2 தக்காளி இருந்தா ரொம்பவே வித்தியாசமான இந்த சட்னி செஞ்சு பாருங்க. அஞ்சே நிமிஷத்துல செஞ்சாலும் அஞ்சி நாள் வெச்சி சாப்பிடலாம் அவ்வளவு டேஸ்டா இருக்கும்.

- Advertisement -

இந்த சட்னியை பொறுத்த வரையில் எத்தனையோ வகைகள் உண்டு. அதன் வகைகளை பட்டியல் போட்டால் இந்த ஒரு பதிவு போதாது. இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவிலும் ரொம்பவே வித்தியாசமான முறையில் ஒரு சட்னியை எப்படி செய்வது என்பதை பற்றி தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள்

பூண்டு – 5 பல், பச்சை மிளகாய் – 5, பெரிய தக்காளி – 2, முந்திரி – 5, கொத்தமல்லி -1 கைப்பிடி, தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், புளி – சின்ன கொட்டைப்பாக்கு அளவு, எண்ணெய் – 1டேபிள் ஸ்பூன், கடுகு -1/2 ஸ்பூன், கடலைப் பருப்பு -1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு -1 ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கருவேப்பிலை ஒரு கொத்து, உப்பு – 1/2 டீஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

இந்த சட்னி செய்வதற்கு அடுப்பில் கடாய் வைத்து சூடானவுடன், ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். அதன் பிறகு பூண்டு, பச்சை மிளகாய் இரண்டையும் சேர்த்து பச்சை மிளகாயை நிறம் மாறும் வரை வதக்க வேண்டும். அதன் பிறகு தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்து முந்திரி, தேங்காய் துருவல், புளி என அனைத்தையும் சேர்த்து தக்காளி குழைந்து வரும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு கொத்தமல்லியும் சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும்.

அதன் பிறகு வதக்கியவற்றையெல்லாம் நன்றாக ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து கால் கப் தண்ணீருடன் உப்பையும் சேர்த்து நல்ல பைன் பேஸ்ட்டாக அரைத்து ஒரு பவுலில் மாற்றி ஊற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பில் தாளிப்பு கரண்டி வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு பொரிந்தவுடன், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து சிவந்து வந்த பிறகு, காய்ந்த மிளகாய் கருவேப்பிலை சேர்த்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு தாளிப்பை சட்னியில் ஊற்றி விட்டால் கமகம வாசனையோடு அருமையான கொத்தமல்லி சட்னி ரொம்பவே வித்தியாசமான சுவையில் தயார்.

இதையும் படிக்கலாமே: இல்லத்தரசிகளுக்கு தேவையான 10 அட்டகாசமான சமையல் குறிப்புகள்! இது தெரிஞ்சா இனி உங்களை கையிலேயே பிடிக்க முடியாதே!

இந்த சட்னி எப்போதும் அரைப்பது போல இல்லாமல் ரொம்பவே வித்தியாசமான சுவையில் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். கொத்தமல்லியை தனியாக சட்டினி, துவையல் என அரைத்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். இது போல சுவையாக செய்து கொடுக்கும் போது அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த ரெசிபி உங்களுக்கு பிடிச்சிருந்தா கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -