செல்லும் காரியம் வெற்றி பெற வழிபாடு

pillaiyar valipadu
- Advertisement -

முயற்சி திருவினையாக்கும் என்ற பழமொழி அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஒரு குழந்தை கருவில் இருந்து வெளியில் வருவதிலிருந்து தன் வாழ்க்கையின் கடைசி நொடி வரைக்கும் ஏதாவது ஒரு முயற்சியை செய்து கொண்டு தான் இருக்கிறது. முயற்சி இல்லாமல் ஒரு மனிதனால் உயிர் வாழவே முடியாது மூச்சை இழுத்து விடுவது கூட ஒரு வகையான முயற்சிதான். ஒவ்வொருவரும் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் பல முயற்சிகளை செய்கிறார்கள்.

இதை தவிர்த்து தங்களுடைய வாழ்க்கையை முன்னேற்றுவதற்காக பணத்தை சம்பாதிப்பதற்காக செய்யக்கூடிய முயற்சிகளை தான் நாம் பெரிதும் பேசுகிறோம். அப்படிப்பட்ட முயற்சிகள் வெற்றி அடைந்தால் தான் அவர்களால் நல்ல நிலைக்கு வர முடியும். அப்படிப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவும் எடுத்த காரியம் நிறைவேறவும் செல்லும் காரியங்களில் எந்தவித தடைகளும் இல்லாமல் நடைபெறுவதற்கு செய்யக்கூடிய எளிமையான பரிகார முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

முயற்சிகள் வெற்றி அடைவதற்கு, தடைபட்ட காரியங்கள் தடையின்றி நடப்பதற்கு, ஒரு காரியம் வெற்றி அடைய வேண்டும் என்றாலே முதலில் நம் நினைவிற்கு வரக்கூடிய கடவுள் விநாயகர் பெருமான் தான். அவரை மனதார நினைத்துக் கொண்டு தலையில் மூன்று கொட்டை கொட்டி விட்டு சென்றால் கூட அவரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

அதையும் தாண்டி இன்னும் சில பொருட்கள் இருக்கின்றன. இந்த பொருட்களை உடன் எடுத்துச் செல்லும் பொழுது நாம் செல்லும் காரியம் கண்டிப்பான முறையில் வெற்றியடையும் என்பது உறுதி. நியாயமான காரியமாக இருக்கும் பட்சத்தில் யாரையும் துன்புறுத்தாத வகையில் இருக்கும் காரியமாக இருந்தால் கண்டிப்பாக முறையில் அந்த காரியம் வெற்றி பெறும்.

- Advertisement -

அந்த பொருட்கள்தான் எலுமிச்சம் பழமும் அருகம்புல்லும். அருகம்புல்லை பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். விநாயகப் பெருமானுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. விநாயகப் பெருமானின் மறு உருவம் என்று கூட நாம் இதை கூறலாம். இதே போல் தான் எலுமிச்சம் பழமும். எலுமிச்சம் பழத்தை நாம் ராஜகனி என்றும் தெய்வீக கனி என்றும் கூறுகிறோம். எந்த ஒரு கடவுளாக இருந்தாலும் அந்த கடவுளின் திருவடியின் கீழ் இந்த எலுமிச்சம் பழத்தை நாம் சமர்ப்பித்து விட்டு மனதார வேண்டிக் கொண்டால் கண்டிப்பான முறையில் எலுமிச்சம் பழம் நம்மை காப்பாற்றும்.

இந்த இரண்டு பொருட்களை வைத்து எப்படி காரிய தடையை நீக்குவது என்று பார்ப்போம். இன்று நாம் ஒரு காரியத்திற்காக செல்கிறோம் என்றால் முதல் நாளே நமக்கு தெரிந்துவிடும் அல்லவா? அப்பொழுது கடையில் இருந்து நல்ல சுத்தமான மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய ஒரு எலுமிச்சம் பழத்தையும் அருகம்புல்லையும் வாங்கிக் கொள்ள வேண்டும். மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்து வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்துவிட்டு இந்த எலுமிச்சம் பழத்தையும் அருகம்புல்லையும் சுத்தமான தண்ணீரில் கழுவி விநாயகரின் பாதத்தின் கீழ் வைத்து விட வேண்டும்.

- Advertisement -

விநாயகருக்காக தனியாக ஒரு நெய் தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு “ஓம் கம் கணபதியே நமஹ” என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு உச்சரித்த பிறகு நீங்கள் செல்லக்கூடிய காரியம் வெற்றி அடைய வேண்டும் அதில் எந்தவித தடைகளும் ஏற்படக் கூடாது என்று மனதார விநாயகப் பெருமானை வேண்டிக் கொள்ள வேண்டும். கற்பூர தீப தூப ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து விடுங்கள். இந்த எலுமிச்சம் பழமும் அருகம்புல்லும் விநாயகரின் பாதத்தில் அப்படியே இருக்கட்டும்.

மறுநாள் காலையில் வழக்கம் போல் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வெளியில் செல்வதற்கு முன்பாக விநாயகப் பெருமானை மறுபடியும் மனதார வழிபட்டு விட்டு எலுமிச்சம் பழத்தையும் அருகம்புல்லையும் எடுத்து தங்களுடன் வைத்துக்கொண்டு வீட்டை விட்டு கிளம்ப வேண்டும். இந்த முறையில் நாம் செல்லும் பொழுது கண்டிப்பாக முறையில் விநாயகப் பெருமானின் அருளால் நாம் செல்லும் காரியம் வெற்றி அடையும்.

இதையும் படிக்கலாமே: சண்டை வரும்போது சொல்ல வேண்டிய துர்க்கை அம்மன் மந்திரம்

மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய இந்த அருகம்புல் எலுமிச்சம் பழத்தை நாமும் நம்முடைய காரிய வெற்றிக்காக பயன்படுத்தி நன்மை அடைவோம்.

- Advertisement -