நவகிரக தோஷங்களில் இருந்து விடுபட கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமை வழிபாடு

navagragam1
- Advertisement -

கார்த்திகை மாதம் திங்கட்கிழமைக்கு மட்டும் சிறப்பு கிடையாது. கார்த்திகை ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டில் ஒவ்வொரு மாதிரியான பிரச்சனைகள் இருக்கிறது. அந்த பிரச்சனைகள் தீருவதற்கு பெரும்பாலும் பெண்கள் தான் இறை வழிபாடு செய்வார்கள்.

அந்த வரிசையில் இன்று பெண்களுக்காக இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு. இதை ஆண்களும் பின்பற்றலாம் தவறு கிடையாது. இருந்தாலும் பெண்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் போது அந்த வழிபாட்டிற்கு ஒரு சிறப்பான பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு

நிறைய குடும்பங்களில் இருப்பவர்களுக்கு ஜாதக கட்டத்தில் நவகிரகங்களால் ஏதாவது ஒரு தோஷம் இருக்கும். சில பேருக்கு திருமணம் நடக்காது. சில பேருக்கு குழந்தை பாக்கியம் இருக்காது. சில பேருக்கு படிப்பு சரியாக வராது.

சின்ன பிள்ளைகள் படிப்பிலும் சரி, மத்த விஷயங்களில் சரி ரொம்ப ரொம்ப மந்தமாக இருப்பார்கள். இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் வருவதற்கு காரணம் நம்முடைய தலையெழுத்து நம்முடைய ஜாதக கட்டம். ஜாதகத்தில் இருக்கும்  தோஷங்கள் விலக வேண்டுமென்றால், இந்த கார்த்திகை மாதத்தில் வாரம்தோறும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டு பெண்கள் எப்படி வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

ஜாதக தோஷம் நீங்க கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமை வழிபாடு

எதுவுமே கிடையாதுங்க. இந்த கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமையில் அசைவம் எதுவும் சாப்பிடாமல், வீட்டை சுத்தமாக வைத்துக் கொண்டு காலை மாலை இரண்டு வேலையும் பூஜையறையில் விளக்கு ஏற்ற வேண்டும். நிலை வாசலில் இரண்டு விளக்கு ஏற்ற வேண்டும். இந்த விளக்கு கிழக்கு பார்த்தவாறு எறிய வேண்டும்.

இப்படியாக கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, குடும்பத்தில் இருப்பவர்களுடைய கிரக தோஷம் நீங்க வேண்டும் என்று வேண்டுதல் வைத்தால் உங்களுடைய குடும்பத்திற்கு நவகிரகங்களால் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது. இருக்கின்ற நவகிரக பாதிப்பும் நிவர்த்தி ஆகிவிடும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

இப்படி ஞாயிற்றுக்கிழமை அன்று நீங்கள் ஏற்றி வைக்கக் கூடிய தீப ஒளியில் உங்கள் குடும்பமே பிரகாசமாக ஜொலிக்கும். முதல் ஞாயிற்றுக்கிழமை இந்த தீப வழிபாட்டை தொடங்குகிறீர்கள் அல்லவா. அதேபோல தொடர்ந்து 12 ஞாயிற்றுக்கிழமைகள் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மாதவிலக்கு வந்த வாரத்தை தவிர்த்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: எதிரிகளை அடக்கும் சாம்பல் தயார் செய்யும் முறை

வீட்டில் விளக்கு ஏற்ற உங்களைத் தவிர வேறு யாராவது இருந்தால் அவர்களிடம் சொல்லி இந்த விளக்கை ஏற்ற சொல்லலாம். 12 ஞாயிற்றுக்கிழமைகள் இந்த விளக்கு உங்கள் வீட்டில் எரிந்தால் நிச்சயம் உங்கள் இல்லம் இந்த தீபக் சுடரில் பிரகாசமாக மாறிவிடும் என்ற இந்த தகவலோடு இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -