கேரளா பாரம்பரிய உணவான அவியலை ஒருமுறை சுவைத்து விட்டால் இதன் சுவை நாவிலேயே தங்கிவிடும்.

aviyal3
- Advertisement -

இது கேரளாவின் பாரம்பரிய உணவுகளில் அத்தியாவசிய உணவாகும். தென்னிந்திய உணவு வகைகளின் பாரம்பரிய உணவுகளிலும் ஒன்றாக இருக்கிறது. இது இல்லாமல் எந்த விருந்தும் இல்லை. அவியல் என்பது பந்தியின் ஒரு முக்கிய பகுதியாக கருதப்படுகிறது. இந்த அவியல் கேரளா மற்றும் தமிழ்நாட்டின் பிரபலமான உணவாகும். அவியல் செய்முறையுடன் தொடர்புடைய பல கதைகள் உள்ளன. அவியல் என்பது, தனது மற்ற பாண்டவ சகோதரர்களுடன் நாடுகடத்தப்பட்ட காலத்தில் ‘பீமா’ என்பவரால் உருவாக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. பீமா மன்னர் விராட்டாவுக்கு சேவை செய்ய வேண்டியிருந்தபோது இந்த செய்முறையை கண்டுபிடித்தார். கதையின்படி, ஒரு கறிக்கு போதுமான காய்கறிகள் இல்லை என்பதால் அனைத்து காய்கறிகளையும் கலந்து, அரைத்த தேங்காயைச் சேர்த்து இந்த நுட்பமான மற்றும் சுவையான கறியைத் தயாரித்ததாக கூறப்படுகிறது. வாருங்கள் இந்த சுவையான அவியலை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி நாமும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 2, முருங்கைக்காய் – 2, சேனைகிழங்கு சிறிய துண்டு, கேரட் – 1, தயிர் – 1/2 கப், மஞ்சை பூசணிக்காய் _ 1 கப், கத்திரிக்காய் – 1, கோவைக்காய் – 4, வாழைக்காய் – 1, பச்சை மிளகாய் _ 4, உப்பு – 1/4 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1ஸ்பூன், சிவப்பு மிளகாய் தூள் – 1 ஸ்பூன், கருவேப்பில்லை – ஒரு கொத்து, தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், சின்ன வெங்காயம் – 10, தேங்காய் கால் மூடி.

- Advertisement -

செய்முறை:
முதலில்ஸகாய்கறிகள் ஒவ்வொன்றையும் ஒரு சீரான அளவில் நறுக்க வேண்டும். அவியல் தயாரிக்க ஒரு இரும்பு கடாயை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு காயையும் ஒளியாக அறிந்த பிறகு இவற்றை தண்ணீரில் அலசி வைத்துக் கொள்ள வேண்டும். எந்த காய்கறிகள் வேக அதிக நேரம் எடுத்துக் கொள்கிறதோ அவற்றை தனியாகவும், எந்த காய்கறிகள் குறைவான நேரத்தில் வெந்து விடுமோ அவற்றை தனியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக சமைக்க நீண்ட நேரம் எடுக்கும் காய்கறிகளைச் சேர்த்து, வதக்கி விட வேண்டும். பின்னர் சமைக்க குறைந்த நேரம் எடுக்கும் காய்கறிகளைச் சேர்க்க வேண்டும். 1 உருளைக்கிழங்கு, 2 முருங்கைக்காய், 1 சிறிய துண்டு சேனைக்கிழங்கு, 1 கேரட், தயிர், 1 கப் மஞ்சை பூசணி, 1 கப் சாம்பல் வெள்ளரிக்காய், 1 கத்திரிக்காய், 3 முதல் 4 கோவைக்காய் மற்றும் 1 வாழைக்காய் ஆகிய அனைத்து காய்கறிகளையும் ஒன்றாக சேர்த்து வறக்கி விட வேண்டும்.

- Advertisement -

பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் கால் மூடி தேங்காயை துருவி சேர்க்க வேண்டும். பின்னர் அதனுடன் சீரகம் மற்றும் நான்கு பச்சை மிளகாய் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு காய்கறிகள் வெந்து கொண்டிருக்கும்போது அவற்றுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கலந்து விட வேண்டும்.

பின்னர் இறுதியாக அரைத்து வைத்துள்ள இந்த தேங்காய் விழுதையும் சேர்த்து காய்கறிகள் உடையாமல் மெதுவாக கலக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான அவியல் தயாராகி விட்டது

- Advertisement -