எந்நேரமும் சண்டையும் சச்சரவுமாக இருக்கும் வீட்டை கூட அமைதி பூங்காவை போல் மாற்றிட, இதை தவறாமல் செய்தாலே போதும்

- Advertisement -

வாழ்க்கை என்றால் எல்லாம் கலந்து தான் இருக்கும் என்ற வார்த்தை நியாயமானது தான். ஆனால் எல்லாம் கலந்து இருக்க வேண்டும் இன்பம் ,துன்பம் சந்தோஷம், வரவு, செலவு என்று அனைத்தும் கலந்து இருந்தால் பிரச்சினை இல்லை. சிலருக்கு எந்நேரமும் பிரச்சனையும், சண்டையும், துக்கமும் ஆக  இருந்தால்  அந்த வாழ்க்கை கட்டாயம் சலிக்கத் தான் செய்யும். நாம் செய்யும் சில விஷயங்கள் இப்படியான சூழ்நிலைகளை மாற்றி நமக்குள் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மட்டுமில்லாமல் நம்மை சுற்றி இருக்கும் எதிர்மறை ஆற்றலையும் நீக்கி, நாம் நிம்மதியான வாழ்க்கையை வாழ உதவி செய்யும் என்று ஆன்மீகம் கூறுகிறது. அது என்ன என்று இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

பிரச்சனைகள் தீர பரிகாரம்
மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முதலில் தேவையானது மன நிம்மதி. அந்த மன நிம்மதியானது நம் இருக்கும் இடம் தொழில் செய்யும் இடம் இவைகள் சரியாக அமைந்தால் தான் அமையும். அங்கு நல்ல சூழல் அமையாத பட்சத்தில், இது போன்ற நிம்மதி இழக்கும் சூழ்நிலைகள் தோன்றும். அதை சரி செய்ய நம் பெரியோர்கள் கண்ட கை கண்ட மருந்து எல்லோருக்கும் தெரிந்த கல் உப்பு தான். இந்த கல்லுப்பை வெள்ளி, செவ்வாய் போன்ற நாட்களில் சுத்தமான தண்ணீரில் கலந்து நீங்கள் இருக்கும் இடத்தைச் சுற்றி தவறாமல் தெளித்து வந்தால் போதும் அங்கிருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மாறுவதோடு இல்லாமல், உங்கள் வீட்டிற்கு எதிர்மறை எண்ணத்தோடு அல்லது உங்களை அழிக்கும் எண்ணத்தோடு யாராவது வந்தால் கூட,  அவர்களின் மனநிலையும் நேர்மறையாக மாற்றும் சக்தி இந்த உப்பிற்கு உண்டு.

- Advertisement -

அடுத்தது உங்கள் வீடு, அலுவலகம் இப்படி எந்த இடமாக இருந்தாலும் அங்கு வட கிழக்கு மூலையில் ஏதாவது ஒரு செடியை புதிதாக வாங்கி வந்து வையுங்கள். இந்த செடி வேறு யார் வீட்டிலிருந்தோ அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் பழைய செடியை வைக்க வேண்டாம். இதற்காக புதிதாக வாங்கி வந்து வைக்க வேண்டும். அப்படி வைக்க முடியாத பட்சத்தில் அந்த இடங்களில் பசுமையான நிறங்களைக் கொண்ட படங்களை மாட்டி வைக்கலாம். இதுவும் உங்களுடைய இந்த எதிர்மறையாற்றலை நீக்கி நேர்மறை ஆற்றலை அதிகப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

அடுத்ததாக வட கிழக்கு மூலையில் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றாக சந்தோஷமான மனநிலையில் எடுத்த புகைப்படங்கள் இருந்தால் அதை மாட்டி வைக்கலாம். இதுவும் குடும்பத்தின்  அமைதியற்ற சூழ்நிலையை மாற்றும். இதே அலுவலகமாக இருந்தால் அங்கு நண்பர்களுடன் எடுத்த படங்களை  வாய்ப்பு இருந்தால் மாட்டி வைக்கலாம்.

- Advertisement -

இவையெல்லாம் விட இன்னும் மிக எளிமையான காரியம் கை தட்டுவது. என்ன கைத்தட்ட வேண்டுமா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. சாதாரணமாக உங்கள் கைகளை தட்டி அந்த இடத்தில் ஒலிகளை எழுப்பினாலே போதும். அந்த ஒலியானது நேர்மறை ஆற்றலை அந்த இடத்தில் அதிகப்படுத்தும்.

இந்த எளிய பரிகாரங்களை எல்லாம் செய்வதற்கு முன்பு உங்கள் நிம்மதியோ, அமைதியோ கெடுவதற்கு உங்களின் நேரம், எதிர்மறை எண்ணங்கள் காரணமாக இருந்தால் இதன் மூலம் சரி செய்து கொள்ளலாம். ஆனால் உங்களின் குணங்களோ நடந்து கொள்ளும் சுபாவங்களில்  இந்த பிரச்சனைகள் இருந்தால் கட்டாயம் நீங்கள் தான் அதை சரி செய்து கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்க செய்ய வேண்டிய முக்கியமான 5 விஷயங்கள் என்ன தெரியுமா? வாழ்க்கையில் இருக்கும் எல்லா பிரச்சனைகளும் தீர இதை செய்யலாமே!

இதில் குறிப்பிட்டிருக்கும் ஒவ்வொரு விஷயமும் நாம் நம்மை சுற்றி இருக்கும் நேர்மறை எண்ணத்தை அதிகப்படுத்தி கொள்வதற்காக செய்து கொள்வது. இதன் மூலம் அடுத்தவருடைய கெட்ட பார்வையோ, கெட்ட  எண்ணங்களோ நம்மை தாக்காமல் காத்துக் கொள்ள முடியும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த முறைகளை முயற்சித்து பாருங்கள். உங்கள் வாழ்க்கையிலும் இதனால் மாற்றம் ஏற்பட்டது சந்தோஷமான சூழ்நிலை உருவானால் நல்லது தானே.

- Advertisement -