உங்க வீட்லையும் கீரை செடியை வளர்க்க ஆசையா இருக்கா? அப்ப இதை செய்தா போதும், பத்தே நாளில் கீரை தள தளன்னு வளர ஆரம்பிச்சிடும்.

- Advertisement -

வீட்டில் தோட்டம் வைத்திருப்பவர்கள் மற்ற செடிகளை வளர்ப்பதை காட்டிலும் இந்த கீரை செடி வளர்பது சுலபம் தான். இந்த கீரை செடியை பொருத்த வரையில் மூன்று விஷயம் தான். விதை விதைப்பது, தண்ணீர் தெளிப்பு, அறுவடை செய்வது இது ஒவ்வொன்றிலும் கொஞ்சம் கவனமாக செய்தால் போதும். நம் வீட்டுக்கு தேவையான கீரைகளை நாமே விளைவித்து கொள்ளலாம். அதை எப்படி செய்வது என்று இந்த வீட்டு தோட்டம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கீரை செடிகளை பயிரிட முதலில் மிகவும் பழைய விதைகளை பயன்படுத்தக் கூடாது வாங்கும் போதே புதிய விதைகள் தானா என்று தெரிந்து கொண்ட பிறகு வாங்க வேண்டும். பழைய விதைகள் சீக்கிரத்தில் முளைத்து வராது.

- Advertisement -

கீரையின் விதைகள் மிகவும் சிறியது ஆனால் அனைத்துமே நன்றாக படர்ந்து வளரக்கூடியது . சிறிய விதைகள் என்பதால் இதை அப்படியே போட்டு மணலை அதிகமாக மேலே போட்டு மூடி விடக் கூடாது, அப்படி செய்தால் செடிகள் முளைக்காது. கீரை விதைகளை மணல் சாம்பல் இரண்டையும் சமமாக எடுத்து விதையையும், அதனுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு தான் மணலில் விதைகளை தூவ வேண்டும்.

கீரையை பொருத்த வரையில் தூவி விட்டால் நன்றாக பரவி வளரக் கூடிய செடி. எனவே இடமில்லாதவர்கள் தொட்டி, பிளாஸ்டிக் சாக்கு பைகளை கூட பயன்படுத்தலாம். அதில் அடியில் தேங்காய் நார்களை போட்டு நிரப்பி விட்டு அதன் மேல் மணல் சேர்த்து மேலே கொஞ்சமாக தேடி விதைகளை தூவி லேசாக மணல் போட்டு மூடு விட்டால் போதும்.

- Advertisement -

கீரை செடிகள் முளைத்து வரும் வரை அதிக வெயில் தேவைப் படாது. லேசாக தெளிக்க வேண்டும் அதிகமாக தண்ணீர் ஊற்றினால் விதைகள் அழுகி விடும். கீரை செடிகள் முளைத்து வரும் வரை தண்ணீர் மிகவும் குறைவாக தான் தெளித்து வர வேண்டும். இந்த கீரை விதைக்க பயன்படுத்தும் மண்ணில் சாணி குப்பை, கோழி குப்பை, போன்ற உரங்கள் உங்களிடம் இருந்தால் அதை பயன்படுத்தி போட்டால் கீரைகள் நன்றாக வரும். இவை ஏதும் இல்லாத சமயத்தில் டீ தூள் கழிவு இருந்தால் அதை மணலில் கலந்து காய வைத்து அதன் பிறகு வைத்தால் கூட போதும் கீரை செடிகள் நன்றாக தழைத்து வளரும்.

கீரை செடிகள் நன்றாக செழித்து வளர எந்த உரங்கள் இல்லை என்றாலும் கூட டீத்தூள் மட்டும் போட்டாலே போதும் செடி நன்றாக வரும். இதற்கு நாம் நேரடியாக டீத்தூளை துவாமல், டீ தூள் வேஸ்ட்டை பயன்படுத்தலாம் அல்லது புதிய டீத்துளை பயன்படுத்துவது என்றால், தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீருடன் கொஞ்சம் தண்ணீர் கலந்து செடிகளின் மேல் லேசாக தெளித்து விடலாம். இது செடிகள் தழைத்து வளர நல்ல உரம்.

- Advertisement -

கீரை செடிகளுக்கு வேப்பெண்ணை கரைசலை கொடுக்கக் கூடாது, கொடுத்தால் கீரைகளும் கசப்பு தன்மை வந்து விடும். பூச்சிகள் அதிகம் இருந்தால் அதற்கு வேப்பம் புண்ணாகை தண்ணீரில் ஊற வைத்து அந்தத் தண்ணீரை வடி கட்டி தண்ணீருடன் கலந்து லேசாக தெளித்து விடலாம். கீரை செடிகளை முதல் முறை வாங்கும் போது மட்டும் விதைகளை கடையில் வாங்கி பயன்படுத்துங்கள். அடுத்தடுத்த முறை பயன்படுத்தும் போது விதைகளை நாமே சேகரித்துக் கொள்ளலாம். கீரை செடிகளை முழுவதுமாக பிடுங்காமல் கீரைகளை மட்டும் நறுக்கி எடுத்தாலே போதும் செடியில் மீண்டும் கீரைகள் முளைத்து வரும்.

இதையும் படிக்கலாமே: எத்தனை தடவை மணி பிளான்ட் வாங்கி வைத்தாலும் வளரவே மாட்டேன் என்கிறதா? அதிர்ஷ்டம் தரும் மணி பிளான்ட் காடு மாதிரி வளர என்ன செய்ய வேண்டும்?

கீரை செடி வளர்ப்பது என்பது பெரிய காரியமில்லை. இந்த சின்ன சின்ன விஷயங்களை கடைப்பிடித்தாலே போதும் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் இந்த கீரை இன்னும் ஆரோக்கியமான முறையில் நாமே பயிரிட்டு கொள்ளலாம்.

- Advertisement -