இந்த மையை தினமும் நெற்றியில் இட்டுக் கொண்டால் போதும். உங்கள் குடும்பத்திற்கு கெட்ட சக்தியால் எந்த கஷ்டமும் ஆபத்தும் ஒருபோதும் வராது.

mai
- Advertisement -

வழக்கத்தில் நிறையவே இந்த வார்த்தையை கேள்விப்பட்டிருப்போம். வசியமை என்று சொல்லுவார்கள். இப்படிப்பட்ட மை வகைகளில் எல்லாம் தலைமை வாய்ந்த, சக்தி வாய்ந்த ஒரு மையைப்பற்றி தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். ஆனால் இதற்குப் பெயர் வசியமை கிடையாது. சரியாக சொல்லப்போனால் உலகத்தில் இந்த மையை விட சக்தி வாய்ந்த வேறு மை நிச்சயமாக இருக்கவே முடியாது. அது எந்த மை. எந்த இடங்களில் நமக்கு இந்த மை கிடைக்கும் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்வோமா.

eyes 1

கெட்ட சக்தியை எதிர்க்க வேண்டும் என்றால் நிச்சயமாக அது இறை சக்தியால் மட்டும்தான் முறையும். எதிர்மறை ஆற்றலை விரட்டியடிக்க கூடிய, நேர்மறை ஆற்றல் கொண்ட நல்ல சக்தி, இறை சக்தியிடம் இருந்து பெறக்கூடிய மை தான் இந்த மை. நம்முடைய இரண்டு கண்கள் எந்த நோக்கத்தோடு, எந்த பொருளை பார்க்கின்றதோ, கண்கள் மையம் கொள்ளக்கூடிய அந்த தருணத்தில் தான் நமக்கு நடக்கக்கூடிய நல்லதும் நடக்கின்றது, கெட்டதும் நடக்கின்றது.

- Advertisement -

ஆக, கண்களை மையமாக வைத்து, கண்கள் எதை மையம் கொள்கிறதோ, அதை வைத்து செய்யக்கூடிய ஒருமை தான் இந்த கருமை வாய்ந்த கண் மை. புரியவில்லையா. இப்போது புரிந்துவிடும் பாருங்கள். உலகத்திலேயே சக்தி வாய்ந்த மை எது என்று தெரியுமா. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திற்கு தீபம் ஒன்று ஏற்றப்படும். அந்த தீபம் எரியும் போது லட்சோப, கோடான கோடி கண்கள் அந்த தீபத்தை பார்க்கும். எப்படி? நேர்மறை ஆற்றலுடன். எல்லோருக்கும் நல்லது நடந்து விடவேண்டும் என்ற எண்ணம் அந்தப் பார்வையில் நிச்சயமாக கலந்திருக்கும். சிவன் பக்தர்களின் சக்திவாய்ந்த பார்வை அது. அந்த தீபத்திற்கு அத்தனை ஒரு சக்தி இருக்கும்.

thiruvannamalai

இப்படியாக ஒவ்வொரு கார்த்திகை தீபம் முடிந்த பின்பும், அந்த தீபம் எரிந்து கருப்பாக மை இருக்கும் அல்லவா. அதை பக்தர்களுக்கு அந்த கோவிலில் விநியோகம் செய்வார்கள். முடிந்தால் திருவண்ணாமலை சென்று, கார்த்திகை தீபம் முடிந்ததும், அந்த மையை சிறிய வெற்றிலையில் வாங்கி வந்து வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த நமக்கு நிறைய கிடைக்காது. மிக மிக சிறிய அளவுதான் கிடைக்கும். அந்த மையை வாங்கி வந்து நம் வீட்டில் இருக்கும் சாதாரண மையில் கலந்து விட்டு விட வேண்டும். இதை தினம்தோறும் நாமும், நம் வீட்டில் இருக்கும் உறுப்பினர்களும் லேசாக நெற்றியில் இட்டுக் கொண்டால் போதும். உங்கள் குடும்பத்தை எந்த ஒரு கெட்ட சக்தியாலும் நெருங்க முடியாது.

- Advertisement -

உங்களால் திருவண்ணாமலைக்கு செல்ல முடியவில்லை என்றால் என்ன செய்வது. சில ஊர்களில் கார்த்திகை தீபத்தன்று, சில மலைகளில் இப்படி தீபம் ஏற்றும் வழக்கம் இருக்கும். அப்படி தீபம் ஏற்றும் பட்சத்தில், உங்கள் வீட்டின் அருகில் இருக்கும், அந்தக் கோவிலுக்கு சென்று கொஞ்சமாக இந்த கருமையை வாங்கி வந்து நாம் வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.

அப்படியும் இல்லை என்றால் எல்லோர் வீட்டு அருகிலும் கோவில்கள் நிச்சயம் இருக்கும். அந்தக் கோவிலின் கருவறையில் தீபம் இருபத்தி நான்கு மணி நேரமும் எரிந்து கொண்டிருக்கும். அந்த தீபத் திரியிலிருந்து கருப்பு நிறத்தில் மை நமக்கு கிடைக்கும். (தீபத் திரி எரியும் போது, அது கருகும் அல்லவா, அதை தான் எண்ணெயோடு சேர்த்து தரும்போது மை போல நமக்கு கிடைக்கும்.) அந்த மையை வாங்கியும் நம் வீட்டில் வைத்து பயன்படுத்தலாம்.

deepam

மேல் சொன்ன விஷயங்களில் உங்களுக்கு எது சுலபமாக இருக்கின்றதோ அதை செய்து பாருங்கள். உங்களை பிடித்த  கெட்டது அனைத்தும் உங்களை விட்டு விலகி விடும். உங்களுக்கு யார் கெடுதல் செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் அந்த கெட்டது உங்களை நிச்சயமாக நெருங்க முடியாது. இது நிதர்சனமான உண்மை. முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும்.

- Advertisement -