இதையும் தெரிந்து கொண்டால் சமையல் சுலபமாகுமே! பயனுள்ள சமையல் குறிப்புகள் 10 உங்களுக்காக!

kitchen-baby-pot
- Advertisement -

சமையல் கலையில் சிறு சிறு விஷயங்களை தெரிந்து கொண்டால் நாமும் வல்லவர்கள் ஆகிவிடலாம். சமையல் குறிப்பு மற்றும் வீட்டு குறிப்புகளை கொஞ்சம் தெரிந்து வைத்தால் கூட நம்முடைய வேலைகள் மிகவும் சுலபமாகி விடும். அவசர அவசரமாக செல்லும் வேளையில் இந்த குறிப்புகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சமையலை வீணாக்கினால் பாவம் எல்லாம் வந்து சேருமாம்! சமையலை வீணாகாமல் எப்படிச் சமைப்பது? உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் வீட்டு குறிப்புகள் 10! இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

cooking'

குறிப்பு 1:
நீங்கள் தேங்காய் உடைக்கும் பொழுது அந்த தண்ணீரை கீழே ஊற்றி இனியும் வீணடிக்க வேண்டாம். தேங்காய் தண்ணீரை எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ரசம் வைக்கும் பொழுது அதனுடன் சேர்த்தால் ரசம் அலாதியான சுவையுடன் வித்தியாசமாக இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 2:
சமையலறையில் சமைக்கும் பொழுது உங்களுடைய ஆடையில் படும் எந்த வகையான கரையும் எளிதாக நீங்க கொஞ்சம் அந்த இடத்தில் வினிகர் சேர்த்துக் கசக்கினால் போதும். கறை இருந்த இடம் தெரியாமல் மாயமாய் மறைந்துவிடும்.

jeeragam

குறிப்பு 3:
எப்பொழுதும் வீட்டில் சீரகத்தை வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். கொதித்து ஆற வைத்த தண்ணீரில் கொஞ்சம் சீரகப் பொடியை சேர்த்து இரவு முழுவதும் ஊறவிட்டு பின்னர் காலையில் அந்த தண்ணீரை குடித்தால் உடலில் இருக்கும் கழிவுகள் நீங்கி உடல் சுத்தம் அடையும். மேலும் ரத்தக் கொதிப்பு சீராகும். உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புகள் கரைந்து உடல் இளையும்.

- Advertisement -

குறிப்பு 4:
மண் பாத்திரத்தில் சமைக்கும் உணவு ஆனது உடலுக்கு வலிமை சேர்க்கும். மண்பாத்திரம் புதிதாக வாங்கும் பொழுது அதில் உட்புறத்தில் கொஞ்சம் எண்ணெய் தடவி அடுப்பை பற்ற வைத்து சிறிது நேரம் சூடேற்றிய பின் கழுவினால் அதில் எந்தவிதமான மண் வாசனையும் வராது, பானையில் விரிசலும் விடாது.

man-panai-pot

குறிப்பு 5:
நீங்கள் தக்காளி கொண்டு சட்னி செய்யும் போது அதில் கொஞ்சம் எள்ளை வறுத்து பொடித்து சேர்த்தால் சட்னியின் ருசி அதிகரிக்கும். அதேபோல் தக்காளி ஜூஸ் செய்யும் பொழுது அதில் கொஞ்சம் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் அலாதியான சுவையில் இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 6:
நீங்கள் அப்பளம் பொரித்து அது மீதம் ஆகிவிட்டால் வீணாக தூக்கி எறிய வேண்டாம். ஒரு பாலிதீன் கவரில் இருக்கமாக கட்டி ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் போதும், அதன் மொறு மொறுப்பு தன்மை மாறாமல் ஒரு வாரம் வரை அப்படியே இருக்கும்.

adai

குறிப்பு 7:
அடைக்கு மாவு அரைக்கும் பொழுது அரிசி பருப்புடன் சேர்த்து உருளைக் கிழங்கை வேக வைத்து சேர்த்தால் அடையின் ருசி அதிகரிக்கும்.

குறிப்பு 8:
பிறந்த குழந்தைக்கு வைட்டமின் டி எளிதாக கிடைக்க காலை இளம் வெயில் மற்றும் மாலை இளம் வெயில் வரும் சமயங்களில் 10 நிமிடம் படுக்க வைத்து எடுத்தால் போதும். அதே போல வெயில் காலங்களில் வறட்சியை தணிக்கை அவ்வப் போது தண்ணீரை குடித்து வர வேண்டும் இதனால் சிறுநீரகம், மலக்குடல், சரும வறட்சி போன்ற பிரச்சனைகள் தீரும்.

rasa-karpooram

குறிப்பு 9:
பீரோவில் மட்டுமல்லாமல் கை கழுவும் வாஷ் பேசின் மற்றும் பாத்திரம் கழுவும் சிங் ஆகிய இடங்களில் 2, 3 ரச கற்பூரத்தை போட்டு வைத்தால் பூச்சி, புழுக்கள் அதிலிருந்து நுழையாமல் இருக்கும் மேலும் வாசனையுடனும் எப்போதும் அந்த இடம் இருக்கும்.

குறிப்பு 10:
நீங்கள் ஆப்பம் சுடும் ஆப்பச் சட்டியில் அல்லது பணியாரம் சுடும் பணியார சட்டி என்று கூட எடுத்துக் கொள்ளலாம். அதில் சமைத்து முடித்த பின்னர் சிறிதளவு எண்ணெயை தடவி வைத்து விடுங்கள், அடிக்கடி எண்ணை தடவி வந்தால் அதில் பணியாரம் சுடுவதற்கு ஏதுவாக இருக்கும்.

- Advertisement -