ரோஜா செடி நிறைய பூ பூக்க பெஸ்ட் டிப்ஸ் என்ன? பூச்சித்தொல்லை, எறும்பு தொல்லை, பூஞ்சை தொல்லை நீங்க 1/2 லிட்டர் இந்த தண்ணீர் தெளித்தால் போதும்!

karpooravalli-rose-plant
- Advertisement -

நாம் ஆசையாக வீட்டில் வளர்க்கக் கூடிய ரோஜா செடியில் நிறைய பூ பூக்க வேண்டும்ன்னு தான் எல்லாரும் ஆசைப்படுவோம். ரோஜா செடியின் வளர்ப்பில் ரொம்பவே எளிமையாக கொடுக்கக் கூடிய இந்த ஒரு பூச்சிக் கொல்லி மருந்து நம் வீட்டிலேயே எளிதாக தயாரிக்க கூடியதாக இருக்கிறது. இந்த ஒரு செடி நம் வீட்டில் இருந்தால் ரோஜா செடிக்கு நல்ல ஒரு பூச்சிக் கொல்லி மருந்தாகவும் செயல்படுமாம். அப்படி என்ன செடி அது? அதிலிருந்து நாம் தயாரிக்க இருக்கும் பூச்சிக் கொல்லி மருந்து என்ன? என்பது போன்ற எளிய தோட்டக்குறிப்பு தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ள போகிறோம்.

காஷ்மீர் ரோஜா, ஊட்டி ரோஜா, பன்னீர் ரோஜா என்று விதவிதமாக நம் விருப்பத்திற்கு ஏற்ப விதவிதமான வண்ணங்களில் வளர்க்கப்படும் இந்த ரோஜா செடிகளில் அடிக்கடி பூச்சி தொந்தரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. நாம் கொடுக்கக் கூடிய இயற்கை உரங்கள் கூட சில சமயங்களில் அதிகப்படியான எறும்புகளை வரவழைத்து விடும் அபாயம் உண்டு.

- Advertisement -

டீ போடும் பொழுது மிஞ்சிய டீ தூளை ரோஜா செடிகளுக்கு போடுவோம். இதில் நாம் கவனிக்க வேண்டியது, அதில் இருக்கும் சர்க்கரை! சர்க்கரை போடாத டீ தூளை தான் செடிகளுக்கு உரமாக போட வேண்டும். சர்க்கரை சேர்த்து விட்டால் அது எறும்புகளை வரவழைத்து விடும். மேலும் பல்வேறு வகையான பூச்சி தொந்தரவுகளையும் அது செடிகளுக்கு கொடுத்து விடும்.

அது போல ரோஜா செடிகளுக்கு வரக்கூடிய பூஞ்சை தொற்றுகளும் அதிகம். அதிகப்படியான ஈரப்பதமும், போதிய வெளிச்சம் இன்மையும் பூஞ்சை தொற்றுகளை ஏற்படுத்தும். செடிகள் நோய் தாக்குதல்களுக்கு ஆளாகும் பொழுது, அதை உடனடியாக கவனிக்க வேண்டியது முக்கியம். பொதுவாக ரோஜா செடிகளுக்கு வேப்ப எண்ணெயை பூச்சிக்கொல்லி மருந்தாக கொடுக்கலாம் ஆனால் நம் வீட்டில் வளரக்கூடிய துளசி அல்லது கற்பூரவள்ளி போன்ற இயற்கையான செடிகளை கொண்டும் வீட்டிலேயே பூச்சிக் கொல்லி மருந்துகளை எளிதில் தயார் செய்து விடலாம்.

- Advertisement -

சாதாரண துளசியை விட கருந்துளசி எனப்படும் கற்பூரவள்ளி இலைகள் இருந்தால் ரொம்பவே நல்லது. அதில் பத்து இலைகளை பறித்து மிக்ஸியில் போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதனுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த இந்த கலவையுடன் மூன்றிலிருந்து நான்கு லிட்டர் அளவிற்கு தாராளமாக தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளலாம். இதை எல்லா வகையான செடிகளுக்கும் அரை லிட்டர் வீதம் 15 நாட்களுக்கு ஒரு முறை வேரிலிருந்து, செடி முழுவதும் தெளிக்கலாம்.

இதையும் படிக்கலாமே:
ரோஸ் செடிக்கு முதல் உரமாக இதை மட்டும் கொடுத்துட்டீங்கன்னா போதும். உங்க ரோஸ் செடி வருஷம் முழுசும் பூத்துகிட்டே இருக்கும்.

குறிப்பாக ரோஜா செடியின் வேர்கால்களில் இந்த மருந்தை ஊற்றி விட்டு, ஸ்பிரே பாட்டிலில் கூட அடைத்து வைத்து இலைகள் மற்றும் காம்புகளில் படும்படி ஸ்பிரே செய்து கொள்ளுங்கள். இது போல தொடர்ந்து செய்து வந்தால் பூச்சி தொந்தரவுகள், எறும்பு தொந்தரவுகள், பூஞ்சை தொற்றுகள் போன்றவற்றிலிருந்து எளிதாக ரோஜா செடி தப்பித்துக் கொள்ளும். இதனால் பூக்களும் நிறைய பூக்க ஆரம்பிக்கும், புதிய தளிர்கள் வளரும்.

- Advertisement -