இந்த கொளுத்துற வெயில்ல உடம்பை குளுகுளுன்னு வச்சுக்க அட்டகாசமான இந்த இயற்கையான ரெசிபிகளை ரொம்ப சுலபமா எப்படி செய்றதுன்னு தெரிஞ்சிக்கங்க. இனி வெய்யிலை நினைச்சு பயப்படவே வேண்டாம்.

nungu putting
- Advertisement -

வெயில் காலத்தில் நம் உடலில் இருந்து அதிக அளவு நீர்ச்சத்து வெளியேறும். அந்த நீர்ச்சத்தின் அளவு குறையாமல் பார்த்துக் கொள்வது மிக மிக முக்கியம். அதற்காகத் தான் இந்த காலத்தில் உடலை அதிக குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளக் கூடிய உணவுகளை நாம் எடுத்துக் கொள்வோம். அந்த வகையில் இயற்கையாகவே உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடியவைகளை வைத்து சுலபமான இந்த ரெசிபிகளை எப்படி தயாரிப்பது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

இதில் முதலில் இளநீரை வைத்து தயாரிக்கப்படும் டெண்டர் கோகனட் புட்டிங் எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்வோம். இதற்கு ஒரு முழு இளநீரை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் இளநீரை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வழுக்கையை தனியாக எடுத்து அதை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இளநீர் 11/2 கப்பளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் கடல் பாசி பவுடர் (இந்த கடல்பாசி டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் கிடைக்கும் இதை வாங்கி நாம் வீட்டில் மிக்ஸி ஜாரில் அரைத்து பவுடர் செய்து வைத்துக் கொள்ளலாம்) ஒரு டீஸ்பூன், 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை, மூன்றையும் சேர்த்து லேசாக சூடு படுத்துங்கள். இது அதிகம் கொதிக்க வேண்டாம் கடல்பாசியும் சர்க்கரையும் கரைந்தால் போதும்.

இளநீரில் கடல்பாசியின் சர்க்கரையும் கரைந்த பிறகு இறக்கி வைத்து விடுங்கள். இப்போது கேக் பேனை தண்ணீரில் அலசி பிறகு பேன் ஈரத்துடன் இருக்கும் போதே, அதில் நாம் ஏற்கனவே நறுக்கி வைத்து இளநீர் துண்டுகளை போட்ட பிறகு, காய்ச்சிய இளநீரை அதில் வடிகட்டி ஊற்றி வைத்து விடுங்கள்.

- Advertisement -

இது நன்றாக ஆறிய பிறகு ஃப்ரீசரில் வைத்து விடுங்கள். ஒரு மணி நேரம் கழித்து ஃப்ரீசரில் இருந்து எடுத்து லேசாக ஓரங்களில் கரண்டி வைத்து எடுத்து விட்டால், அருமையான இளநீர் புட்டிங் தயார். வெயில் காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் சாப்பிடக் கூடிய ஒரு அருமையான ரெசிபி.

அடுத்து கோடைக்கு ஏற்ற ஒரு அருமையான அருமருந்தாக இருக்கக் கூடிய நுங்கை வைத்து தான் செய்யப் போகிறோம். இதற்கு ஒரு கப்பில் இரண்டு ஸ்பூன் நறுக்கிய நுங்கு துண்டுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். அதே போல் இரண்டு ஸ்பூன் நறுக்கிய மாம்பழ துண்டுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் பதநீர் கலந்து குடித்துப் பாருங்கள். கோடை காலத்தில் உண்டாகும் அனைத்து வியாதிகளும் உங்கள் அருகில் கூட வராது. அந்த அளவிற்கு உடலை குளிர்ச்சியாக வைக்க கூடிய பானம்.

- Advertisement -

இதுவும் நல்ல ஒரு இயற்கையான அதே நேரத்தில் உடலுக்கு குளிர்ச்சியை தரக் கூடியது தான். இதற்கு முதலில் இரண்டு கப் அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் கடல் பாசி, நாலு டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடுங்கள். இவை இரண்டும் தண்ணீரில் கரைந்த பிறகு 2 டேபிள் ஸ்பூன் நன்னாரி சிரப் சேர்த்துக் கொள்ளுங்கள். இவையெல்லாம் கலந்த உடனே அடுப்பில் இருந்து இறக்கி விடுங்கள். கொதிக்க தேவையில்லை.

இப்போது கேக் பேனில் உங்களுக்கு விருப்பமான பழங்களை நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அல்லது இரண்டு மூன்று வகையான பழங்களை கூட சின்ன சின்னதாக நறுக்கி சேர்த்த பிறகு இறக்கி வைத்த இந்த சிரப்பை இதில் ஊற்றி நன்றாக ஆறிய பிறகு இதையும் ஃப்ரீசரில் வைத்து அரை மணி நேரம் கழித்து எடுத்து பாருங்கள் ஒரு அருமையான புட்டிங் தயார்.

இதையும் படிக்கலாமே: 2 தக்காளி இருந்தா ரொம்பவே வித்தியாசமான இந்த சட்னி செஞ்சு பாருங்க. அஞ்சே நிமிஷத்துல செஞ்சாலும் அஞ்சி நாள் வெச்சி சாப்பிடலாம் அவ்வளவு டேஸ்டா இருக்கும்.

இந்தக் கோடை காலத்தில் இது போன்ற இயற்கை உணவுகளை குழந்தைகளுக்கு நாம் செய்து கொடுக்கும் போது இந்த வெப்பத்தின் தாக்கத்தால் அவர்களுக்கு உடலில் பெருமாளவு தொந்தரவு ஏதும் இல்லாததோடு, அவர்கள் விரும்பி சாப்பிடும் ஒரு உணவை செய்து கொடுத்தது போலவும் இருக்கும்.

- Advertisement -