கஷ்டத்துக்கு மேல் கஷ்டப்பட்டு நொந்து நூலாகி போய் விட்டீர்களா? உங்கள் கஷ்டங்களை தீர்ப்பதற்கு இந்த ஒரு பொருளை வைத்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து பாருங்கள். உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் விலகி நல்ல காலம் பிறந்து விடும்.

sivan abishegam
- Advertisement -

யாருடைய வாழ்க்கையில் தான் கஷ்டம் என்பது இல்லாமல் இருக்கும். அனைவருக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் ஏதாவது ஒரு கஷ்டம் இருந்து கொண்டு தான் இருக்கும். கஷ்டத்தை சமாளிக்க முடிந்தவர்களுக்கு மட்டுமே கஷ்டம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் ஒன்றிரண்டு கஷ்டம் இருந்தால் அதை சமாளித்து விடலாம். ஆனால் நாம் செய்யக்கூடிய அனைத்திலும் ஏதாவது ஒரு பிரச்சனைகள் வந்து நாம் கஷ்டத்தில் ஆள்கிறோம் என்றால் நமக்கு வாழ்க்கையே வெறுத்து விடும். அந்த மாதிரி சூழ்நிலையில் நாம் எந்த பொருளை வைத்து சிவபெருமானிற்கு அபிஷேகம் செய்தால் நம்முடைய கஷ்டம் தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக சிவபெருமானை வழிபடுபவர்களுக்கு கஷ்டங்கள் ஏற்படும் என்ற ஒரு கூற்று நிலவி வருகிறது. சிவபெருமானின் திருவடிகளை நாம் சரணாகதி அடைந்து எது நடக்கிறதோ அது அனைத்தும் உன் அருளால் தான் நடக்கிறது என்று இருந்தோம் என்றால், நமக்கு கஷ்டங்கள் என்பது நேராது. மேலும் சிவபெருமானை சரணாகதி அடைந்தால் நமக்கு மறுபிறவி என்பதே இருக்காது என்பதால் முற்பிறவிகளிலும், இந்த பிறவியிலும் நாம் செய்த கர்ம வினைகள் அனைத்தையும் நாம் அனுபவித்து தீர்ந்தே ஆக வேண்டும். அதனால் தான் சிவபெருமானை வழிபட்டால் கஷ்டங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சிவபெருமானை வழிபடுபவர்கள் பிரதோஷ நாளன்று அவரை நினைத்து விரதம் இருந்து அவருடைய ஆலயத்திற்கு சென்று வழிபடும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். அவ்வாறு செல்பவர்கள் தங்களால் இயன்ற அளவு ஏதாவது ஒரு பொருளை அபிஷேகத்திற்காக வாங்கி கொடுப்பார்கள் அல்லது வில்வ இலைகளை அர்ச்சனைக்காக வாங்கி கொடுப்பார்கள். அவர்களால் இயன்ற ஏதாவது ஒரு பிரசாதத்தை வழங்குவார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் ஒவ்வொரு பொருளும் உரிய பலனையும் அவர்கள் பெறுவார்கள். இது அனைவரும் அறிந்தது தான்.

அதேபோல் சிலர் தங்களுடைய இல்லங்களில் இருக்கக்கூடிய சிவலிங்கத்திற்கு பிரதோஷ நாளன்று பிரதோஷ வேளையில் அபிஷேக ஆராதனை செய்து வழிபடுவார்கள். நமசிவாய என்று அர்ச்சனை செய்து தங்களால் இயன்ற ஏதாவது ஒரு பிரசாதத்தை வைத்து நெய்வேத்தியம் செய்து வழிபடும் வழக்கமும் இருக்கிறது.

- Advertisement -

வீட்டில் இருக்கக்கூடிய ஸ்படிக லிங்கத்திற்கும், ஸ்படிக நந்திக்கும் பிரதோஷ நாளன்று பிரதோஷ வேளையில் திருமஞ்சன பொடியாய் நாம் நம் கைகளால் அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த பொடி அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இந்த பொடியை நாம் கோவில்களுக்கும் வாங்கி கொடுக்கலாம். மேலும் கோயிலில் மூலவர் இல்லாமல் பிற சிவலிங்கங்களும் கோயிலை வலம் வரும் பாதையில் இருக்கும். அந்த லிங்கத்திற்கும் நாம் இந்த திருமஞ்சன பொடியை வைத்து அபிஷேகம் செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: தினமும் காலை மாலை இருவேளையும் வீட்டில் விளக்கேற்றும் நபரா நீங்கள்? அப்போ இந்த விஷயங்களில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள்.

இவ்வாறு நாம் செய்து வர நம்முடைய கஷ்டங்கள் அனைத்தையும் சிவபெருமான் நீக்கிவிட்டு நமக்கு நன்மைகளை வாரி வழங்குவார் என்று கூறப்படுகிறது. நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -