறை செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -