இதுவரைக்கும் கற்பூரத்தை பூஜைக்கு மட்டும் தான் பயன்படுத்தியிருப்பீங்க? இனிமேல் இப்படி பயன்படுத்தி பாருங்க. எவ்வளவோ செலவு மிச்சமாகும்.

karpooram
- Advertisement -

நமக்கு எல்லாம் கற்பூரம் அப்படின்னு சொன்னதுமே என்ன நியாபகம் வரும். கோவில், சாமி, பூஜை இதானே. ஆனால் கற்பூரத்தை பயன்படுத்தி இத்தனை விஷயங்களை பண்ண முடியுமா என்றால், எல்லோராலும் அவ்வளவு சுலபத்தில் நம்ப முடியாது தான். நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் அதுதான் உண்மை. உங்களுக்கே தெரியாத கற்பூரம் பற்றிய பல விஷயங்கள் இந்த குறிப்பில் இருக்கிறது. தேவைப்படுபவர்கள் படித்து பலன் பெறலாம்.

மூன்று சிறிய அளவிலான பூங்கற்பூரத்தை பவுடர் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு டீஸ்பூன் நெய் கலந்து அப்படியே சிறிது நேரம் குழைத்தால் தைலம் போல் வரும். இதை தலைவலி வரும் நேரங்களில் தேய்த்து பாருங்கள். உடனே தலைவலி சரியாகிவிடும்.

- Advertisement -

அடுத்து இந்த கற்பூரத்தை பவுடராகி டிஷ்யூ பேப்பரிலோ அல்லது ஒரு வெள்ளை துணியிலோ கொட்டி சிறிய பொட்டலமாக மடித்து உங்கள் அரிசி முட்டையில் போட்டு விட்டால் போதும் வண்டு வராது. அரிசி மங்கும் வாடையும் வராது. இதனால் அரிசியில் கற்பூர வாடை வருமா என்று பயம் வேண்டாம் அப்படி எல்லாம் வராது. கற்பூர பவுடர் கலந்த தண்ணீரில் ஒரு காட்டன் துணியை நனைத்து அதை ஒட்டடை குச்சியின் பின்புறம் கட்டி விடுங்கள். பிறகு உங்கள் வீட்டில் எந்த மூலைகளில் ஒட்டடை அதிகம் சேருமோ, அங்கெல்லாம் இந்த துணியை வைத்து துடைத்து விடுங்கள். இந்த கற்பூரவாடைக்கு சீக்கிரத்தில் ஒட்டடை அண்டாது. வீடும் நறுமணமாக இருக்கும். சிலந்தி பூச்சிகள் வருவதும் குறையும்

ஒரு டிஷ்யூ பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். பெரிய அளவு கற்பூரம் (இதை பவுடராக்க வேண்டாம்) முழுதாக வைத்து பொட்டலம் போல் மடித்து உங்கள் துணிகளுக்கிடையே பீரோவில் வைத்தால் துணியுடன் சேர்ந்து பீரோவும் மணம் வீசும். பூச்சிகளும் வராது. விளக்கு திரியை இந்த கற்பூர டப்பாவில் போட்டு வைத்தால், தீபம் ஏற்றும் போது உடனடியாக பற்றிக் கொள்ளும். தீபம் எரியும் போது அந்த எண்ணெய்யிலோ, நெய்யிலோ இந்த கற்பூர பவுடரை சிறிது கலந்தால் போதும். வாசமும் நன்றாக இருக்கும். இந்த வாசத்திற்கு வீட்டில் கொசுக்களும் அண்டாது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: இட்லி தோசை மாவில் உள்ள புளிப்பை நீக்க சூப்பரான டிப்ஸ்.

ஒரு பிளாஸ்டிக் கப்பில் கால் டீஸ்பூன் கற்பூரம், ஒரு சிட்டிகை ஜவ்வாதும், கலந்து தண்ணீர் ஊற்றி அடுப்பறையில் வைத்து விட்டால், நீங்கள் நான்வெஜ் சமைத்தேன் என்று சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு அதன் வாடையே தெரியாது.

இதே போல் கற்பூரத்தை ஒரு பாட்டில் தண்ணீரில் கலந்து ரூம் ஸ்பிரே போல் ஆங்காங்கே அடித்துவிட்டால் ஈ கொசு போன்றவை ஆங்காங்கே மொய்க்காது. கற்பூரத்தை வைத்து இதனை பயன்கள் நமக்கு இருக்கிறது. இந்த குறிப்புகள் உங்களுக்கு பிடித்தால் பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

- Advertisement -