வராஹி அம்மனுக்கு இந்த தீபம் ஏற்றி, கோரிக்கை வைத்து, உங்கள் விருப்பத்தை கேட்டால் போதும். நீங்கள் எதைக் கேட்கிறீர்களோ அது உடனே நடந்து விடும்

varahi
- Advertisement -

எதிரிகளை தூள்தூளாக உடைத்தெறிபவள் வராகியம்மன். எவர் ஒருவர் மற்றவருக்கு தீமை செய்கின்றாரோ அவர் இருந்த இடம் தெரியாமல் சுக்குநூறாக மாற்றி விடுவாள். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் எதிரிகள் இல்லாமல் இருப்பதில்லை. எதிர்பாராத சூழ்நிலையில் நாம் நன்றாக பழகுபவர் கூட நமக்கு எதிரியாக மாறி விடுகிறார்கள். அதேபோல என்னதான் நட்பாக பழகினாலும் பிரச்சனை என்று வரும் பொழுது நம்மை விட்டு விலகிச் செல்பவர்கள் தான் அதிகம். அதிலும் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்று கூட அவர்கள் யோசிக்காமல் எனக்கு இப்பொழுதே இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்பார்கள். இப்படி பிரச்சனையை சமாளிக்க முடியாமலும், கேட்பவர்கள் மீது கோபப்படாமலும் அந்த சூழ்நிலையை எப்படி சரி செய்ய வேண்டும் என்று நாம் குழம்பிப் போய் நிற்போம். இப்படிப்பட்ட நேரங்களில் நமது மனதை ஒருமுகப்படுத்தி, சிறிது நேரம் எடுத்து வராகி அம்மனை நினைத்து, இந்த தீபத்தை ஏற்றி வர நீங்கள் நினைத்ததும், உங்களை வதைத்துக் கொண்டிருக்கும் பிரச்சனையும் உடனே தீர்ந்து விடும். வாருங்கள் இந்த தீபத்தை ஏற்றி வராஹி அம்மனை எப்படி வழிபட வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

அன்று ஒரு காலத்தில் ராவணன் சீதையை கடத்திச் சென்று இலங்கையில் வைத்திருந்த பொழுது, அங்கு ஒரு சோலைவனம் இருந்தது. அந்த சோலை வனத்தில் தான் சீதா தேவி வெகு நாட்கள் இருந்தார். அப்போது அவருடன் பேசுவதற்கும், பழகுவதற்கும் யாரும் கிடையாது. அந்த சோலையில் இருந்த செடிகளும், மரங்களுடனும் தான் சீதா தேவி பேசிக்கொண்டிருப்பார்.

- Advertisement -

இப்படி அவர் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்த ஒரு தாவரம் மருதாணி செடி ஆகும். இந்த மருதாணி செடியுடன் சீதா பேசும் பழுது அதற்க்கு பதில் சொல்வது போல எப்பொழுதும் இந்த மருதாணி செடியும் தலையசைத்து கொண்டிருக்கும். இதனாலேயே சீதா தேவி அங்கிருந்து வருவதற்கு முன்னர் அந்த மருதாணி செடிக்கு ஒரு வரம் கொடுத்தார்.

என் தனிமையை போக்கிய மருதாணி செடியே, உன்னையும் உனது விதை, இலை, என்று எதனை வேண்டுமானாலும் வைத்து, எவர் ஒருவர் மனமுருக பூஜை செய்கிறாரோ அவருக்கு அவர்கள் வேண்டிய வரம் அனைத்தையும் நான் கொடுத்திடுவேன். என்று மருதாணி செடிக்கு ஒரு வரம் கொடுத்து சென்றார். எப்படி லட்சுமி தேவிக்கு துளசி இலை உகந்ததோ, அதுபோல வராகி அம்மனுக்கு மருதாணி இலை மிகவும் உகந்ததாகும்.

- Advertisement -

எனவே எப்பொழுதும் போல பூஜைக்கு தேவையான அனைத்து வித வேலைகளையும் செய்துவிட்டு, ஒரு தாம்பூலத்தட்டிற்க்கு மஞ்சள், குங்கும பொட்டு வைக்க வேண்டும். பின்னர் அதன் மீது ஒரு கைப்பிடி அளவு மருதாணி இலைகளை தூவி கொள்ள வேண்டும். பின்னர் அதற்கு மேல் ஐந்து கிராம்பு மற்றும் 5 ஏலக்காய் சேர்த்து கலந்து விட வேண்டும்.

பிறகு அதன் மீது ஒரு அகல் விளக்கை வைத்து, நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். பிறகு அதில் திரி போட்டு தீபம் ஏற்றி வராகி அம்மனிடம் உங்களுக்கு என்ன வரம் வேண்டுமோ, அதனை மனதார நினைத்து வேண்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு மாதத்திற்கு ஒருமுறை செய்துவர நீங்கள் இனிமேல் நடக்கவே நடக்காது என்று நினைத்த காரியம் கூட விரைவாக நடந்து விடும்.

- Advertisement -