1 ஸ்பூன் கொள்ளு பொடியை இப்படி சாப்பிட்டு வந்தால் போதும். ஒரு வாரத்தில் உடல் எடை குறைவதை கண்கூடாக காணலாம். பக்க விளைவுகளுக்கு வாய்ப்புகள் இல்லை.

kollu
- Advertisement -

உடல் எடையை எந்த வித பக்கவிளைவுகளும் இல்லாமல் படிப்படியாக குறைப்பதற்கு ஒரு சுலபமான வழியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக நாம் சாப்பிடும் உணவு பழக்கவழக்கங்களில் திடீரென்று கட்டுப்பாட்டினை கொண்டு வந்து விட்டால், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல், உடலில் எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டு விடும். உடல் எடையை குறைக்க யாரும் உடனடியாக சாப்பாட்டு விஷயத்தில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டாம். படிப்படியாகத்தான் உடல் எடையை குறைக்க முடியுமே தவிர, சட்டென உடல் எடையை குறைப்பது நம் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒரு விஷயம்.

கொள்ளு, நாம் எல்லோருக்குமே தெரியும் கொள்ளு உடல் எடையை குறைப்பதற்காக பயன்படுத்தக்கூடிய பொருள் என்று. இந்த கொள்ளு பொடியை முறையாக எப்படிப் பயன்படுத்தினால் நம்முடைய உடல் எடையில் சீரான மாற்றத்தை கொண்டு வரமுடியும் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

ஒரு அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். அதில் 1/4 கப் அளவு கொள்ளு போட்டு மிதமான தீயில் வறுக்க வேண்டும். வறுபட்ட கொள்ளை ஒன்று எடுத்து வாயில் போட்டு கடித்து சாப்பிட்டால் அதை நம்மால் சாப்பிட முடியும் அளவிற்கு வறுத்துக் கொள்ளை வேண்டும். வருத்த இந்த கொள்ளை நன்றாக ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். இந்த பொடியோடு 6 பல் தோல் உரித்த பூண்டு போட்டு மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் ஓட்டிக் கொள்ளுங்கள்.

அவ்வளவு தான். நமக்கு தேவையான உடல் எடையை குறைக்கக்கூடிய பொடி தயார். இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் 15 நாட்கள் வரை கெட்டுப் போகாது. இதை எப்படி பயன்படுத்துவது. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 1 பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். 1 டேபிள் ஸ்பூன் அளவு கொள்ளு பொடியை கொதிக்கின்ற தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து 2 சிட்டிகை உப்பையும் சேர்த்து கொதிக்கவிடுங்கள்.

- Advertisement -

ஒரு பெரிய டம்ளர் தண்ணீர், முக்கால் டம்ளர் தண்ணீர் அளவு சுண்டி வந்தவுடன் இதை அப்படியே வடிகட்டி வெதுவெதுப்பாக இருக்கும்போது குடித்துவிட வேண்டும். வாரத்தில் 3 நாட்கள் மட்டும் தான் இதை குடிக்க வேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடித்தால் சரியாக இருக்கும். காலையில் வெறும் வயிற்றில் தான் இந்த தண்ணீரை குடிக்க வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. காலை உணவுக்கு ஒரு மணி நேரம் கழித்தும் இந்த தண்ணீரை குடிக்கலாம். மதிய உணவு சாப்பிட்டு முடித்த பின்பு ஒரு மணி நேரம் கழித்தும் இந்த தண்ணீரை நாம் குடித்துக் கொள்ளலாம்.

சீக்கிரமாக உடல் எடையைக் குறைக்க வேண்டுமென்று தினமும் இந்த தண்ணீரை குடிப்பதும் தவறு. உடல் சூட்டை அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. வாரத்தில் 3 நாட்கள் குடித்து பாருங்கள். ஒரே வாரத்தில் உங்களுடைய உடம்பு லேசானது போல உணர்வு தோன்றும். ஒரு மாதம் தொடர்ந்து, ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதை குடித்து வர நிச்சயமாக உடல் எடையில் படிப்படியாக வித்தியாசம் தெரியும். ட்ரை பண்ணி பாருங்க. உங்களுக்கு உடல் உபாதைகள் ஏதேனும் இருந்தால், தொடர்ந்து மருந்து மாத்திரை சாப்பிடுபவர்களாக இருந்தால், உடல் ஆரோக்கியத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், உங்களுடைய மருத்துவரின் ஆலோசனையுடன் இந்த பானத்தை பருகுவது நல்லது.

- Advertisement -