என்னங்க கொத்தமல்லி செடியை எப்படி வெச்சாலும் வரமாட்டேங்குதா? இந்த ட்ரிக்ஸை பாலோ பண்ணுங்க. மூணே நாளில் கொத்தமல்லி செடி கிடுகிடுவென காடு போல வளர ஆரம்பிக்கும்.

- Advertisement -

வீட்டில் வளர்க்கக் கூடிய செடிகளிலே மிகவும் சுலபமாக வளர்க்கக் கூடியது என்றால் இந்த கொத்தமல்லி செடி தான். இதற்கென தனியாக இட வசதியோ, பெரிய பரமாரிப்பு செலவு என எதுவுமே தேவையில்லை. வீட்டில் தேவையில்லாமல் இருக்கும் ஒரு சின்ன பிளாஸ்டிக் டப்பா இருந்தாலே போதும். நம் வீட்டிற்கு தேவையான கொத்தமல்லியை நாமே பயிரிட்டு கொள்ளலாம். ஆனாலும் இந்த கொத்தமல்லி செடியை எல்லோராலும் சுலபமாக வளர்க்க முடிவதில்லை என்றே சொல்லலாம்.

இதற்கு காரணம் வளர்ப்பதற்கான சரியான வழிமுறை தெரியாதது தான். இந்த வீட்டுத் தோட்டம் குறித்த பதிவில் உள்ள வழிமுறைகளின் படி நீங்களும் கொத்தமல்லி செடியை பயிரிட்டு பாருங்கள். மூன்றே நாளில் முளைத்து செடி காடு போல வளரும். முதலில் தரமான மல்லி விதைகளை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு சிலர் உடைத்த மல்லிகளை கடையில் வாங்கி வந்து பயன்படுத்துவார்கள். அது போன்ற மல்லி விதைகள் நட்டு வைத்தால் செடிகள் முளைத்து வராது. இதற்கு முழு மல்லி விதைகளை வாங்கி வந்து அதை பயன்படுத்தும் போது தான் செடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

- Advertisement -

இப்போது வாங்கி வந்த மல்லி விதைகளை ஒரு மெல்லிய காட்டன் துணியில் போட்டு அதன் மேல் இன்னொரு காட்டன் துணியை போட்டு மூடி விடுங்கள். பிறகு நம் வீட்டில் சப்பாத்தி திரட்ட பயன்படுத்தும் கட்டையை இந்த துணியின் மேல் வைத்து லேசாக உருட்டி விட்டால் விதைகள் எல்லாம் இரண்டாக உடையும். இதை உருட்டும் போது மிகவும் மெதுவாக உருட்ட வேண்டும். அதன் பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் இந்த விதைகளை போட்டு இரண்டு மணி நேரம் வரை தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் உங்களிடம் இருக்கும் இயற்கையான உரங்கள் எது இருந்தாலும் அதில் நீங்கள் உடைத்த இந்த மல்லி விதைகளை போட்டு விடுங்கள். அதன் பிறகு நன்றாக அந்த உரத்தில் இந்த விதைகளை கலந்து ஒரு காட்டன் துணியில் இந்த உரக்கலவையை சேர்த்து இறுக்கமாக கட்டி இதன் மேல் லேசாக தண்ணீர் தெளித்து வையுங்கள். இதை உங்கள் வீட்டு ஜன்னல் கம்பிகளில் கட்டி தொங்க விட்டு விடுங்கள். அவ்வப் போது ஈரம் பட்டு கொண்டே இருக்க தண்ணீர் தெளித்து விடுங்கள். மூன்று நாள் வரை இப்படி இருந்தால் போதும். இதில் நீங்கள் போட்ட விதைகள் அனைத்தும் முளைத்திருக்கும்.

- Advertisement -

அதன் பிறகு உங்கள் வீட்டில் சிறிய தொட்டி அல்லது ஏதாவது ஒரு பிளாஸ்டிக் டப்பாவின் அடியில் துளைகள் போட்ட பிறகு அந்த டப்பாவில் கொஞ்சம் மண்ணை நிரப்பி கொள்ளுங்கள். அதன் பிறகு தேங்காய் நார் உரம் இருந்தால் அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. அதற்கு மேல் முளைத்த மல்லி விதைகளை தூவி விடுங்கள். இப்போது மேலே லேசாக மண்ணை போட்டு விதைகள் தெரியாத அளவிற்கு மூடி லேசான வெயில் படும் இடத்தில் வைத்து விடுங்கள்.

இந்தத் தொட்டிக்கு கொஞ்சமாக தண்ணீர் தெளித்து விட்டால் மட்டும் போதும். மூன்று நாட்கள் கழித்து செடிகள் நன்றாக முளைத்து வந்திருக்கும் அந்த சமயத்தில் இதை எடுத்து வெயில் படும் இடத்தில் வைத்து விடுங்கள். அதன் பிறகு ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதற்கு தண்ணீர் ஊற்றினாலே போதும். கொத்தமல்லிகள் துளிர்த்துக் கொண்டே இருக்கும். இதிலிருந்து அவ்வப்போது உங்கள் சமையலுக்கு தேவையானவற்றை மட்டும் நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். மீண்டும் மீண்டும் துளிர்த்து கொண்டே இருக்கும்.

இதையும் படிக்கலாமே: ஒவ்வொரு கிளையிலும் கொத்து கொத்தாக ரோஜா பூக்கள் பூக்க வீட்டிலேயே நீங்க என்ன செய்யனும் தெரியுமா? இதை தண்ணீரிலே கலந்து கொடுத்தால் போதுமே!

கொத்தமல்லி செடியை இது போன்ற டிப்ஸை பயன்படுத்தி சுலபமாக முளைக்க வைத்து நீங்கள் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் போது இயற்கையாக நாமே விளைவித்து பொருளில் பயன்படுத்துவது நல்லது தானே. அது மட்டும் இன்றி இது போன்ற தோட்ட வேலைகளிலும் சின்ன சின்ன விஷயங்களிலும் உங்கள் வீட்டு குழந்தைகளை ஈடுபடுத்துங்கள். இதன் மூலம் அவர்களுக்கு தோட்ட பராமரிப்பு பற்றி தெரிவதுடன் தானே பயிரிட்ட பொருட்களை வீணாக்காமல் உண்ண வேண்டும் என்ற நல்ல பழக்கமும் வரும்.

- Advertisement -