நம் வாழ்க்கையை ஆட்டி படைத்துக் கொண்டிருக்கும் கர்மா! இதை 9 விதிகளில் எப்படி நம் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்ப்பது?

karma-yoga
- Advertisement -

ஒரு மனிதன் செய்யும் பாவம் மற்றும் புண்ணிய வினைகளுக்கு ஏற்பவே கர்மா உண்டாகிறது. கர்மா என்றதும் அதை கெட்ட விஷயமாகவே பார்க்கின்றோம். நல்ல கர்மா மற்றும் கெட்ட கர்மா இரண்டுமே உண்டு. செய்த புண்ணியத்திற்கு ஏற்ப திடீரென தலைக்கு வந்தது தலைப்பாகையோடு செல்லும், அதை நல்ல கர்ம வினையால் உண்டானது என்கிறோம். அதே போல செய்த பாவத்திற்கு ஏற்ப அனுபவிப்பதை கெட்ட கர்ம வினை என்கிறோம். நம்முடைய கர்மா எப்படி எல்லாம் நம் வாழ்க்கையில் ஆட்டி படைக்கிறது? என்பதை இந்த 9 விதிகள் தீர்மானிக்கிறது. அது என்னென்ன? என்பதை இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம் வாருங்கள்.

கர்மா விதி 1:
இவ்வுலகில் நாம் என்ன செய்கிறோமோ அதுவே தான் நமக்கு திரும்பவும் வேறு வகையில் வந்து சேர்கிறது. நல்லது செய்தால் நல்லதும் கெட்டது செய்தால் கெட்டதும் நமக்கு தெரியாமல் கிடைத்துக் கொண்டிருக்கும்.

- Advertisement -

கர்மா விதி 2:
நமக்கு வேண்டியதை நாம் தான் செய்து கொள்ள வேண்டும். எதுவும் நம் வாழ்க்கையில் அதுவாக நடப்பது கிடையாது. எண்ணியதை அடைய இலக்கை நோக்கி விடா முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.

கர்மா விதி 3:
நம் வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழ சில விஷயங்களை பிடிக்குதோ, இல்லையோ அதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்பது மூன்றாம் விதியாகும். எதையும் புறக்கணித்தால் புண்பட வேண்டி இருக்கும்.

- Advertisement -

கர்மா விதி 4:
மற்றவர்களை மாற்றுவதற்கு முன்பு நம்மை நாம் திருத்தி கொண்டாலே நமக்கு நடக்க வேண்டியவை நம் வாழ்வில் மாற்றம் உண்டாகி நடக்க ஆரம்பிக்கும். இதுவே நான்காம் விதி ஆகும்.

கர்மா விதி 5:
நமக்கு யார் என்ன செய்தாலும், அது நாம் செய்யும் வினைக்கான பயனே ஆகும் எனவே எது நடந்தாலும் அது மற்றவர்களை சார்ந்தது அல்ல! நாம் தான் அதற்கான பொறுப்பு! என்பதை உணர வேண்டும் இது ஐந்தாம் கர்ம விதி ஆகும்.

- Advertisement -

கர்மா விதி 6:
முக்காலமும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணையப்பட்டதே ஆகும். நேற்று, இன்று, நாளை இந்த மூன்று காலங்களும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டு இருக்கும். இன்று நீங்கள் செய்யும் செயலுக்கான கர்மமே நாளை அனுபவிப்பீர்கள்.

கர்மா விதி 7:
ஒரு விஷயத்தை நினைத்து மூழ்கி விட்டால் வேறு ஒரு விஷயத்தை பற்றி நினைக்க முடியாது. ஒரே சமயத்தில் இரு வேறு விஷயங்களை நினைத்து கொண்டிருக்க முடியாது. இது கர்மாவின் ஏழாவது விதியாகும்.

கர்மா விதி 8:
நாம் நடந்து கொள்ளும் விதம் நம்முடைய செயலையும், நம்முடைய எண்ணத்தையும் பிரதிபலிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். மனதில் ஒன்றையும், நடத்தையில் ஒன்றையும் காண்பிக்க கூடாது.

இதையும் படிக்கலாமே:
பெண்களிடம் இருக்கும் தரித்திரம் நீங்கி அவர்கள் கையில் பணம் அதிகம் புழங்க இந்த 3 விஷயங்களை செய்யலாமே!

கர்மா விதி 9:
சிலர் எதிர்காலத்தை நினைத்து குதிரைக்கு கடிவாளம் கட்டியது போல ஓடிக் கொண்டே இருப்பார்கள். எதிர்காம் முக்கியம் தான், இருப்பினும் எதிர்காலத்தை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தால் நிகழ்காலம் நமக்கு பல இழப்புகளை ஏற்படுத்தி விட்டு சென்றுவிடும். மனிதனால் மீண்டும் பெற முடியாதது நிகழ்காலம் ஆகும். இது கர்ம விதியின் கடைசி விதியாகும்.

- Advertisement -