நாக்கில் எச்சில் ஊற வைக்கும் இப்படி ஒரு கத்தரிக்காய் கொஸ்து ரெசிபியை இதுவரைக்கும் யாருமே டேஸ்ட் பண்ணி இருக்க மாட்டீங்க. மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

kosthu
- Advertisement -

சுடச்சுட சாதத்தில் இந்த கத்தரிக்காய் கொஸ்து போட்டு பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். தேவைப்பட்டால் ஒரு சொட்டு நெய்யை விட்டு சாப்பிட்டு பாருங்கள். சாதம் அமிர்தமாக உங்களுக்கு தெரியும். பில்டப் அதிகமாக உள்ளதா. யோசிக்காம ஒரே ஒருமுறை கத்திரிக்காயை வைத்து இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. உங்களுக்கே தெரியும் இதனுடைய ருசி. சரி நேரத்தைக் கடத்தாமல் ரெசிபியை பார்த்துவிடலாம்.

முதலில் பெரிய நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் போட்டு ஊறவைத்து கரைத்துக் கொள்ள வேண்டும். எப்படி என்றால் 1/2 லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி புளியை கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். (இந்த புளிதண்ணீரை ஊற்றி தான் கத்தரிக்காய்களை வேக வைக்கப் போகின்றோம்.)

- Advertisement -

அடுத்தபடியாக 1/4 கிலோ கத்தரிக்காய் க்யூப் வடிவத்தில் சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி தண்ணீரில் போட்டு தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அதன் பின்பு அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன், வரமல்லி – 2 ஸ்பூன், வர மிளகாய் – 5, இந்த நான்கு பொருட்களையும் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு இந்த மசாலாப் பொருட்களை நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

இப்போது கத்திரிக்காய் கொஸ்து தாளித்து விடலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு – 1 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கறிவேப்பிலை – 2 கொத்து போட்டு, தாளித்துக் கொள்ளவும். இந்த எல்லா பொருட்களும் சிவந்து வந்தவுடன் வெட்டி வைத்திருக்கும் கத்தரிக்காய்களை தண்ணீரை வடித்து எண்ணெயில் போட்டு 2 நிமிடம் வதக்கி தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் போட்டு கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை கடாயில் ஊற்றி, 1 ஸ்பூன் வெல்லம் போட்டு நன்றாக கலந்து கத்தரிக்காய்களை வேக வைக்க வேண்டும்.

கத்தரிக்காய் நன்றாக வெந்து வந்ததும் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் மசாலா பொடியை கத்தரிக்காயில் போட்டு 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள் போட்டு கலந்து, மூடி போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க வைத்தால் இந்த கத்தரிக்காய் கொஸ்து திக்காக தொடங்கும். அப்போது அடுப்பை அணைத்துவிடுங்கள். கத்தரிக்காய் லேசாக குழைந்தால் பரவாயில்லை. அப்போதுதான் இந்த கொஸ்து சுவையாக இருக்கும்.

அவ்வளவு தாங்க. மசாலா பொடி போட்டு இந்த கத்தரிக்காய் கொஸ்து கொதிக்கும் போதே நமக்கு பசி வந்துவிடும். சுடச்சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட வேண்டுமென்று தோன்றும். தேவைப்பட்டால் சுடச்சுட இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட்டாலும், சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட்டாலும் இந்த ரெசிபி அருமையாக தான் இருக்கும். உங்களுக்கு கத்திரிக்காய் ரொம்ப பிடிக்குமா. இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. மிஸ் பண்ணாதீங்க.

- Advertisement -