கத்திரிக்காயில் தொக்கு செய்வது எப்படி?

thokku
- Advertisement -

கத்திரிக்காயை வைத்து வதக்கல் செய்வோம். எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு வைப்போம், அல்லது குருமா வைப்போம். இல்லையென்றால் சாம்பார். ஆனால் கத்திரிக்காயில் தொக்கு செய்து இருக்கிறீர்களா. மிக மிக எளிமையான முறையில் கத்திரிக்காய் தொக்கு செய்வது எப்படி என்பதை பற்றிய ரெசிபி இதோ உங்களுக்காக. இந்த ஒரு தொக்கை செய்துவிட்டால் போதும். சுட சுட சாதம் உள்ளே இறங்குவதே தெரியாது. அது மட்டுமல்லாமல் சப்பாத்தி தோசைக்கும் இதை சைடு டிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்
சின்ன சின்ன கத்திரிக்காய் – 250 கிராம்
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
உளுந்து – 1 ஸ்பூன்

- Advertisement -

கருவேப்பிலை – 2 கொத்து
பொடியாக நறுக்கிய பூண்டு பல் – 10
பொடியாக நறுக்கியது வெங்காயம் – 1
தக்காளி – 2
மிளகாய் தூள் – 1 டேபிள்ஸ்பூன்

மல்லித்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
புளிக்கரைசல் – 1/4 கப்
பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

- Advertisement -

மிளகாய் தூள், மல்லி தூளுக்கு பதிலாக குழம்பு மிளகாய் தூள் பயன்படுத்தினாலும், இந்த டிஷ் சூப்பரான சுவையை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. காலத்திற்கு தேவை என்றால் கூடுதலாக மிளகாய் தூள் பயன்படுத்தலாம்.

செய்முறை
அடுப்பில் ஒரு அடி கனமான பாத்திரத்தை வைத்து 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எடுத்து வைத்திருக்கும் கத்தரிக்காய்களை நீல வாக்கில் துண்டுகளாக நறுக்கி, இந்த எண்ணெயில் போட்டு வதக்கவும். எண்ணெயில் கத்திரிக்காய் மொறுமொறுப்பாக வறுபட்டு வந்தவுடன், எண்ணெயை வடிகட்டி கத்தரிக்காயை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

கடாயில் இருக்கும் அதே எண்ணெயில் கடுகு, உளுந்து, கருவாப்பிலை, நறுக்கி வைத்திருக்கும் பூண்டு பல், வெங்காயம், இவைகளை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கி வந்தவுடன் 2 தக்காளி பழத்தை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து, இதில் ஊற்றி மீண்டும் வதக்கங்கள். பிறகு மிளகாய் தூள், மல்லித்தூள், புளி கரைசல், தேவையான அளவு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, இந்த கலவையை நன்றாக கொதிக்க வையுங்கள்.

இதில் இருக்கும் பச்சை வாசனை போனவுடன், வதக்கி வைத்திருக்கும் கத்தரிக்காய்களை இதில் போட்டு, தேவையான அளவு உப்பு போட்டு, பெருங்காயத்தூள் சேர்த்து, ஒரு தட்டு போட்டு மூடி ஐந்திலிருந்து ஏழு நிமிடம் நன்றாக வேக வைத்தால், தண்ணீர் எல்லாம் சுண்டி இது தொக்கு பதத்திற்கு வரும். தேவைப்பட்டால் இறுதியாக கொஞ்சம் வெல்லம் சேர்க்கலாம்.

இதையும் படிக்கலாமே: இந்த டிப்ஸ் உங்களுக்கு தெரிஞ்சா போதும் ஒரே நேரத்தில் 100 சப்பாத்தி கூட அசால்டா செஞ்சிரலாம்.

பிறகு மேலே பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி சுட சுட எடுத்து பரிமாறுங்கள். சுவையாக இருக்கும். கத்திரிக்காயை சுத்தமாக பிடிக்காது என்பவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -