வாழ்க்கை என்றால் இன்பம் துன்பம், கஷ்டம் நஷ்டம், கசப்பு இனிப்பு இவை கலந்து தான் இருக்கும். ஆனால் சில பேருடைய வாழ்க்கையில் எல்லாம் கசப்பான அனுபவங்கள் மட்டுமே இருக்கும். சந்தோஷமான வாழ்க்கை எப்படி இருக்கும் என்று ஒரு சிலர் அனுபவித்திருக்கேவே மாட்டார்கள். இந்த பதிவை படிக்கும் சில பேருக்கு மனதில் தோன்றும்.
நம்முடைய வாழ்க்கையிலும் கொஞ்சம் நிம்மதி இருக்கிறது என்று நினைப்பீர்கள். ஆனால் ஒரு சில பேர் நினைக்கலாம். என்னுடைய வாழ்வு கஷ்டத்தில் தான் போய் கொண்டு இருக்கிறது. சந்தோஷத்தை இதுவரை நான் பார்த்ததே இல்லை என்று, அப்படிப்பட்டவர்களுக்கு இந்த பரிகாரம் நிச்சயம் உதவியாக இருக்கும். உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் கசப்பை எல்லாம் நீக்கக்கூடிய இந்த பிள்ளையார் வழிபாட்டை எப்படி செய்வது, இன்று இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.
கஷ்டத்தை தீர்க்கும் பிள்ளையார் வழிபாடு
இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் வேப்பம்பூ. வேப்ப மரத்திலிருந்து எடுக்கப்பட்ட பூ. இந்த பூ கொஞ்சம் உங்களுக்கு தேவை. இது காயாத பூவாக கிடைத்தால் ரொம்ப நல்லது. உங்களுக்கு அப்படி காயாத பூ மரத்திலிருந்து எடுக்க முடியவில்லை எனும் பட்சத்தில், காய்ந்த பூ நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதையும் வாங்கிக் கொள்ளலாம்.
உங்களுடைய வீட்டில் மஞ்சளில் ஒரு பிள்ளையாரை பிடித்து, வெற்றிலைக்கு மேலே வைத்து, இந்த வேப்பம்பூவை அந்தப் பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். ‘ஓம் கம் கணபதயே நமஹ’ என்ற மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்யுங்கள். கொஞ்சம் வேப்பம் பூ தான் இருக்கிறது என்றால் பரவாயில்லை.
மூன்று முறை மந்திரத்தை சொல்லி வேப்பம்பூவால் அந்த மஞ்சள் பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்துவிட்டு, மீண்டும் இந்த மந்திரத்தை நீங்கள் 108 முறை சொல்லலாம். ஏனென்றால் 108 முறையும் வேப்பம்பூவால் அர்ச்சனை செய்வதற்கு பூக்கள் கிடைப்பதில் சிரமம் இருக்கும். ஆகவே ஒரு சில வேப்பம் பூக்களை அந்த மஞ்சள் பிள்ளையாருக்கு போட்டுவிட்டு, மந்திரத்தை மட்டும் நீங்கள் 108 முறை சொல்லுங்கள்.
மீதம் மந்திரத்தை உச்சரிக்கும் போது வேறு ஒரு புஷ்பங்களை வைத்து அர்ச்சனை செய்தாலும் தவறு கிடையாது. வேப்பம் பூவால் மஞ்சள் பிள்ளையாரை அர்ச்சனை செய்து கும்பிட்டீர்கள் என்றால் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் கசப்பான அத்தனை கஷ்டமும் உங்களை விட்டு நீங்கிவிடும். விநாயகருக்கு திங்கட்கிழமை உகந்தது.
வாரந்தோறும் வரக்கூடிய திங்கட்கிழமையில் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். தொடர்ந்து 5 திங்கட்கிழமை இப்படி பிள்ளையாரை கும்பிட்டு பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அந்த கசப்பான அனுபவங்கள் எல்லாம் எப்படி மறைந்து, எப்படி இனிமையான வாழ்க்கை தொடங்குகிறது என்பதை நீங்களே நன்றாக உணருவீர்கள். ஒருவேளை உங்களுக்கு ரொம்பவும் கஷ்டம் இருந்தது.
இதையும் படிக்கலாமே: திருச்செந்தூரில் வழிபடும் முறை
5 வாரம் பிள்ளையாரை இப்படி கும்பிட்டேன். என்னுடைய கஷ்டத்தில் பாதி குறைந்தது என்ற ஒரு சூழ்நிலை வந்தாலும் இந்த வழிபாட்டை விடாதீங்க. அப்படியே பிடித்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கான வழிபாடு மட்டும்தான். இந்த வழிபாட்டை செய்ய செய்ய உங்கள் வாழ்க்கையில் இன்பம் மட்டும் தான் இருக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.