மெலிந்து போன முடியை கூட ஒரே நாளில் கருகருவென அடர்த்தியாக மாற்ற கருஞ்சீரக ஹேர் பேக்கை இப்படி போடுங்க.

hair2
- Advertisement -

சில பேருக்கு முடி பார்ப்பதற்கு ரொம்பவும் மெல்லிசாக இருக்கும். அப்படி ஒல்லியாக இருக்கக் கூடிய முடியை ஒரே நாளில் இந்த ஹேர் பேக்கிங் மூலம் அடர்த்தியாக மாற்ற முடியும். ஆனால் அந்த அடர்த்தி நிரந்தரமாக இருக்காது. மீண்டும் எண்ணெயை வைத்து தலையை சீவினால் உங்களுடைய முடி ஒல்லியாக மாறிவிடும். ஆனால் இந்த பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மூன்றிலிருந்து ஆறு மாதத்திற்குள் நிரந்தரமாக உண்மையாகவே உங்களுடைய முடி அடர்த்தியாக வாய்ப்புகள் உள்ளது. அப்படிப்பட்ட சூப்பரான ஒரு பவர்ஃபுல் ஹேர் பேக்கை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த பேக்கை தயார்செய்ய நமக்கு தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை முதலில் பார்த்துவிடுவோம். 2 ஸ்பூன் வெந்தயம், 2 ஸ்பூன் கருஞ்சீரகம், 2 கைப்பிடி அளவு தேங்காய்துருவல், அரிசி வடித்த கஞ்சி. முதல் நாள் இரவே அரிசி வடித்த கஞ்சியில் கருஞ்சீரகத்தையும் வெந்தயத்தையும் போட்டு நன்றாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

மறுநாள் காலை ஊற வைத்த இந்த பொருட்களை கஞ்சியோடு அப்படியே மிக்சி ஜாரில் போட்டு கொள்ளுங்கள். இரண்டு கைப்பிடி அளவு தேங்காயையும் இந்த பொருட்களுடன் போட்டு, மைய விழுது போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நமக்கு கிரீமியா ஒரு பேக் கிடைத்திருக்கும். ஆனால் இதில் திப்பிகள் அதிகமாக இருக்கும்.

இந்த பேக்கை மெல்லிசான ஒரு காட்டன் துணியில் கொஞ்சம் சிரமப்பட்டு வடிகட்டி தான் ஆகவேண்டும். பேக்கை அரைத்து அப்படியே தலையில் போட்டால் திப்பிகள் நம்முடைய தலைமுடியில் ஒட்டிக்கொள்ளும். அலசுவதற்கு ரொம்பவும் சிரமமாக இருக்கும். வடிகட்டிய இந்த பேக்கை உங்களுடைய ஸ்கால்ப்பில் நன்றாக படும்படி போட்டுக்கொள்ளுங்கள். அதன்பின்பு முடியின் நுனி வரை நீளவாக்கில் சிறு சிறு பாகங்களாக பிரித்து பேக்கை அப்ளை செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த பேக் 20 லிருந்து 25 நிமிடம் வரை உங்களுடைய தலையில் அப்படியே ஊறட்டும். அதன் பின்பு ஷாம்பூ அல்லது சீயக்காய் போட்டு தலைக்கு குளித்துவிட்டு வந்து பாருங்கள். உங்கள் முடியில் ஏற்படும் மாற்றம் உங்களுக்கே தெரியும். ஒரு முறை இந்த பேக்கை பயன்படுத்தி உடனே உங்களுடைய மூடி அடர்த்தியாக இருக்கும். அழகாக மாறியிருக்கும். காற்றில் பறந்தால் கூட உங்களுடைய முடியில் சிக்கு விழாத அளவுக்கு மென்மையாக இருக்கும்.

தொடர்ந்து இந்த பேக்கை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி வர, முடி கருகருவென அடர்த்தியாக வளர தொடங்கிவிடும். உங்களுக்கு இந்த ரெமிடி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -