ஒரு முடி கூட கீழே விழாமல் இருக்க கீழாநெல்லி ஹேர் பேக். முடி உதிர்வை குறைத்து, வழுக்கை வர விடாமல் தடுக்க இந்த ஹேர் பேக் போதும்.

hair14
- Advertisement -

நம்மில் நிறைய பேருக்கு முடி உதிர்வு பிரச்சினை இருக்கிறது. சாதாரணமாக 25 லிருந்து 50 முடி கொட்டுவது தவறு கிடையாது. ஆனால் சில பேருக்கு தலையிலிருந்து முடி உதிர்ந்து வீடு முழுவதும் முடியாக பரவியிருக்கும். தலையை அப்படி கழட்டினால் கையோடு முடி உதிர தொடங்கும். இப்படிப்பட்ட பிரச்சினை உள்ளவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் இந்த கீழாநெல்லி ஹேர் பேக்கை ட்ரை பண்ணி பாருங்க.

பெரும்பாலும் நம்முடைய வீட்டின் அருகிலேயே இந்த கீழாநெல்லி செடி எல்லோருக்கும் கிடைக்கும். அதிலிருந்து சிறிதளவு எடுத்து வாருங்கள். கீழாநெல்லி இலைகள் – 1 ஒரு கைப்பிடி அளவு, செம்பருத்தி இலைகள் – 10, செம்பருத்தி பூ – 5, தேங்காய் துருவல் – 1/2 மூடி. இந்த எல்லா பொருட்களையும் முதலில் தண்ணீர் ஊற்றி அலசி கொள்ள வேண்டும். (கீழாநெல்லி இலைகளை காம்புகளோடு, அந்த சின்ன சின்ன காய்களோடு சேர்த்துக்கொள்ளலாம். தவறு கிடையாது.)

- Advertisement -

தயார் செய்த இந்த எல்லாப் பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளுங்கள். இதில் தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டாம். அரிசி களைந்த தண்ணீர் இருந்தால் அதை ஊற்றி அரைக்கலாம். அப்படி இல்லை என்றால் வடித்த சாதத்தில் தண்ணீரை ஊற்றி, நன்றாக ஊற வைத்து அந்தத் தண்ணீரை ஊற்றி இந்த விழுதை அரைக்கும்போது நமக்கு பேக் பல மடங்கு பலனை உடனடியாக கொடுக்கும்.

அரைத்து வைத்திருக்கும் இந்த விழுதை மெல்லிசான துணியில் ஊற்றி நன்றாக வடிகட்டிக் கொள்ளுங்கள். இது ரொம்பவும் கட்டியாக இருக்காது. கொஞ்சம் ஜெல்லி போல தான் நமக்கு கிடைத்திருக்கும். இதை தலையில் சுலபமாக அப்ளை செய்து கொள்ளலாம். பேக்கை தலையில் போடுவதற்கு முன்பு தலையில் கட்டாயம் எண்ணெய் இருக்க வேண்டும்.

- Advertisement -

ஸ்கால்ப்பில் எல்லா இடங்களிலும் இந்த பேக் படும்படி போட்டு விட்டு 2 நிமிடம் மசாஜ் செய்யுங்கள். அதன் பின்பு தலை முடியின் நுனி பாகம் வரை இந்த பேக்கை போட்டு கொண்டை கட்டி வைத்துக் கொள்ளுங்கள். 30 நிமிடம் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு தலைக்கு குளித்து பாருங்கள். உங்களுக்கு முடி உதிர்தில் வித்தியாசம் இருக்கும். வாரத்தில் இரண்டு நாள் இந்த பேக்கை போட்டு வரலாம்‌. தொடர்ந்து இந்த பேக்கை பயன்படுத்தி வரும் பட்சத்தில் முடி உதிராமல் வளரத் தொடங்கும். உறுதியோடு வளர தொடங்கும். முடி உதிர்வு படிப்படியாக குறையும்.

என்னுடைய தலை வழுக்கை விழக்கூடிய நிலைமைக்கு வந்துவிட்டது என்று சொல்லுபவர்கள் கூட இந்த பேக்கை தொடர்ந்து பயன்பாட்டில் வைத்துக் கொண்டால் நிச்சயமாக முடி அடர்த்தியாக வளர்வதை காணமுடியும். உங்களுக்கு இந்த ரிமெடி பிடித்திருந்தால் மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -