சனி தோஷம் நீங்க பரிகாரம்

sani thosam pariharam in tamil
- Advertisement -

சனி பகவான் ஆயுள் காரகன் எனவும், நீதி தேவன் எனவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஒருவர் ஜாதகத்தில் சுப கிரகங்கள் கெட்டுப் போய் இருந்தாலும், பாவ கிரகமான சனி பகவான் நல்ல நிலையில் இருக்கும் பட்சத்தில் சுப கிரகங்கள் கொடுக்காத நற்பலன்களை கூட சனிபகவான் வாரி வழங்குவார். அந்த வகையில் நமது ஜாதகத்தில் சனிபகவான் பாதகமான நிலையில் இருந்தாலும், அந்த சனி பகவானால் நமக்கு தோஷம் ஏற்படாமல் தடுக்கக்கூடிய சனி தோஷம் பரிகாரங்கள் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

சனி தோஷம் பரிகாரம்

ஜாதகத்தில் சனி தோஷம் இருந்து, அதனால் வாழ்வில் மிகுந்த துன்பங்கள் அனுபவிப்பவர்கள், ஏதேனும் ஒரு சனிக்கிழமை தினத்தன்று திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு சென்று வெங்கடாசலபதி பெருமாளை தரிசனம் செய்து வழிபாடு செய்ய வேண்டும். திருப்பதி வெங்கடாசலபதி நவகிரகங்களில் சனி பகவானின் அம்சம் கொண்டவராக தாந்திரீக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

- Advertisement -

எனவே நேரமும், வசதியும் இருப்பவர்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறையோ, ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ திருப்பதி சென்று பெருமாளை வழிபாடு செய்வது நல்லது. அடிக்கடி திருப்பதி சென்று வெங்கடாசலபதியை தரிசனம் செய்ய முடியாதவர்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது கட்டாயம் திருப்பதி ஏழுமலையானை வழிபாடு செய்வதால் ஜாதகத்தில் இருக்கின்ற சனி பகவானின் தாக்கம் குறைந்து வாழ்வில் நன்மைகள் ஏற்படும்.

தங்களுக்கு இருக்கின்ற சனி தோஷம் நீங்கவும், சனி தோஷம் ஏற்பட்டாலும் அதிக பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கவும், ஜாதகர்கள் எக்காரணம் கொண்டும் சனிக்கிழமைகளில் புலால் உணவுகளை உண்ணக்கூடாது. அதை மீறி உண்ணும் பட்சத்தில் நவகிரகங்களில் சனிபகவானின் சாபம் ஏற்பட்டு வாழ்வில் பாதகமான பலன்கள் ஏற்படும்.

- Advertisement -

சனிக்கிழமைகள் தோறும் அனுமன் கோயிலுக்கோ அல்லது சன்னதிக்கோ சென்று அனுமன் சாலிசா துதிக்க வேண்டும். கோயிலில் வழிபாடு செய்து முடித்த பிறகு கோயிலுக்கு வெளியே இருக்கின்ற யாசகர்களுக்கு தங்கள் சக்திக்கு இயன்றளவில் அன்னதானம் செய்வது சனி கிரக தோஷ பாதிப்புக்கு சிறந்த நிவர்த்தி பரிகாரமாகிறது.

ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் காலை எழுந்து தலைக்கு ஊற்றி, குளித்து முடித்து விட்ட பிறகு உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே அமர்ந்து ராமாயணத்தின் சுந்தர காண்டம் பகுதியை படிக்க வேண்டும். மேலும் சனி கவச மந்திரத்தையும் துதிக்க வேண்டும். இவை இரண்டுமே சனி கிரக தோஷத்திற்கு எளிமையான பரிகாரமாக உள்ளன.

- Advertisement -

சனி பகவான் தோஷம் நமக்கு ஏற்படாமல் இருக்கவும், பொருளாதார நெருக்கடிகள் இல்லாமல் தவிர்க்கவும் எக்காரணம் கொண்டும் சனிக்கிழமைகளில் புத்தம் புதிய இரும்பு பொருட்களை வாங்கி வீட்டில் வைக்கக் கூடாது. அதேபோன்று சனிக்கிழமைகளில் துடைப்பம் கொண்டு வீடு முழுவதும் கூட்டிப் பெருக்குவதை அறவே தவிர்க்க வேண்டும்.

பொதுவாக வீட்டில் எந்த ஒரு அறையிலும் தேவையற்ற குப்பைகள் தேங்கியிருக்கும் வகையில் வைத்திருக்கக் கூடாது. தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், துருப்பிடித்த இரும்புப் பொருட்கள் ஆகியவற்றை அவ்வப்பொழுது அப்புறப்படுத்தி வீட்டை சனி கிரக தாக்கம் ஏற்படாதவாறு வைத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: விரைவில் திருமணம் ஆக பரிகாரம்

சனிக்கிழமை தோறும் அருகில் இருக்கின்ற அரச மரத்தின் வேர்ப்பகுதியில் ஒரு செம்பு பாத்திரத்தை கொண்டு நீர் விட்டு வருவதால் ஜாதகத்தில் சனி கிரக தோஷம் ஏற்பட்டிருந்தாலும் அதனால் கெடு பலன்கள் ஏற்படாமல் நம்மை காக்கும்.

- Advertisement -