மருத்துவ குணம் நிறைந்த மணத்தக்காளி கீரையை இப்படி ஒரு முறை கடையல் செய்து சாப்பிட்டு பாருங்க. கீரையே வேண்டாம் என்பவர்கள் கூட இன்னும் கொஞ்சம் கிடைக்குமா என்று கேட்பார்கள். இதை சாப்பிட்டால் வயிற்றுப் புண் வாய் புண் இவையெல்லாம் வராவே வராது.

keerai kadaiyal
- Advertisement -

நம் உணவு முறைகளில் தினமும் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது இது பெரும்பாலும் அனைவரும் அறிந்திருந்தாலும் கூட எல்லோராலும் அதை கடைபிடிக்க முடிவதில்லை. ஆனால் முடிந்த அளவிற்கு வாரத்திற்கு ஒரு முறையாவது இது போன்ற மருத்துவ குணம் மிக்க கீரைகளை சாப்பிடுவது நம் உடலுக்கு மிகவும் நல்லது. இந்த சமையல் குறிப்பு பதிவில் அது போன்று ஒரு ஆரோக்கியமான சமையலை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

செய்முறை

இந்தக் கீரை செய்வதற்கு முதலில் 100 கிராம் பருப்பை எடுத்து நன்றாக சுத்தம் செய்த பிறகு ஒரு பாத்திரத்தில் சேர்த்து பருப்பு முழ்கும் வரை தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் மணத்தக்காளி கீரையை நன்றாக சுத்தம் செய்து அலசி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தக் கீரைக்கு 10 சின்ன வெங்காயம், 10 பல் பூண்டு இவை இரண்டையும் தோல் நீக்கி அதையும் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அரை மணி நேரம் கழித்து ஊறிய பருப்பை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உரித்து வைத்து வெங்காயம், பூண்டு இரண்டையும் சேர்த்த பிறகு நன்றாக பழுத்த தக்காளியாக மூன்று தக்காளி சின்னதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். மணத்தக்காளி கீரையில் சிறு கசப்பு இருக்கும் அந்த தக்காளியை கொஞ்சம் அதிகமாக சேர்க்கும் பொழுது அந்த கசப்பு தெரியாது. இதில் காரத்திற்கு 6 பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளுங்கள். காரம் குறைவாக வேண்டும் என்று நினைப்பவர்கள் மிளகாயின் அளவை குறைத்துக் கொள்ளுங்கள். இத்துடன் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து இந்த பாத்திரத்தை அப்படியே அடுப்பில் வைத்து வேக விடுங்கள்.

பருப்பு நன்றாக ஊறி இருப்பதால் பத்து நிமிடத்திற்கெல்லாம் பருப்பு வெந்து விடும். கீரைக்கு பருப்பு குழைய வேகக் கூடாது பருப்பு முக்கால் பாகம் வெந்தவுடன் நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் கீரையை இதில் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து விட்டு மேலும் ஒரு ஐந்து நிமிடம் வேக விடுங்கள் கீரை வேகும் போது மூடி போட்டு வேக வைக்க கூடாது.

- Advertisement -

இப்போது பருப்பு கீரை எல்லாம் நன்றாக வெந்த பிறகு தண்ணீரை வடித்து விட்டு சட்டியில் சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அடுப்பில் சின்னதாக ஒரு தாளிப்பு கரண்டியை வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொஞ்சமாக தாளிப்பு வடகம் சேர்த்துக் கொள்ளுங்கள். வடகம் இல்லாத சமயத்தில் அரை டீஸ்பூன் கடுகு அரை டீஸ்பூன் சீரகம் இரண்டையும் சேர்த்து பொரிய விட்டுப் பிறகு அதையும் இந்த பருப்பு கீரையில் சேர்த்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: சாஃப்டான சப்பாத்தி செய்ய இந்த ஒரு சின்ன டிப்ஸ் தெரிந்தாலே போதும். இதுக்கு போய் இவ்வளவு நாள் கஷ்டப்பட்டுடீங்களே!

இப்போது தாளிப்பு, கீரை, பருப்பு எல்லாம் ஒன்றாக சேர்த்த பிறகு ஒரு ஸ்பூன் கல் உப்பையும் சேர்த்த பின் கீரையை நன்றாக மத்து வைத்து கடைந்து வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றிக் கொள்ளுங்கள் நல்ல சுவையான அதே சமயம் மருத்துவ குணம் மிக்க மணத்தக்காளி கீரை கடையல் தயார். இந்த முறையில் செய்த குழந்தைகளும் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடுவார்கள் அவர்களின் உடல்நலத்திற்கும் மிக மிக நல்லது.

- Advertisement -