கொடுமுடி திருமண பரிகாரம்

kodumudi marriage pariharam in tamil
- Advertisement -

தற்காலத்தில் பலருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்பது உரிய காலத்தில் திருமணம் நடைபெறாமல் இருப்பது தான். பொதுவாக ஒருவரின் ஜாதகத்தில் ராகு – கேது ஆகிய கிரகங்கள் பாதகமான அமைப்பில் இருந்தால், அவர்களுக்கு திருமணம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். திருமண தாமத தோஷம் நீங்குவதற்குரிய மிக சிறந்த பரிகாரத் தலமாக திகழ்வது ஈரோடு மாவட்டத்தில் காவிரி நதிக்கரையோரம் அமைந்திருக்கும் கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வரர் – திரிபுரசுந்தரி சமேத திருக்கோயிலாகும். இக்கோயிலில் செய்யப்படும் பிரசித்தி பெற்ற கொடுமுடி திருமண பரிகாரம் குறித்து இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

கொடுமுடி திருமண பரிகார நடைமுறை

கொடுமுடி கோயிலில் திருமணத்திற்காக பரிகாரம் செய்து கொள்ள விரும்புபவர்கள் கோயிலுக்கு செல்லும் பொழுது கட்டாயம் தங்களின் ஜாதகத்தையும் கொண்டு செல்ல வேண்டும். கோயிலில் தங்களின் ஜாதக தோஷங்கள் நீங்க, ஜாதகம் அவசியம் என்பதால் மறவாமல் ஜாதகத்தை கொண்டு செல்வது நல்லது. அதேபோன்று கோயிலில் பரிகார பூஜை செய்கின்ற வேதியருக்கு வழங்குவதற்கான தட்சிணை தொகையையும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

கொடுமுடி கோயிலில் திருமணத்திற்காக பரிகாரம் செய்ய நினைப்பவர்கள், கோயில் அலுவலகத்தில் பூஜைக்கான முன்பணம் செலுத்தி பூஜை ரசிது வாங்கிக் கொண்ட பிறகு, கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருக்கின்ற வேதியர் சொல்லும் இடத்திற்கு சரியாக காலை 6 மணிக்கு உணவு ஏதும் உண்ணாமல் உடுத்தியிருக்கின்ற பழைய ஆடையுடன் வந்து சேர வேண்டும்.

இப்பொழுது கொடுமுடி கோயில் அருகே ஓடுகின்ற காவிரி ஆற்றிற்கு சென்று, அந்த நதியில் 3 முறை தலைமுழுகி எழுந்திருக்க வேண்டும். பிறகு முதற்கட்ட பூஜைக்காக அங்கு கொடுக்கப்படும் கலசத்தில் தாங்களே அந்த நதிநீரை முழுவதுமாக நிரப்பிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு அந்த ஆற்றங்கரை ஓரத்திலே அரச மரத்திற்கடியில் இருக்கின்ற இரண்டு விநாயகப் பெருமான்களின் திரு விக்கிரகங்களுக்கு மலர் மாலைகள் சாற்ற வேண்டும். இந்த மலர் மாலைகள் விநாயகர் பெருமான் சந்நிதி அருகிலேயே விற்கப்படுகின்றது. பிறகு ஆற்றில் இருந்து தாங்கள் கலசத்தில் கொண்டு வந்த நீரை ஒரு விநாயகருக்கு 3 கலசங்கள் தண்ணீர் என பிரித்து, இரண்டு விநாயகர்களுக்கும், விக்கிரகங்களுக்கும் ஜலாபிஷேகம் செய்ய வேண்டும். விநாயகர் வீற்றிருக்கிருக்கின்ற மரத்தையும் மூன்று முறை வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும்.

இரண்டு விநாயகர் பெருமான்களையும் வழிபட்டு முடித்ததும், கொடுமுடி கோயிலுக்குள் நுழைந்து அங்கிருக்கிற வன்னி மரத்தடியில் உள்ள பிரம்மதேவர் சன்னிதியில், பிரம்ம தேவரை வழிபாடு செய்ய வேண்டும். அந்த வன்னி மரத்தையும் மூன்று முறை வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

இதன் பிறகு உங்கள் ஜாதக தோஷங்களை போக்க கோயிலில் பூஜை செய்வதற்கான இடம் கொடுக்கப்பட்டிருக்கும். அங்கு உங்களுக்கான தோஷ நிவர்த்தி பூஜை செய்கின்ற வேதியருடன் சென்று, அவரின் அறிவுறுத்தல் படி, முறைப்படி பூஜை சடங்குகளை செய்ய வேண்டும். பொதுவாக இந்த பூஜை என்பது சுமார் ஒரு மணி நேரம் வரை நீடிக்கும் என கூறப்படுகின்றது.

உங்களுக்கான திருமண தோஷ நிவர்த்தி பூஜை செய்து முடித்த பிறகு, அந்த வேதியர் உங்களின் மீது புனித தீர்த்தத்தை தெளித்து, பூஜையை நிறைவு செய்வார். அதன் பிறகு உங்கள் திருமணம் தோஷம் நீங்க அந்த பூஜையில் ராகு – கேது கிரகங்களின் தோஷங்கள் நீங்க பயன்படுத்தப்பட்ட மாவினை எடுத்துக்கொண்டு மீண்டும் கோயில் அருகே இருக்கின்ற நதிக்கரைக்கு சென்று, அங்கு அந்த மாவை தண்ணீரில் விட்டு கரைத்து மீண்டும் நதியில் ஒருமுறை மட்டும் தலை முழுகி எழ வேண்டும்.

இப்போது தங்கள் உடுத்தி இருக்கின்ற அந்த பழைய ஆடைகளை அந்த நதிக்கரை ஓரத்திலே விட்டுவிட்டு, புத்தம் புது ஆடைகளை அணிந்து, மீண்டும் கோயிலுக்குள்ளே சென்று சிவபெருமான் – அம்பாள் மற்றும் பெருமாள் – தாயார் ஆகிய தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: சனி தோஷம் பரிகாரம்

மேற்சொன்ன படி கொடுமுடி திருமண பரிகாரம் செய்து முடித்த பிறகு தாங்கள் காலை உணவு அல்லது மதிய உணவு உட்கொள்ளலாம். இந்த பரிகாரத்தை செய்து முடித்த பிறகு தங்களின் இல்லத்திற்கு மட்டுமே செல்ல வேண்டும். எக்காரணம் கொண்டும் பரிகாரம் முடித்த கையோடு முதலில் மற்றவர்களின் வீடுகளுக்கு செல்லக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

- Advertisement -