மிதுன லக்னத்தார்களுக்கு அதிர்ஷ்டமான வாழ்க்கை ஏற்பட இதை செய்ய வேண்டும்

mithunam

பச்சை நிறம் என்பது வளமைக்கு ஒரு குறியீடாக இருக்கிறது. செல்வ சேர்க்கைக்கும் இந்த நிறம் அடையாளமாக கூறப்படுகிறது. வழிபடுவோர்கெல்லாம் வாழ்வில் செல்வங்களையும், சுகபோகங்களையும் தரும் தெய்வமான பெருமாள் நவகிரகங்களில் பச்சை நிறம் கொண்ட புதன் பகவானின் அம்சம் நிறைந்தவராக கருதப்படுகிறார். அந்த புதன் பகவானின் ஆதிக்கம் மிகுந்த ராசியாக மிதுனராசி இருக்கிறது. இந்த மிதுன ராசி மற்றும் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு அவர்களின் ஜாதகத்தில் ஒன்பதாம் இடத்து அதிபதியால் யோகங்கள் ஏற்படுவதற்கான வழிகள் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

budhan

ஜாதகத்தின் 12 ராசிக் கட்டங்களில் மூன்றாவதாக வருகிற ராசி மிதுன ராசி ஆகும். இந்த மிதுன ராசி நவகிரகங்களில் ராகு பகவானுக்கு உச்ச ராசியாகவும், கேது பகவானுக்கு நீச்ச ராசியாகவும் இருக்கிறது. மிதுன ராசிக்கு 9-ம் வீடு அல்லது ராசியாக வருவது கும்ப ராசி ஆகும். இந்த கும்ப ராசியின் அதிபதி சனீஸ்வர பகவான் ஆவார்.

புதனுக்குரிய மிதுன ராசிக்கு சனி பகவான் நட்பும் அல்லாமல் பகையும் அல்லாமல் சம பலம் கொண்டவராக இருக்கிறார். எனவே மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு சனி பகவானால் மிகப்பெரிய செல்வங்கள் கிடைக்காவிட்டாலும் சராசரியான வருமானம் குறையாமல் கிடைக்கும். மிதுன ராசிக்கு 9 ஆம் வீடான கும்ப ராசிக்குரிய சனி பகவானால் மேன்மையான பலன்கள் கிடைக்க கீழ்க்கண்ட பரிகாரங்களை நாம் செய்ய வேண்டும்.

மிதுன ராசிக்கு 9 ஆம் இடமான கும்ப ராசி மூல வகையில் அமைகிறது. எனவே இந்த மிதுன ராசியினர் வாழ்வில் மிகுந்த நன்மைகளையும்,யோகங்களையும் பெறுவதற்கு பிறருக்கு பனைமர பொருட்களை தானம் அளிப்பது மிகவும் சிறந்தது. சனி பகவானின் அருளை பெறுவதற்கு வசதி குறைந்த மக்களுக்கு எள், கேழ்வரகு, நுங்கு போன்றவற்றை தானம் அளிப்பது நல்லது. கோயில்களுக்கும் நல்லெண்ணெய் தானம் வழங்கலாம். பொதுமக்கள் இளைப்பாறுவதற்கு பயன்படும் பூங்காக்களை சீரமைப்பது, புதிய செடி, கொடிகளை நடுவது போன்றவற்றை செய்வதும் மிதுன ராசியினருக்கு யோகங்களை அள்ளித் தரும் பரிகாரமாக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்கலாமே:
வெளிநாடு செல்ல யோகமான வாழ்க்கை உண்டாக இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Mithuna lagna yogam in Tamil. It is also called as 12 lagnas in Tamil or Jodhidam yogam in Tamil or Sani pariharam in Tamil or Mithunam rasi in Tamil.