கெட்ட சக்திகள் உங்கள் வீட்டு நில வாசல்படியை நெருங்கவே நடுநடுங்கும். கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்திகளை பஸ்பமாக்க, வீட்டில் நன்மைகள் மட்டுமே நடக்க, இத மட்டும் செஞ்சு பாருங்க!

நம்மைச் சுற்றி நடக்கக்கூடிய நல்லதுக்கு, நம்மை சுற்றி இருக்கக் கூடிய நல்ல சக்திகள் காரணமாக இருக்கும். இதுவே நம்மை சுற்றி நடக்க கூடிய கெடு பலன்களை கொடுக்கக்கூடிய செயல்களுக்கு, கட்டாயம் கண்ணுக்கு தெரியாத கெட்ட சக்திகள் தான் காரணம். நன்மை உண்டு என்றால், தீமையும் உண்டு என்றுதானே அர்த்தம். அந்த வரிசையில் நம்மை சுற்றி நல்லதே நடக்க வேண்டும், நமக்கு கெடு பலன்களை தரக்கூடிய கண்ணுக்குத் தெரியாத தீய சக்திகள், நம்மையும் நம் வீட்டில் உள்ள உறுப்பினர்களையும் தாக்கக் கூடாது என்றால், நம் நில வாசப்படியில் பாதுகாப்பிற்காக என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

nila-vasal

மாந்திரீக முறை, தாந்திரிக முறை இவை எல்லாவற்றையும் தாண்டி தெய்வசக்தி நிறைந்த பொருட்கள் என்று சில இருக்கின்றது. இந்த பொருட்களுக்கெல்லாம் கெட்ட சக்திகளை, தன் பக்கத்தில் கூட நெருங்க விடாத அளவிற்கு சக்தி இருக்கும். அந்த பொருட்களை நில வாசப்படியில், முறைப்படி வைத்து விட்டாலே போதும். நம் வீடு பாதுகாப்பு வட்டத்திற்குள் வந்துவிடும்.

சரி, கெட்ட சக்திகள் நம்மைத் தாக்காமல் இருக்க, கண்திருஷ்டி ஆக இருந்தாலும் சரி, பில்லி சூனியம் போன்ற செய்வினைகளாக இருந்தாலும் சரி, நமக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது. என்ன செய்வது? நாட்டு மருந்து கடைக்கு சென்று கொப்பரை தேங்காய், கருங்காலி குச்சி, வன்னி மர குச்சி, படிகாரம், எலுமிச்சம் பழம், இவைகளை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். அடுத்தபடியாக பச்சை நிற காட்டன் புது ரவிக்கைத்துணி, சிவப்பு நிற நூல், கருப்பு நிற நூல் கட்டுவதற்காக தேவைப்படும்.

இந்த முடிச்சை ஞாயிற்றுக்கிழமை அன்று தயாரிப்பது நன்மை தரும். பச்சை நிற துணியை விரித்து விட்டு, முதலில் கருங்காலி குச்சியையும், வன்னிமரத்து குச்சியையும் வைத்துவிடுங்கள். அதன்மேல் தேங்காய் வைத்து, கருப்பு நிற நூலால் சுற்றி, ஒரு முடிச்சுப் போட்டுக் கொள்ளுங்கள். துணியில் முடிச்சுப்போட்டிருக்கும், கொப்பரை தேங்காய்க்கு மேலாக, ஒரு படிகாரத்தை வைக்க வேண்டும். இப்போது அந்த படிகாரத்தை வைத்து மீதமுள்ள துணியை, கருப்பு நிற நூலிலேயே முடிச்சுப் போட்டுக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக ஒரே ஒரு எலுமிச்சை பழம். மூன்றாவது அடுக்கில் எலுமிச்சை பழத்தை வைத்து சிவப்பு நிற நூலால் கட்டி முடிச்சுப் போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

கீழே பெரிய உருண்டையாக கொப்பரை தேங்காய் இருக்கும். மேலே அதைவிட சிறிய உருண்டையாக படிகாரம் இருக்கும். அதற்கு சிறிய உருண்டையாக எலுமிச்சை பழம் இருக்கும். மூன்று வட்ட வடிவில் முடிச்சு போட்ட மூட்டையை, தயார் செய்து விட்டீர்கள். கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த முடிச்சை நீங்கள் தயார் செய்யும் போது குறிப்பாக இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். அப்போதுதான் இந்த பொருட்களுக்கு கெடுதலை தவிர்க்கக்கூடிய சக்தி அதிகமாகும். உங்களுக்கான அந்த மந்திரம் இதோ!

ganapathi

ருண ரோக சத்ரு நிவாரண
அனுக்ரஹ கணபதயே
வரவரத சர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா!

vasal-kathavu

இவ்வளவு தாங்க! முடிச்சு போட்டு முடிப்பதற்குள் 11 முறை மந்திரத்தை சொன்னால் கூட போதும். கணபதியை நினைத்து கட்டக்கூடிய முடிச்சு தான் இது. இதை நினைத்து பயப்பட வேண்டாம். வீட்டில் உள்ளவர்களே இந்த முடிச்சை தயார் செய்து ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களுடைய வீட்டின் நில வாசப்படிக்கு மேல் பகுதியில் ஒரு ஆணியை அடித்து அதில் மாற்றிவிடுங்கள்.

நில வாசப்படி மரத்தில் ஆணி அடிக்க கூடாது சுவற்றில் ஆணி அடித்து மாற்றவேண்டும். தேவையற்ற பயம் இனி இருக்காது. வீடு சுபிட்சம் அடையும். கண்திருஷ்டி உங்களை ஒன்றும் செய்யாது. அடுத்தவர்களின் பொறாமை பார்வை உங்களை எதுவும் செய்யாது. இதையும் தாண்டி உங்களுக்கு கெடுதல் நினைக்க வேண்டும் என்று யாராவது செய்வினை வைத்தால் கூட அதை தடுக்கக்கூடிய சக்தி இந்த மூட்டைக்கு உண்டு.

praying-god1

ஆனால் தினம் தோறும் பூஜை அறையில் தீபம் ஏற்றி தீபாராதனை காட்டும்போது, அந்த தூபத்தை இந்த முட்டைக்கும் காட்டி வழிபட வேண்டும். ஊதுவத்தி காட்டி வணங்கி கோங்க போதும். அப்போதுதான் மூட்டைக்குள் உள்ள பொருட்களுக்கு சக்தி நிலைத்திருக்கும். வருடத்திற்கு ஒருமுறை இந்த மூட்டையில் இருக்கும் பொருட்களை மாற்றிக் கொள்ளலாம். நம்பிக்கையோடு நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் செய்தால் கைமேல் பலனை அடைய முடியும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
பர்ஸ், பணம் வைக்கும் இடத்தில் இந்த 5 ரூபாய் மட்டும் வைத்தால் கோடீஸ்வர யோகம் உண்டாகும் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.