கணவன் மனைவிக்குள் சண்டை வராமல் இருக்க, வாழ்க்கை இனிக்க கற்கண்டை என்ன செய்ய வேண்டும் தெரியுமா? தித்திக்கும் கற்கண்டின் வியக்க வைக்கும் எளிய ஆன்மீக பரிகாரங்கள்!

couple-fight-karkandu
- Advertisement -

சதா கணவன் மனைவிக்குள் சண்டை வந்து கொண்டே இருந்தால் குடும்பத்தில் நிம்மதி பறி போய்விடும். இவர்களுடைய சண்டையை தீர்க்கக் கூடியவர் சுக்கிர பகவான். இந்த சுக்கிர பகவானுக்கு உகந்த ஒரு பொருள் கற்கண்டு! கற்கண்டை வைத்து செய்யக்கூடிய எளிய பரிகாரங்கள், மிகப்பெரிய அளவில் பலன்களை கொடுக்கக் கூடியதாக ஆன்மீகத்தில் இருந்து வருகிறது. மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கவும், கற்கண்டை வைத்து பரிகாரங்கள் செய்யப்படுகிறது. கற்கண்டின் இனிய பலன்கள் தரக்கூடிய ஆன்மீகம் சார்ந்த பரிகாரங்களை தான் எளிதாக இப்பதிவில் தெரிந்து கொள்ள இருக்கிறோம் வாருங்கள்.

வெள்ளிக்கிழமை தோறும் தம்பதியராக சென்று நவகிரகங்களில் இருக்கக்கூடிய சுக்கிர பகவானுக்கு இரண்டு அகல் விளக்குகள் புதிதாக வைத்து அதில் நெய் ஊற்றி கற்கண்டு போட்டு தீபம் ஏற்றி மனதார வழிபட வேண்டும். எப்பொழுதும் தங்களுக்குள் சண்டை வரக்கூடாது, ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். அடுத்தடுத்த நாட்களில் உங்களுக்குள் இருக்கும் மனக்கசப்புகள் இனிப்பாக மாற துவங்கும்.

- Advertisement -

மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி வெள்ளிக்கிழமையில் டைமன் கற்கண்டு போட்டு விளக்கு ஏற்றி வழிபடுவதோடு மட்டுமல்லாமல், அந்த பிரசாதத்தை வீட்டில் இருக்கும் அனைவரும் சாப்பிட்டால் குடும்பத்தில் ஒற்றுமையும், அன்பும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். மகாலட்சுமியின் அருள் கிடைக்கும், செல்வங்கள் பெருக துவங்கும்.

சுக்கிர பகவானுடைய அம்சமாக இருக்கக்கூடிய இந்த கற்கண்டை பெருஞ்சீரகத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது செரிமான சக்தி அதிகரிக்கிறது மேலும் இது ராகு பகவானுடைய பாதகமான கெடு பலன்களை குறைக்கக்கூடிய ஆற்றலும் பெற்றுள்ளது. நினைவாற்றலையும், நேர்மறை சிந்தனைகளையும் கொடுக்கக்கூடிய ஒரு பரிகாரமாக இது இருந்து வருகிறது. எனவே தினமும் சாப்பிட்ட உடன் பெருஞ்சீரகத்துடன் சேர்த்து கற்கண்டை உட்கொள்ளுங்கள்.

- Advertisement -

மனதிற்கு பிடித்த வேலை அமைய வேண்டும் என்று வேண்டுபவர்கள் புதன் கிழமைகளில் புத பகவானுக்கு கற்கண்டை வைத்து வழிபட்டு, அதை பக்தர்களுக்கு பிரசாதமாக தானம் கொடுக்க வேண்டும். மேலும் நீங்கள் கற்பூரத்தை ஏற்றி வைக்கும் பொழுது சிறிதளவு கற்கண்டை பொடித்து எரித்து விடுங்கள். இதனால் உங்களை பீடித்துக் கொண்டிருந்த தோஷங்கள் விலகி, விரைவில் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

செய்த பாவங்களை நீக்கக்கூடிய சக்தி சனி பகவானுக்கு உண்டு. சனி பகவானுடைய பிடியிலிருந்து விடுபட்டு மேலும் அவருடைய கெடுபலன்களை குறைத்து சுபீட்சத்தை உண்டாக்கக்கூடிய அருமருந்தாகவும் கற்கண்டு பொடி செயல்படுகிறது. கற்கண்டை பொடித்து அரிசி மாவுடன் சேர்த்து கட்டெறும்பு வரக்கூடிய இடங்களில் தூவி தானம் செய்யும் பொழுது நம்முடைய சாதகமற்ற சூழ்நிலை மாறி, அனுகூலமான பலன்களை ஏற்படுத்தும்.

- Advertisement -

சுக்கிர பகவான் சுக போக வாழ்க்கையை கொடுக்கக் கூடியவர். ஆடம்பரத்தையும், சுகங்களையும் வாரி வழங்கக்கூடிய இவர் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைய உதவுகிறார். பண பிரச்சனையை தீர்த்து மகிழ்ச்சியையும், செல்வத்தையும் அதிகரிக்க செய்கிறார். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்டிருக்கும் பிரிவினையை அகற்றி அவர்களுக்குள் இன்பமான ஒரு வாழ்க்கை அமையவும் சுக்கிர அருள் தேவை எனவே இந்த சுக்கிரனுக்கு உரிய கற்கண்டை தினமும் பூஜை அறையில் நைவேத்தியமாக படைத்து, விளக்கில் கற்கண்டுகளை போட்டு தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள்.

இதையும் படிக்கலாமே:
உண்டியலில் முதலில் இந்த பொருளை போட்டால் பணம் சீக்கிரம் சேரும். உண்டியல் நிரம்பி வழியும்.

மேலும் இதை பிரசாதமாக தினமும் சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள். திருமண விழாக்களின் பொழுது கற்கண்டை கொடுப்பது மற்றும் கற்கண்டு வைத்து சுப நிகழ்ச்சிகளை நடத்துவது போன்றவற்றின் பின்னணியிலும் ஆன்மீகம் மற்றும் ஜோதிட ரீதியான காரணங்கள் ஒளிந்து கொண்டுள்ளது. ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு உகந்த இந்த கற்கண்டை நான்கிலிருந்து ஐந்து தினமும் சாப்பிட்டால் உடலும், மனமும் வலிமையாகும், நாவில் தீய வார்த்தைகளும் வராது, சொன்னது பலிக்கும்.

- Advertisement -