ரூம் போட்டு யோசிச்சா கூட இப்படி ஒரு தோசையும், சட்னியையும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது! ஆரோக்கியத்தை தரக்கூடிய ஒட்டுமொத்த சத்துக்களும் இந்த தோசையில் அடக்கம்.

dosai
- Advertisement -

இப்படி ஒரு ஆரோக்கியம் தரும் தோசையை  இதுவரைக்கும் நாம எங்கேயுமே கேள்விப்பட்டிருக்க மாட்டோம். எல்லா வகையான சத்துக்களும் இந்த ஒரு தோசையில் அடங்கிவிடும். வாரத்தில் ஒரு நாள் உங்களுடைய குழந்தைகளுக்கு கட்டாயம் இந்த தோசையை சுட்டு குடுங்க. ரொம்ப ரொம்ப எளிமையான முறையில் ஆரோக்கியம் தரும் கதம்ப தோசை ரெசிப்பி, மற்றும் ஆரோக்கியம் தரும் ஒரு சட்னி ரெசிபியையும் உங்களுக்காக இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். ஆரோக்கியம் தரும் சட்னி என்றால் இதில் ஒரு சொட்டு எண்ணெய் கூட நாம் சேர்க்கப் போவதில்லை. ஆனால் சுவையான சட்னியை 10 நிமிடத்தில் தயார் செய்ய முடியும். வாங்க இந்த இரண்டு இன்ட்ரஸ்டிங்கான ரெசிபி பார்த்துவிடலாம்.

கதம்ப தோசை செய்முறை

ஒரு சிறிய டீ குடிக்கும் டம்ளர் எடுத்து, அதில் பின் சொல்லக் கூடிய பொருட்களை எல்லாம் அளந்து கொள்ளலாம். பச்சைப்பயிறு – 1 கப், துவரம் பருப்பு – 1 கப், உளுந்தம் பருப்பு – 1/2 கப், கடலைப்பருப்பு – 1 கப், மைசூர் பருப்பு – 1/4 கப், கம்பு – 1 கப், கேழ்வரகு – 1 கப், பச்சரிசி – 1 கப், ஜவ்வரிசி – 1/4 கப், இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக தண்ணீர் ஊற்றி அலசி கழுவி விட்டு நல்ல தண்ணீரை ஊற்றி நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதோடு நான்கு வரமிளகாய் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

நான்கு மணி நேரம் இந்த பொருட்கள் எல்லாம் ஊறிய பின்பு தண்ணீரை வடிகட்டி விட்டு மிக்ஸி ஜாரில் போட்டு பச்சை மிளகாய் – 3, தோல் சீவி நறுக்கிய இஞ்சி – 2 இன்ச் போட்டு, தேவையான அளவு உப்பு போட்டு, தண்ணீர் ஊற்றாமல் முதலில் கொறகொறப்பாக அரைத்து விட்டு, அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நைசாக இட்லி மாவு போல அரைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த மாவை தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். புளிக்க வைக்க வேண்டாம். தேவையென்றால் இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்துக் கொள்ளலாம். தயிர் இல்லாமல் அப்படியே தோசை வார்க்கலாம்.

- Advertisement -

எப்போதும் போல அடுப்பில் கல்லை வைத்துவிட்டு, தோசைக்கல் சூடானதும், இந்த தோசை மாவை வார்த்து மெல்லிசாக தேய்த்து மொறு மொறு தோசை சுடலாம். அப்படி இல்லை என்றால் கல் தோசை, ஆனியன் ஊத்தப்பம் கூட சுடலாம். பொடி தோசை சுட்டாலும் சூப்பராகத்தான் இருக்கும். வழக்கம்போல இதற்கு சாம்பார், சட்னியை சைட் டிசாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த மாவை இரண்டு நாள் பிரிட்ஜில் வைத்து ஸ்டோர் செய்து சாப்பிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

எண்ணெய் இல்லாத சட்னி செய்முறை

ஒரு இட்லி தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒவ்வொரு குழியில் ஒவ்வொரு பொருட்களாக அடுக்கி வைத்துக் கொள்ளலாம். நறுக்கிய தக்காளி பழம் – 2, நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, தோலுரித்த பூண்டு பல் – 1 கைப்பிடி அளவு, வரமிளகாய் – 5 லிருந்து 7, 1 கைப்பிடி அளவு பச்சை வேர்க்கடலை அல்லது வறுத்த வேர்க்கடலை, எதுவாக இருந்தாலும் வைத்து, இந்த இட்லி தட்டை அப்படியே இட்லி பானையில் வைத்து ஆவியில் 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

- Advertisement -

வழக்கம்போல இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி அதன் மேலே இந்த தட்டை வைத்து வேக வையுங்கள். உள்ளே இருக்கும் வெங்காயம், தக்காளி, மிளகாய், மற்றும் எல்லா பொருட்களும் நன்றாக வெந்து கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: ரொம்ப சிம்பிளா அட்டகாசமான சுவையில லெமன் ரசத்தை இப்படி செய்து பாருங்க . சுட சுட சாதத்துக்கு இந்த ரசம் இருந்தா போதும் சைடிஷ் இல்லாமலே தட்டு சோறு உள்ள போகும்.

ஆவியில் வெந்தவுடன் இந்த பொருட்களை எல்லாம் எடுத்து வெளியே வைத்து நன்றாக ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பு, போட்டு அரைத்தால் சட்னி தயார். இந்த சட்னியை கிண்ணத்தில் வழித்து அப்படியே பரிமாறலாம். தேவை என்பவர்கள் 1/2 ஸ்பூன் எண்ணெயில் கடுகு, கருவேப்பிலை, வரமிளகாய், தாளித்துக் கொட்டி பரிமாறி பாருங்கள். அட்டகாசமான சுவையில் இருக்கும். மேலே சொன்ன தோசைக்கும் இந்த சட்னி சூப்பரான சைடிஷா இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -