மீன் சாப்பிட முடியாத நேரத்தில் கருணைக்கிழங்கு வறுவலை இப்படி வறுத்து வையுங்கள். மீன் வறுத்தா என்ன வாசம் வருமோ, அதே வாசம் இந்த கருணைக்கிழங்கு வறுவலிலும் வரும்.

karunaikizangu-varuval
- Advertisement -

சில பேருக்கு அசைவ வாடை வீசாமல் சாப்பாடு உள்ளே இறங்காது. எல்லா நேரத்திலும் அசைவ சாப்பாடு கிடைக்குமா? சில நேரங்களில் சைவ சாப்பாடு சாப்பிட வேண்டிய நேரமும் இருக்கும் அல்லவா. அப்போது கருணைக்கிழங்கு வாங்கி உங்களுடைய வீட்டில் இப்படி வறுவல் செய்து பாருங்கள். இதனுடைய ருசி அப்படியே மீன் வருவல் டேஸ்டில் கிடைக்கும். இதற்காக நாம் ஒரு ஸ்பெஷல் மசாலா அரவையை அரைக்க போகின்றோம். அந்த அரவையை எப்படி அரைப்பது. இந்த கருணைக்கிழங்கு வறுவல் எப்படி வறுப்பது சமையல் குறிப்பு இதோ உங்களுக்காக.

செய்முறை

முதலில் கருணைக்கிழங்கை எடுத்து மேலே இருக்கும் தோல் சீவி, ஓரளவுக்கு தடிமனாக துண்டு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் அலசக்கூடிய தண்ணீரில் கொஞ்சமாக புளிக்கரைசலை ஊற்றி இந்த கருணைக்கிழங்கை அதில் ஐந்து நிமிடம் வைத்து, ஊற வைத்த பின்பு அலசி எடுத்துக் கொள்ளுங்கள். சில கருணைக்கிழங்கு அரிப்பு ஏற்படும் அல்லவா அது இருக்காது.

- Advertisement -

வெட்டிய இந்த கருணைக்கிழங்குகளை தண்ணீரில் போட்டு கொஞ்சமாக உப்பு போட்டு, முக்கால் பாகம் வேக வைத்து தண்ணீரை வடித்து கிழங்குகளை தனியாக எடுத்து வைத்து விடுங்கள்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சின்ன வெங்காயம் 10 பல், இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன், பச்சை மிளகாய் 1, சோம்பு 1/4 ஸ்பூன், மிளகு 10, எலுமிச்சம் பழச்சாறு 1 ஸ்பூன், மிளகாய் தூள் 1 ஸ்பூன், கரம் மசாலா 1/4 ஸ்பூன், மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், கான்பிளவர் மாவு 1 ஸ்பூன், அரிசி மாவு 1 ஸ்பூன், கடலை மாவு 1 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, போட்டு இதை தண்ணீர் எதுவும் சேர்க்காமல் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

- Advertisement -

கூடுதலாக புளிப்பு சுவை தேவை என்றால் இதில் ஒரு ஸ்பூன் புளி பேஸ்ட்டும் சேர்த்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம். அரைத்த இந்த மசாலாவை முக்கால் பாகம் வேக வைத்திருக்கும் கருணைக்கிழங்கில் தடவி அதை ஒரு பத்து நிமிடம் ஊற வையுங்கள். பிறகு தோசை கல்லில் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி இந்த மசாலா தடவிய கருணைக்கிழங்குகளை அதில் போட்டு இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு பொன்னிறமாக சிவக்க விட்டு எடுத்தால் சூப்பரான கருணைக்கிழங்கு வறுவல் தயார்.

இதையும் படிக்கலாமே: கல்யாண வீட்டு பிரிஞ்சி பர்ஃபெக்ட்டா வர இப்படி செஞ்சு பாருங்க. அப்புறம் பாருங்க உங்க வீட்ல எல்லாரும் உங்களை ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து தள்ளுவாங்க. சமைச்சதுல ஒரு பருக்கை கூட மிஞ்சாது.

இது மேலே மொறுமொறுப்பான மசாலா கோட்டிங் உடன் உள்ளே கருணைக்கிழங்கு சுவையோடு சூப்பராக இருக்கும். 300 கிராமிலிருந்து 400 கிராம் அளவு கருணைக்கிழங்குக்கு மேலே சொன்ன அளவுகளில் மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளுங்கள். சரியாக இருக்கும். அருமையான இந்த ரெசிபி பிடித்தவர்கள் கட்டாயம் முயற்சி செய்து பார்க்கவும்.

- Advertisement -