கொழு கொழுன்னு இருக்கிறவங்க கூட, கொஞ்ச நாளிலேயே கொள்ளை அழகைப் பெற, கொள்ளு இட்லி பொடியை இப்படி அரைத்து சாப்பிடுங்க.

kollu-idli-podi
- Advertisement -

அழகா இருக்கணும். ஒல்லியாக இருக்கணும். தலை முடி கருகருன்னு இருக்கணும். உடல் ஆரோக்கியத்தில் எந்த குறைபாடும் ஏற்படக் கூடாது, என்பவர்கள் இந்த மாதிரி ஒரு இட்லி பொடியை அரைத்து வைத்துக்கொண்டு தினமும் இட்லி தோசைக்கு 1 ஸ்பூன் வைத்து தொட்டு சாப்பிட்டால் போதும். அப்படி இல்லை என்றால் சுடச்சுட சாதத்தில் இந்த இட்லி பொடியை போட்டு 1 ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டாலும் உடலுக்கு ஆரோக்கியம் தான். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கொள்ளு இட்லி பொடியை சுலபமாக எப்படி அரைப்பது ரெசிபி இதோ உங்களுக்காக.

செய்முறை

இந்த பொடியை அரைக்க முதலில் தேவையான பொருட்களை பார்த்து விடுவோம். கொள்ளு 1 கப், உளுந்து 1/2 கப், எள்ளு 1/4 கப், கருவேப்பிலை 2 கைப்பிடி அளவு, வரமிளகாய் 15, உப்பு தேவையான அளவு, பெருங்காயம் 1/4 ஸ்பூன், கோலி குண்டு அளவு புளி. இதில் வெள்ளை எள்ளு, கருப்பு எள்ளு எதை வேண்டுமென்றாலும் சேர்க்கலாம். வெள்ளை உளுந்து, கருப்பு உளுந்து எதை சேர்த்து வேண்டும் என்றாலும் இந்த பொடியை அரைக்கலாம். அது நம்முடைய விருப்பம் தான்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து அது நன்றாக சூடானதும் முதலில் எடுத்து வைத்திருக்கும் கொள்ளு போட்டு நன்றாக வறுக்கவும். கொள்ளு வாசம் வரும் அளவுக்கு பொரிந்து வரும் அளவுக்கு வறுப்பட்டால் தான் பொடி நன்றாக சுவையாக இருக்கும். ஒரு கொள்ளை எடுத்து வாயில் போட்டு கடித்து சாப்பிட்டால் மென்று சாப்பிட முடிய வேண்டும். அந்த அளவுக்கு கொள்ளு வறுப்பட்டவுடன் இதை ஒரு தட்டில் மாற்றிக் கொள்ளவும்.

அதே கடாயில் அடுத்து உளுந்து போட்டு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். உளுந்து பொன்னிறமாக வறுபட்டு வந்ததும் அதில் எள்ளு கொட்டினால், அதுவும் பொரிந்து படபடவென வரும். உடனே இந்த இரண்டு பொருட்களையும் வேறொரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளுங்கள். அடுத்து அதே கடாயில் இரண்டு பெரிய அளவு கருவேப்பிலையை போட்டு மொறுமொறுப்பாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து வர மிளகாய் போட்டு அது உடையும் அளவிற்கு சூடு செய்து எடுத்துக் கொள்ளவும்.

- Advertisement -

இப்போது இந்த பொருட்கள் எல்லாம் நன்றாக ஆரட்டும். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் முதலில் வர மிளகாய், வறுத்த கருவேப்பிலை, எடுத்து வைத்திருக்கும் கோலிகுண்டு அளவு புளியை, போட்டு முதலில் அரைக்க வேண்டும். பிறகு வறுத்து வைத்திருக்கும் பொருட்களை எல்லாம் இதோடு போட்டு, பொடிக்கு தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தை போட்டு மீண்டும் மிக்ஸியை ஓட விடுங்கள். பொடி ரொம்பவும் கொரகொரப்பாகவும் அரைவிடக்கூடாது. ரொம்பவும் நைசாகவும் அரை படக்கூடாது. 90% பொடியை அரைத்து எடுக்கவும்.

இதையும் படிக்கலாமே: அரை கப் பாசிப்பருப்பு இருந்தா இப்படி மொறு மொறுன்னு கிரிஸ்ப்பியா போண்டா செஞ்சு கொடுங்க. இதை நீங்க எவ்வளவு செஞ்சாலும் பத்தாது

இந்த பொடி அரைக்கும்போதே மணக்க மணக்க நல்ல வாசத்தோடு இருக்கும். அரைத்த சூடு ஆறும் வரை தட்டில் கொட்டி ஆற வைத்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் இந்த கொள்ளு சேர்த்திருக்கும் இந்த பொடியை சாப்பிட்டு வந்தால் குண்டாக இருப்பவர்கள் உடல் எடையை குறைக்க முடியும். அதே சமயம் முடி உதிர் நிறுத்த கருவேப்பிலை இதில் சேர்க்கப்பட்டுள்ளது. எலும்புகள் வலுபெற உளுந்தும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் ஆரோக்கியம் நிறைந்த ஒரு இட்லி பொடி ரெசிபி இது. மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயம் வீட்டில் இருப்பவர்கள் இதை வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடுவார்கள்.

- Advertisement -