நாளை கார்த்திகை பௌர்ணமி தினத்தில் இதை எல்லாம் மறக்காமல் செய்வதன் மூலமாக சிறப்பான பலன்களை பெற முடியும்.

Karthigai pournami
- Advertisement -

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி திதி வருவது வழக்கமானது தான் என்றாலும், கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை பௌர்ணமி மற்ற அனைத்து பௌர்ணமி திதிகளைக் காட்டிலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதிலும் நாளைய பௌர்ணமி தினம் என்பது முருகப்பெருமானுக்குரிய கார்த்திகை நட்சத்திரமும், சந்திர பகவானுக்குரிய ரோகிணி நட்சத்திரமும் கொண்டதாக வருகின்றது. எனவே இத்தகைய சிறப்பு வாய்ந்த தினத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

கிருத்திகை எனும் கார்த்திகை என்பது முருகப் பெருமானுக்குரிய நட்சத்திரம் ஆகும். ரோகிணி நட்சத்திரம் என்பது சந்திர பகவானுக்குரியது. புராணங்களின்படி சந்திர பகவான் என்பவர் செல்வ மகளான லட்சுமி தேவியின் சகோதரன் ஆவார். பெண் தன்மை மிகுந்த சந்திரன் சக்தியாகிய அம்பாளின் அம்சத்தை பிரதிபலிக்கும் கிரகமாக உள்ளார். எனவே அம்பாள் வழிபாடு செய்வதற்கு ஏற்ற தினமான பௌர்ணமி திகழ்கிறது.

- Advertisement -

நாளை கார்த்திகை பௌர்ணமி தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு, தேநீர், காபி உட்பட எதையும் அருந்தாமல் உண்ணா நோன்பு இருப்பது சிறப்பு. வீட்டில் இருக்கும் பூஜையறையை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்பு உங்கள் பூஜை அறையில் அரிசி மாவு கோலமிட்டுக்கொள்ளுங்கள். முருகப்பெருமானுக்குரிய சிறிய அளவிலான வேல் உங்கள் பூஜையறையில் இருக்கும் பட்சத்தில் ஒரு மர பீடத்தில், ஒரு செம்பு பாத்திரத்தில் அரிசியை நிரப்பி, அந்த வேலுக்கு சந்தனம், மஞ்சள், குங்குமம், பொட்டு இட்டு, அந்த வேலை அரிசியில் சொருகி வையுங்கள். பின்பு அந்த வேலுக்கு வாசம் மிக்க மலர்களை சாற்ற வேண்டும். பிறகு ஒரு செம்பு அல்லது வெள்ளி விளக்கில் தீபம் ஏற்றி வைத்து, அதனுடன் 6 மண் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வைத்து, பால் பழம் போன்றவற்றை நைவேத்தியமாக வைக்க வேண்டும்.

பிறகு பூஜையறையில் சாஷ்டாங்கமாக அமர்ந்து முருகனுக்குரிய கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற பாடல்களை துதித்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த தினத்தில் கந்தபுராணம், கார்த்திகை புராணம் போன்றவற்றை பிறர் சொல்ல கேட்பதால் கேட்பவர்களுக்கு வாழ்வில் ஏழ்மை நிலை விலகி செல்வம் சேரும்.

- Advertisement -

இந்த கார்த்திகை பௌர்ணமி தினத்தில் முருகப்பெருமானுக்குரிய ஆலயங்கள் உங்கள் ஊரில் இருக்கும் பட்சத்தில் அந்த ஆலயத்திற்கு சென்று முருகனுக்கு பால், பன்னீர் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்து வழிபடுவதால் உங்கள் வாழ்வில் ஏற்படுகின்ற கஷ்டங்கள் தீரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அறிவு, அழகு மிகுந்த குழந்தை பேறு கிடைக்கும்.

கார்த்திகை பௌர்ணமி தினத்தன்று மாலை வேளையில் வானில் பூரண சந்திரன் தெரிந்த பிறகு, அந்த பூரண சந்திரனுக்கு ஒரு தாம்பாளத் தட்டில் தூபக்கால் வைத்து, அதில் கட்டி கற்பூரம் ஏற்றி சந்திரனுக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு செய்ய வேண்டும். பிறகு அந்த முழு சந்திரனில் அம்பிகையின் உருவம் இருப்பதாக தியானித்து, உங்கள் பூஜை அறையில் வந்து அமர்ந்து “லலிதா சகஸ்ரநாமம்” பாராயணம் செய்ய வேண்டும். மேற்சொன்ன முறையில் லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்கின்ற நபர்களுக்கு வாழ்வில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:கோவிலுக்கு செல்லும்போது இதை மட்டும் நெற்றியில் வைத்துக் கொண்டு போனால், தெய்வங்களின் பார்வை நேரடியாக உங்கள் மேல் விழும். உங்களுடைய வேண்டுதலும் சீக்கிரம் பலிக்கும்.

வாக்குவன்மை பெருகும். நேரடி, மறைமுக எதிரிகள் ஒழிவார்கள். சமூகத்தில் பெரிய நிலையில் இருக்கின்ற மனிதர்களின் நட்பு கிடைத்து அதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கப் பெறுவார்கள். வாழ்வில் தொடர் தோல்விகளை சந்தித்தவர்களுக்கு வெற்றிகள் கிடைக்கும். மேற்சொன்ன முறையில் கார்த்திகை பௌர்ணமி தினத்தன்று வழிபாடு செய்வதால் முருகப்பெருமான், அம்பிகை ஆகிய இருவரின் முழுமையான அருளையும் பெறலாம்..

- Advertisement -