கல்யாண வீட்டு பிரிஞ்சி பர்ஃபெக்ட்டா வர இப்படி செஞ்சு பாருங்க. அப்புறம் பாருங்க உங்க வீட்ல எல்லாரும் உங்களை ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து தள்ளுவாங்க. சமைச்சதுல ஒரு பருக்கை கூட மிஞ்சாது.

- Advertisement -

பெரும்பாலும் நாம் வீடுகளில் என்ன தான் வகை வகையாக சமைத்து சாப்பிட்டாலும் கூட சில உணவுகளை கடையில் வாங்கி சாப்பிடும் போதும், சில உணவுகளை கல்யாண வீடுகளில் சாப்பிடும் போதும் கிடைக்கும் சுவை நம் வீட்டில் செய்யும் போது கிடைப்பதில்லை. அந்த வகையில் கல்யாண வீடுகளில் கிடைக்கும் பிரிஞ்சி ரைஸ் தனி சுவையுடன் இருக்கும் இதை நாம் வீட்டில் செய்யும் பொழுது அதே சுவை வராது. இந்த சமையல் குறிப்பு பதிவில் கல்யாண வீடுகளில் பரிமாறப்படும் பிரிஞ்சி ரைஸ் எப்படி வீட்டில் அதே சுவையுடன் செய்வது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

செய்முறை

இந்த சாதம் செய்ய முதலில் ஒரு கப் பாசுமதி அரிசியை இரண்டு முறை தண்ணீர் ஊற்றி சுத்தமாக கழுவிய பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வரை அப்படியே ஊற வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரு பெரிய சைஸ் வெங்காயம், தக்காளி இரண்டையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளுங்கள். இதே போல் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி இவை அனைத்தையும் சேர்த்து ஒரு கப் வரும் வரை எடுத்து கொள்ளுங்கள். மேலும் இரண்டு பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் ஒரு கொத்து கொத்தமல்லியை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதற்கு அடுப்பை பற்ற வைத்து அடி கனமான ஒரு பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். இதில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய், ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி உருகியவுடன் மசாலா பொருட்களான கிராம்பு, ஏலக்காய், ஜாதி பத்திரி, பட்டை, இலவங்கம் இவை அனைத்தைதிலும் ஒவ்வொன்று மட்டும் சேர்த்து புரிய விடுங்கள். அதன் பிறகு அறிந்து வைத்த வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து ஓரளவிற்கு வதங்கிய பிறகு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, அரிந்து வைத்த தக்காளி இதையும் சேர்த்து நன்றாக குழையும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு நறுக்கி வைத்த காய்கறிகளை எல்லாம் சேர்த்து வெங்காயம் தக்காளி உடன் கலந்த பிறகு ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், அரை ஸ்பூன் சீரகத்தூள், கால் டீஸ்பூன் மஞ்சள், ஒரு டீஸ்பூன் தனியாத் தூள் முக்கால் டீஸ்பூன் உப்பு இவை அனைத்தையும் சேர்த்து அடுப்பை லோ ஃபிலிமில் வைத்து நன்றாக கலந்து விடுங்கள். இவையெல்லாம் நன்றாக வதங்கிய பிறகு ஒரு கப் திக்கான தேங்காய் பால், அரை கப் இரண்டாவது பால் இரண்டையும் ஊற்றி காய்கறிகள் இந்த தேங்காய் பாலில் கொதிக்க வேண்டும்.

- Advertisement -

அதன் பிறகு நாம் ஊற வைத்த அரிசியை கொஞ்சம் கூட தண்ணீர் இல்லாமல் வடித்து இதில் சேர்த்த பிறகு அரிந்து வைத்த கொத்தமல்லி ஒரு கைப்பிடி புதினாவையும் பொடியாக அரிந்து இதில் சேர்த்து அரை எலுமிச்சை பழ சாறையும் இதன் மேல் பிழிந்து விட்டு அப்படியே தட்டு போட்டு மூடி விடுங்கள்.

இது ஒரு பத்து நிமிடம் வரை அப்படியே வேக வேண்டும். எந்த நேரத்திற்குள்ளாக அடுப்பில் ஒரு பேன் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி கொஞ்சமாக முந்திரிப் பருப்பை சேர்த்து பொன்னிறம் வரும் வரை வறுத்த தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து இதே நெய்யில் மூன்று பிரட் துண்டுகளை சின்னதாக நறுக்கி சேர்த்து இரண்டு புறமும் சிவந்து வந்த பிறகு அதையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்காலமே: புசு புசுன்னு சாஃப்டான இட்லி மாவு அரைக்க இந்த ரேஷியோவில் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க! பஞ்சு போல குஷ்பூ இட்லி பொங்கி வரும்.

இப்போது பத்து நிமிடம் கழித்து மீது மூடி இருக்கும் தட்டை எடுத்து விட்டு முந்திரிப் பருப்பு பொறித்த பிரட் துண்டுகளையும் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள் சுவையான கல்யாண வீட்டு பிரிஞ்சி அதே சுவையில் சூப்பராக தயார் இந்த சாதத்திற்கு சைட் டிஷ் எதுவும் தேவையில்லை அட்டகாசமாக இருக்கும். நீங்களும் ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -