கேது பகவானுக்கு செய்யக்கூடிய கேது பரிகாரம்

kethu pariharam in tamil
- Advertisement -

நவகிரகங்களில் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது ஆகிய இருவரில் கேது கிரகம் “ஞான காரகன்” என அழைக்கப்படுகிறார். அதாவது ஒரு மனிதனுக்கு எந்த ஒரு விடயத்திலும் விருப்பத்தை குறைத்து, அதை அந்த நபரை விடமிருந்து விலக்கிவிடும் சந்நியாசி மனநிலையை கேது பகவான் கொடுத்து விடுவார். எனவே தான் கேது கிரகத்தின் தோஷம், திசை காலங்களில் பலரும் பல இன்னல்களை சந்திக்கின்றனர். இத்தகைய பிரச்சனைகளை போக்க செய்ய வேண்டிய கேது கிரக பரிகாரம் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

கேது பரிகாரம்

கேது கிரக திசை, தோஷம் போன்றவை ஏற்பட்ட நபர்கள் தினந்தோறும் காலில் எழுந்து குளித்து முடித்ததும் விநாயகர் வழிபாடு மேற்கொள்ள வேண்டும். கேது கிரகத்துக்குரிய அதிதேவதை தெய்வமாக விநாயகர் பெருமான் திகழ்கிறார். எனவே அவரை தினந்தோறும் வழிபடுவதன் மூலம் கேது கிரகத்தின் எத்தகைய தோஷங்களையும் போக்கி வாழ்வில் நன்மைகளைப் பெறலாம் என கூறப்படுகிறது. சங்கடஹர சதுர்த்தி தினங்களில் விநாயகர் பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

ஜாதகப் படி தங்களுக்கு கேது தசை அல்லது கேது புக்தி நடைபெறுகின்ற சமயத்தில் தினந்தோறும் அடர் நிற ஆடைகளை அணிந்து வெளியில் செல்வதால் கேது கிரகத்தின் எதிர்மறையான தாக்கங்கள் உங்களை பாதிக்காமல் காக்கும். கடுகு அல்லது கருப்பு உளுந்து தானியங்களை வியாழக்கிழமைகள் தோறும் வரிய நிலையில் இருக்கின்ற மக்களுக்கு தானம் அளிப்பதிலும், கேது கிரக தோஷத்தின் கடுமை தன்மை குறைந்து, நன்மைகள் ஏற்படும். கோயில்களுக்கு வருகின்ற பக்தர்களுக்கு இனிப்புகளை உண்ணக் கொடுப்பதாலும் கேது கிரக தோஷங்கள் நீங்கும்.

பொதுவாக கேது கிரக தோஷத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மனநிலையில் விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்படும். இதை போக்க ஏழ்மை நிலையில் இருக்கின்ற மக்களுக்கு பால் மற்றும் சர்க்கரை போன்ற பொருட்களை தானும் அளிப்பதால் மேற்சொன்ன கேது கிரக பாதிப்புகள் நீங்கி வாழ்க்கை மேம்படும். தினந்தோறும் ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிய அளவு குங்குமப்பூ இதழ் ஒன்றை ஒன்று போட்டு நன்கு கலந்து அந்த நீரை குடித்து வருவதாலும் கேது கிரகத்தின் தோஷங்கள் நம்மை பாதிக்காது.

- Advertisement -

பொருளாதார வசதிகள் குறைந்த பிராமணர் ஒருவருக்கு புதிய வஸ்திரம், குடை, செருப்பு போன்றவற்றை தானம் அளிப்பதாலும் கேது கிரகத்தின் தோஷங்கள் பாதிக்காது. கேது திசை, கேது புக்தி நடை பெறுபவர்களும் இந்த தானத்தை செய்வதால் நல்ல பலன்களை பெறலாம். ஜாதகத்தில் கேது கிரகத்தின் தசை புத்தி நடைபெறுபவர்கள் அக்காலங்களில் அதிகளவு கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்து வருவதாலும் கேது கிரகத்தால் பாதகமான பலன்கள் நமக்கு ஏற்படாமல் தடுக்கும்.

ஒரு சிறிய அளவிலான மண் கலயத்தில் சுத்தமான மலைத்தேன் சிறிதளவு ஊற்றி, அதை உங்களின் சமையலறையில் வைப்பதால் ஜாதகத்தில் ஏற்படுகின்ற கேது கிரகம் தொடர்பான எத்தகைய தோஷங்களும் உங்களை பாதிக்காது என தாந்திரீக சாஸ்திர நிபுணர்கள் கூறுகின்றனர். தங்கத்தால் செய்யப்பட்ட ஏதேனும் ஒரு நகையை உங்களின் உடலில் அணிந்து கொள்வதாலும் கேது கிரகத்தின் பாதகமான தாக்கங்களை அந்த தங்கம் கட்டுப்படுத்த எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: களத்திர தோஷ பரிகாரம்

வைடூரிய கல் என்பது கேது கிரகத்தின் அம்சம் கொண்ட ஒரு நவரத்தின கல் ஆகும். இந்த வைடூரிய கல்லை ஒரு கேரட் அளவிற்கு மேலாக வாங்கி, அதை தங்கம் அல்லது வெள்ளியில் பதித்து உங்களின் இடது கை மோதிர விரலில் அணிந்து கொள்வதாலும் கேது கிரக தோஷங்கள் நீங்கி, உங்களுக்கு வாழ்வில் விரும்பிய பலன்கள் கிடைக்கச் செய்யும்.

- Advertisement -